திண்டுக்கல்.டிச.04.., மனிதநேய ஜனநாயக கட்சியின் கடும் முயற்சியால் ஆயுல் சிறைவாசி திண்டுக்கல் மீரான் மைதீன் அவர்கள் விடுதலை பெற்று நேற்று வீடு திரும்பினார். அவர்களை திண்டுக்கல் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் வரவேற்று வீட்டிற்க்கு அழைத்து சென்றனர். நெகிழ்ச்சியாக நடைபெற்ற இந்த நிகழ்வில் திண்டுக்கல் மீரான் மைதீன் அவர்கள் சட்டமன்றத்தில் தொடர்ந்து தனது விடுதலைக்காக பேசிய மஜக-வின் பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கும், மஜக-வின் தொடர் முயற்சிகளுக்கும் நன்றி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திண்டுக்கல் 03-12-2019
Tag: மஜக
மஜக தலைமையக நியமன அறிவிப்பு
மனிதநேய ஜனநாயக கட்சியின் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளாக, மாவட்ட துணைச் செயலாளராக. H.தமீமுன் அன்சாரி அலைபேசி: 8098719306 மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக. P.M.சாகுல் ஹமீது அலைபேசி: 9994837856 மாவட்ட வழக்கறிஞரணிச் செயலாளராக. C.S.முஹம்மது இஸ்மாயில் அலைபேசி: 9843220847 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுகொள்கிறேன். இவண். மு.தமிமுன் அன்சாரி MLA பொதுச்செயலாளார் மனிதநேய ஜனநாயக கட்சி. 20-11-2019
மஜக மாநிலபொருளாளருடன் இராமநாதபுரம் மாவட்ட நிருவாகிகள் சந்திப்பு..!
சிவகங்கை.நவ.19.., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீத் அவர்களை இளையான்குடியில் உள்ள அவரது இல்லத்தில் இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் மற்றும் பரமக்குடி நகர நிர்வாகிகள் சந்தித்தனர். இந்த சந்திப்பில் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கிளைகள் அமைப்பது சம்பந்தமாகவும் கட்சியின் வளர்ச்சி குறித்தும் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது. பரமக்குடி நகர் முழுவதும் வார்டு கிளைகள் அமைப்பது சம்பந்தமாகவும் விவாதிக்கப்பட்டது. நடைபெறவிருக்கின்ற உள்ளாட்சி மன்றத் தேர்தல் குறித்தும். விவாதிக்கப்பட்டது. இந்த சந்திப்பில் இராமநாதபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் முகமது இலியாஸ், பரமக்குடி நகரச் செயலாளர் எமனை சாகுல், நகர துணைச் செயலாளர் ஜாபர் அலி கான், நகர மாணவர் இந்தியா செயலாளர் கனிபா, எமனேஸ்வரம் இளைஞரணிச் செயலாளர் இஷாம் மற்றும் பசீர் உடனிருந்தனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #இராமநாதபுரம் 18-11-2019
விருதுநகர் மாவட்டசெயற்குழு கூட்டம்..!! மஜக மாநில நிர்வாகிகள் பங்கேற்பு..!!
விருதுநகர்.நவ.18.., மனிதநேய ஜனநாயக கட்சியின் விருதுநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் 17.11.2019 அன்று சிவகாசியில் விஸ்வகர்மா திருமண மஹாலில் சிவகாசி நகரச் செயலாளர் இக்பால் மைதீன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மஜக மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது.,M.Com., தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர், துணைப் பொதுச் செயலாளர் மண்டலம் ஜெயினுலாபுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். இச்செயற்குழு கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும், வருங்கால செயல் திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இனி வரும் காலங்களில் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்தவும் திட்டமிட்டுள்ளது, இறுதியாக விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். புதிய நிர்வாகிகள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். தகவல்; #தகவல்தொழில்நுட்பஅணி #MJK_IT_WING #விருதுநகர்_மாவட்டம் 18.11.2019
பாத்திமாலத்தீப் தற்கொலை விவகாரம்..!, பிரச்சனையை தமிழக சிறுபான்மை ஆணையத்திடம் கொண்டு சென்றது மஜக!
சென்னை.நவ.16.., சென்னை IIT யில் பயின்ற மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்த நிகழ்வு நாட்டையே உலுக்கியுள்ளது. தற்போது இது கொலையாக இருக்குமோ என்ற ஐயமும் வலுப்பெற்றிருக்கிறது. இது தொடர்பாக சம்மந்தப்பட்ட பேராசிரியர் மீது கொலை வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி, இப்பிரச்சனையை தமிழக சிறுபான்மையினர் ஆணையத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அதன் முதன்மை செயலாளர் திரு.சுரேஷ்குமார் IAS அவர்களிடம் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA தலைமையில் பொருளாளர் ஹாரூண் ரசீது, துணைப் பொதுச் செயலாளர் N.A.தைமிய்யா ஆகியோர் இது தொடர்பாக மனு அளித்தனர். அப்போது சிறுபான்மை ஆணைய மாநில துணைத் தலைவர் ஜவஹர் அலி உடனிருந்தார். இதை விசாரிக்கும் அதிகாரிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் உட்பட அனைவரையும் நேரில் அழைத்து விசாரிக்கும் வலிமை இந்த ஆணையத்திற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. பாத்திமா லத்தீபுக்கு நீதி தேடும் அறப்போராட்டத்தில் இது ஒரு முக்கிய அம்சமாகும். தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சென்னை 15-11-2019