தொடரும் இணைவுகள்…. முத்துப்பேட்டையில் மஜக வில் இணைந்த இளைஞர்கள்….

பிப்.24.,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை நகரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொறுப்பாளர் காஜா அவர்களின் ஏற்பாட்டில் துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜூதீன் முன்னிலையில் முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மஜக-வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

புதிதாக இணைந்தவர்கள் மத்தியில் மாநில துணைச் செயலாளரும், மாவட்ட மேலிட பொறுப்பாளருமான பேராவூரணி சலாம் கட்சியின் செயல்பாடுகள் குறித்து விரிவாக பேசினார்.

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் பொதக்குடி ஜெயினுதீன், மாவட்ட செயலாளர் புலிவலம். சேக் அப்துல்லா, மாவட்ட துணை செயலாளர்கள் நாச்சிக்குளம். ஜான், பொதக்குடி. நத்தர், மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் தாஹிர், ரபீக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தகவல்.
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்
23.02.2024.