மனிதநேய ஜனநாயக கட்சி அழைக்கிறது…

இறைவனின் திருப்பெயரால்..

மனிதநேய ஜனநாயக கட்சி அழைக்கிறது…

மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சி முறையே ஜனநாயகமாகும்.இந்த கோட்பாட்டை செயல்படுத்தும் களம்தான் அரசியல்.ஜனநாயக அரசியல் மூலமே அதிகாரத்தை வென்றெடுக்க முடியும்.

அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்கும் சமூகங்களே வெற்றி பெறுகின்றன.அரசியல் தெளிவை பெறும் குடிமக்கள் நிறைந்த நாடு தன்னைத்தானே வலிமைப்படுத்தி கொள்கிறது.

எனவே குடிமக்களுக்கு அரசியல் அறிவையும்,அரசியல்
அனுகுமுறைகள் குறித்த புரிதல்களையும் ஏற்படுத்தும் கட்சிகளே நாட்டுக்கு தேவைபடுகின்றன.

இன்று அரசியல் என்பது மக்களுக்கு சேவையாற்றுவதற்கான ஒரு கருவி என்ற நிலை குறைந்து வருகிறது.
லஞ்சம்,ஊழல்,பதவிவெறி,சாதிவெறி,மதவெறி,அடுத்தவரை வீழ்த்துதல்,இவைதான் அரசியலின் எழுதப்படாத இலக்கணங்களாக இருக்கின்றன.

இவற்றை மாற்றியமைத்து மக்களுக்கு நம்பிக்கையூட்டும் அரசியலை முன்னெடுக்கும் வகையில் மனிதநேய ஜனநாயக கட்சி(MJK) கடந்த பிப்ரவரி 28 ம் தேதி உருவாக்கப்பட்டிருக்கிறது.

முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்,பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்காக்கும் வகையில்,இக்கட்சியை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வலிமையுடன் உருவாக்கி வருகிறோம்.

சமூகநீதி,சமூக நல்லிணக்கம்,சமத்துவ ஜனநாயகம் ஆகிய தத்துவங்களோடு மனிதநேய சேவைகளையும்,சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும் முக்கிய தளங்களாக கொண்டு செயல்திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.

முற்போக்கான அனுகுமுறைகள்,தொலைநோக்கு சிந்தனைகள்,இளம் தலைமுறையினருக்கான வழிக்காட்டல்கள் ஆகியவற்றோடு ஒரு துடிப்புமிக்க தலைமையின்கீழ் மனிதநேய ஜனநாயக கட்சி புதிய பாதையில்,புதிய பயணத்தை தொடங்கியிருக்கிறது.

நேர்மையான அரசியலையும்,கண்ணியமான பொதுவாழ்வையும் விரும்பும் அனைவரையும் இதில் இணையுமாறு அழைப்பு விடுக்கிறோம்.

வானுயர்ந்த கனவுகளோடும்,அசைக்க முடியாத நம்பிக்கைகளோடும் களமிறங்கியிறுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் “அரசியல் மறுமலர்ச்சி மாநாடு” சென்னையில் மார்ச் 26,2016 அன்று இறையருளால் நடைபெற உள்ளது.

இம்மாநாட்டில் குடும்பத்துடன் அனைவரும் பங்கேற்று,நேர்மையான அரசியல் களத்தை வலிமைப்படுத்துமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

இது மற்றும் ஒரு கட்சியல்ல!!!இது மாற்றத்திற்கான கட்சி!!!

இவண்

மனிதநேய ஜனநாயக கட்சி (MJK)⁠⁠[10:42 AM, 3/5/2016] A. M. H