மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளராக, பாளை A.M. ஃபாரூக் 49/12 A, இயற்பகை நாயானார் தெரு, பாளையங்கோட்டை, திருநெல்வேலி அலைபேசி; 9443390666 தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 24.02.2024.
Author: admin
தொடரும் இணைவுகள்…. முத்துப்பேட்டையில் மஜக வில் இணைந்த இளைஞர்கள்….
பிப்.24., திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை நகரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொறுப்பாளர் காஜா அவர்களின் ஏற்பாட்டில் துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜூதீன் முன்னிலையில் முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மஜக-வில் தங்களை இணைத்துக்கொண்டனர். புதிதாக இணைந்தவர்கள் மத்தியில் மாநில துணைச் செயலாளரும், மாவட்ட மேலிட பொறுப்பாளருமான பேராவூரணி சலாம் கட்சியின் செயல்பாடுகள் குறித்து விரிவாக பேசினார். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் பொதக்குடி ஜெயினுதீன், மாவட்ட செயலாளர் புலிவலம். சேக் அப்துல்லா, மாவட்ட துணை செயலாளர்கள் நாச்சிக்குளம். ஜான், பொதக்குடி. நத்தர், மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் தாஹிர், ரபீக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தகவல். #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருவாரூர்_மாவட்டம் 23.02.2024.
#குவைத்தில்… பஞ்சாப் களத்தில் கொல்லப்பட்ட விவசாயிக்கு இரங்கல்…. MKP தமிழர் எழுச்சி மாநாட்டில் நெகிழ்ச்சி…
பிப்.23., மனிதநேய ஜனநாயக கட்சியின் வெளிநாட்டு சார்பு அமைப்பான மனிதநேய கலச்சாரப் பேரவையின் சார்பில் குவைத் தமிழர் எழுச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. அதில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் மாநாட்டு பேருரையாற்றுகிறார். பேராசிரியர் சுந்தரவள்ளி மற்றும் ஊடக தோழர் ஜீவ சகாப்தன் ஆகியோரும் இதில் பங்கேற்றுள்ளனர். மாநாட்டு நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் MKP மண்டல செயலாளர் நீடூர் நஃபிஸ் அவர்கள், பஞ்சாப் - ஹரியான எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் கொல்லப்பட்ட சுப்கரன் சிங் விவசாயிக்கு ஆதரவாக ஒரு நிமிடம் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்யுமாறும், அங்கு படுகாயமடைந்தவர்களுக்கு ஆறுதலை தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார். உடனே மாநாட்டில் பங்கேற்ற அனைத்து தமிழர்களும் எழுந்து நின்று தங்கள் இரங்கலை - அனுதாபத்தை வெளிப்படுத்தினர். இது உணர்வுப்பூர்வமாக இருந்தது. இந்த மாநாட்டு அரங்கின் நுழைவாயிலுக்கு முதுபெரும் இடதுசாரி தலைவரும், தமிழ்நாடு CPM கட்சியின் முன்னாள் தலைவருமான தோழர். திரு. சங்கரய்யா அவர்களின் பெயர் சூட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தகவல்: #MKP_தகவல்_தொழில்நுட்ப_அணி #மனிதநேய_கலாச்சாரப்_பேரவை #குவைத்_மண்டலம் 23.02.2024.
திருச்சியில் மஜக இல்ல மணவிழா: பொதுச்செயலாளர் மௌலா.நாசர் பங்கேற்று வாழ்த்து….
பிப்ரவரி.22., மஜக செயல்பாட்டாளர் மயிலாடுதுறை சபீர் இல்ல திருமண விழா திருச்சி L.K.S மஹாலில் நடைபெற்றது! மணமக்கள் A. சையத் ஜாவீத் பாஷா பேபி. B,sc மற்றும் M. தாஜ்நிஷா M.com ஆகியோரை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மௌலா.நாசர் அவர்கள் நேரில் வந்து வாழ்த்தினார். அவருடன் மாநிலச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், துணைச்செயலாளர்கள் பேரா. சலாம், துரை முகமது ஆகியோரும் உடன் வாழ்த்தினார். மேலும் திருச்சி மாவட்ட செயலாளர் பாபு பாய், அவைத் தலைவர் ஷேக் தாவூத் பொருளாளர் முஸ்தபா, துணைச் செயலாளர் மு.ஷேக்அப்துல்லா, அன்வர், மைதீன், சையது தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கமால் பாய், ஆழ்வார் தோப்பு நிர்வாகிகள் முகமது ஜுபேர், முபாரக் அலி, ஜாஹிர், முனாப் நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருச்சி_மாவட்டம் 22.02.2024.
குவைத் தமிழர் எழுச்சி மாநாடு மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி உள்ளிட்டவர்களுக்கு குவைத்தில் உற்சாக வரவேற்பு
பிப்.23., மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவையின் குவைத் மண்டலம் சார்பில் ஆறாவது மண்டல மாநாடு "குவைத் தமிழர் எழுச்சி மாநாடு" இன்று 23-02-2024 வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணிக்கு தஸ்மா அரங்கில் நடைபெறுகிறது இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற தாயகத்திலிருந்து மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி MA. Ex.MLA அவர்களும், எழுத்தாளர் சமூகநீதி பேச்சாளர் பேரா.சுந்தரவள்ளி M.Phil அவர்களும், சமூகநீதி பேச்சாளர் ஜீவ சகாப்தன் M.Sc அவர்களும் குவைத் வருகை புரிந்தனர். அவர்களுக்கு குவைத் மண்டலம் சார்பாகவும், குவைத்தில் உள்ள பல்வேறு அமைப்பினர், சமூக ஆர்வலர்கள், மனிதநேய சொந்தங்கள் சார்பாகவும் உற்சாகமாக வரவேற்பு வழங்கினர். தகவல்: மனிதநேய கலாச்சார பேரவை #MJK_IT_Wing_Kuwait குவைத் மண்டலம் 23.02.2024.