இறைவன் நாடினால் வருகின்ற 13-03-2016 அன்று கோவை மாநகரில் கோட்டை மேடு வின்சென்ட் ரோட்டில் மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்டத்தின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்... உரைகள் பொதுச்செயலாளர் : M.தமீமுன் அன்சாரி அவர்களும்,பொருளாளர் : ஹாரூன் ரஷீத் அவர்களும் சிறப்புரையாற்றுகிறார்கள். மஜக சொந்தங்களே அணித்திரண்டு வாரீர்...
செய்திகள்
மனிதநேய ஜனநாயக கட்சி அழைக்கிறது…
இறைவனின் திருப்பெயரால்.. மனிதநேய ஜனநாயக கட்சி அழைக்கிறது... மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சி முறையே ஜனநாயகமாகும்.இந்த கோட்பாட்டை செயல்படுத்தும் களம்தான் அரசியல்.ஜனநாயக அரசியல் மூலமே அதிகாரத்தை வென்றெடுக்க முடியும். அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்கும் சமூகங்களே வெற்றி பெறுகின்றன.அரசியல் தெளிவை பெறும் குடிமக்கள் நிறைந்த நாடு தன்னைத்தானே வலிமைப்படுத்தி கொள்கிறது. எனவே குடிமக்களுக்கு அரசியல் அறிவையும்,அரசியல் அனுகுமுறைகள் குறித்த புரிதல்களையும் ஏற்படுத்தும் கட்சிகளே நாட்டுக்கு தேவைபடுகின்றன. இன்று அரசியல் என்பது மக்களுக்கு சேவையாற்றுவதற்கான ஒரு கருவி என்ற நிலை குறைந்து வருகிறது. லஞ்சம்,ஊழல்,பதவிவெறி,சாதிவெறி,மதவெறி,அடுத்தவரை வீழ்த்துதல்,இவைதான் அரசியலின் எழுதப்படாத இலக்கணங்களாக இருக்கின்றன. இவற்றை மாற்றியமைத்து மக்களுக்கு நம்பிக்கையூட்டும் அரசியலை முன்னெடுக்கும் வகையில் மனிதநேய ஜனநாயக கட்சி(MJK) கடந்த பிப்ரவரி 28 ம் தேதி உருவாக்கப்பட்டிருக்கிறது. முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்,பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்காக்கும் வகையில்,இக்கட்சியை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வலிமையுடன் உருவாக்கி வருகிறோம். சமூகநீதி,சமூக நல்லிணக்கம்,சமத்துவ ஜனநாயகம் ஆகிய தத்துவங்களோடு மனிதநேய சேவைகளையும்,சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும் முக்கிய தளங்களாக கொண்டு செயல்திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. முற்போக்கான அனுகுமுறைகள்,தொலைநோக்கு சிந்தனைகள்,இளம் தலைமுறையினருக்கான வழிக்காட்டல்கள் ஆகியவற்றோடு ஒரு துடிப்புமிக்க தலைமையின்கீழ் மனிதநேய ஜனநாயக கட்சி புதிய பாதையில்,புதிய பயணத்தை தொடங்கியிருக்கிறது. நேர்மையான அரசியலையும்,கண்ணியமான பொதுவாழ்வையும் விரும்பும் அனைவரையும் இதில் இணையுமாறு
மனிதநேய ஜனநாயக கட்சி (MJK) துவக்கம்…
பிப்.28., மனிதநேய மக்கள் கட்சியிள் கடந்த அக்டோபர் 6 ,2015 அன்று பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து, கட்சி யாருக்கு சொந்தம் என்ற வழக்கு எங்கள் தரப்பில் தொடக்கப்பட்டது. அந்த வழக்கு கடந்த பிப்ரவரி 25, 2016 அன்று சென்னை உயர்நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து கடந்த (28.02.2016) அன்று கும்பகோணத்தில் நமது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் 'புதிய பாதை- புதிய பயணம்' என்ற முழக்கத்தோடு #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) என்ற பெயரில். அரசியல் கட்சியை தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இதன் தொடக்க விழா பொதுக்கூட்டம் கடந்த (28.02.2016) அன்று இரவு தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் நடைபெற உள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் நானும், கட்சியின் பொருளாளராக ஹாரூன் ரஷீதும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். புதிய தலைமை நிர்வாகிகள் , மாவட்ட செயலாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. கட்சியின் கொள்கைகள், செயல் திட்டங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். வரும் சட்டமன்ற தேர்தலில் நமது கோரிக்கைகள் மதிக்கும் வலிமையான கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. நேர்மையான அரசியலையும், கண்ணியமான பொதுவாழ்வையும் செயல்படுத்த களம் புகும்