மனிதநேய ஜனநாயக கட்சி (MJK) துவக்கம்…

IMG-20160301-WA0150MJK மஜக_1um wp-image-4″ />

MJK மஜக_1

MJK மஜக_2

பிப்.28., மனிதநேய மக்கள் கட்சியிள் கடந்த அக்டோபர் 6 ,2015 அன்று பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து, கட்சி யாருக்கு சொந்தம் என்ற வழக்கு எங்கள் தரப்பில் தொடக்கப்பட்டது.

அந்த வழக்கு கடந்த பிப்ரவரி 25, 2016 அன்று சென்னை உயர்நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து கடந்த (28.02.2016) அன்று கும்பகோணத்தில் நமது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில் ‘புதிய பாதை- புதிய பயணம்’ என்ற முழக்கத்தோடு #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) என்ற பெயரில். அரசியல் கட்சியை தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதன் தொடக்க விழா பொதுக்கூட்டம் கடந்த (28.02.2016) அன்று இரவு தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் நடைபெற உள்ளது.

கட்சியின் பொதுச்செயலாளர் நானும், கட்சியின் பொருளாளராக ஹாரூன் ரஷீதும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். புதிய தலைமை நிர்வாகிகள் , மாவட்ட செயலாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

கட்சியின் கொள்கைகள், செயல் திட்டங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். வரும் சட்டமன்ற தேர்தலில் நமது கோரிக்கைகள் மதிக்கும் வலிமையான கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

நேர்மையான அரசியலையும், கண்ணியமான பொதுவாழ்வையும் செயல்படுத்த களம் புகும் எங்களுக்கு அனைவரும் அதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இறையருளால் எமது புதிய பயணம் புதிய பாதையில் தொடங்குகின்றது

இவண்

M.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
28_02_2016