பிப்ரவரி; 14., மனிதநேய ஜனநாயக கட்சியின் மதுரை புறநகர் நிர்வாக ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் N.முபாரக் அலி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சி மாநில செயலாளரும், மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளருமான மு.அகமது கபீர் அவர்கள் கலந்துகொண்டு கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார். மேலும் இக்கூட்டத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் ஒத்தக்கடை S.உமர் பாரூக் அவர்கள் முன்னிலை வகித்தார், இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரை புறநகர் மாவட்ட துணை செயலாளர்கள், மஜக தொழிற்சங்க மாவட்ட செயலாளர், மஜக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர், கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #மதுரை_புறநகர்_மாவட்டம் #MJKITWING 13.02.2024.
Author: admin
மஜக தலைமையக நியமன அறிவிப்பு
மனிதநேய ஜனநாயக கட்சியின் மயிலாடுதுறை மேற்கு மாவட்ட செயலாளராக, Y.H. ஹாஜா சலீம் 146 c/2, மெயின் ரோடு, வாணாதிராஜபுரம், குத்தாலம் T.k மயிலாடுதுறை- 609806 அலைபேசி; 9486850892 தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 12.02.2024.
மஜக தலைமையக நியமன அறிவிப்பு
மனிதநேய ஜனநாயக கட்சியின் மயிலாடுதுறை கிழக்கு மாவட்ட செயலாளராக, ஆக்கூர் மு.ஷாஜஹான் த/பெ;முஹம்மது ஏஹ்யா 2/174, N.J.A அமீன் நகர் மடப்புரம், ஆக்கூர்-609301 தரங்கம்பாடி-TK, மயிலாடுதுறை அலைபேசி; 9786402287 தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 12.02.2024.
ஓசூரில் மஜக இல்ல மணவிழா: மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று வாழ்த்து
பிப்ரவரி.12., மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் புதுமடம் அமீன் அவர்களின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒசூர் ஹோட்டல் ஹில்ஸ்ல் இனிதே நடைபெற்றது! மணமக்கள் S.சாலிஹ் அஸ்லம் MBA, மற்றும் S. பஹீமா அம்ரீன், B.sc, ஆகியோரை மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு. தமிமுன் அன்சாரி அவர்கள் நேரில் வந்து வாழ்த்தினார். இந்நிகழ்வில் ஓசூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ Y.பிரகாஷ், ஓசூர் மாநகராட்சியின் மேயர் சத்யா, ஓசூர் மாநகராட்சியின் துணை மேயர் ஆனந்தயா, மஜக மாநில துணை செயலாளர்கள ஓசூர் நவ்சாத், புதுக்கோட்டை துரை முகம்மது, ஓசூர் மாநகராட்சியின் பொது சுகாதாரக் குழு தலைவர் என் எஸ் மாதேஸ்வரன் அவர்களும், பி எம் நஞ்சுண்ட சாமி முன்னாள் நகர மன்ற தலைவர் அவர்களும், மஜக மாவட்ட செயலாளர் உமர் மற்றும் மஜக மாவட்ட / நகர நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #கிருஷ்ணகிரி_மேற்கு_மாவட்டம் 11.02.2024.