சென்னை.மார்ச்.07., குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் தொடர்ந்து 23 நாட்களாக நடைப்பெற்று வரும் ஷாகின்பாக் போராட்டத்தில். இன்று (07-03-2020) மனிதநேய ஜனநாயக கட்சியின் அவைத் தலைவர் நாசர் உமரீ அவர்கள் பங்கேற்று உரை நிகழ்த்தினர். உடன் மாவட்டச் செயலாளர் தாங்கள் தாரிக், மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் கதிர் உள்ளிட்ட மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.. தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வடசென்னைமாவட்டம் 07-03-2020
Tag: புதிய குடியுரிமை சட்ட திருத்தம்
குடியுரிமை சட்டங்கள் தொடர்பான வாழ்வுரிமை மாநாட்டு தீர்மானங்கள்! முதல்வரிடம் முதமிமுன்அன்சாரி MLA நேரில் வழங்கினார்!
மார்ச் 07, இன்று நாகப்பட்டினம் ஒரத்தூரில் புதிய மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்கள் நாகைக்கு வருகை தந்தார். விழா முடிந்ததும் மேடையில் அவரை சந்தித்த மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், கடந்த பிப்ரவரி 29 அன்று கோவையில் மஜக நடத்திய வாழ்வுரிமை மாநாட்டில் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட முதன்மை தீர்மானங்களை நேரில் வழங்கினார். தமிழக மக்களின் மன நிலையை மதித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அப்போது நாகை நாடாளுமன்ற தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் MP, திரு.செல்வராஜ் உள்ளிட்டோரும் அருகில் இருந்தனர். இந்நிகழ்வில் மஜக மாநில துணை செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் செய்யது ரியாசுதீன், பொருளாளர் சதக்கத்துல்லாஹ், துணை செயலாளர் சாகுல் ஹமீது, முபீன் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகைதெற்குமாவட்டம்.
பேராசிரியர் அன்பழகன் மரணம், திராவிடஇயக்கத்தின் தீபம் அணைந்தது! முதமிமுன்அன்சாரி MLA இரங்கல்!
தந்தை பெரியாரின் மாணவராகவும், பேரறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பிகளில் மூத்தவராகவும், கலைஞரின் உற்ற நண்பராகவும், திராவிட இயக்க போராளியாகவும் திகழ்ந்த பேராசிரியர் அன்பழகன் அவர்கள் இன்று மறைவுற்றார் என்பது தமிழ் உலகிற்கு ஒரு துயரச் செய்தியாகும். தஞ்சை சமவெளியாம் நாகை மாவட்டத்தில் பிறந்து, அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பயின்று, பெரியாரின் ஈரோட்டு பாசறையில் பொதுவாழ்வை தொடங்கியவர். திருவாரூரில் நடைப்பெற்ற மீலாது விழா மாநாட்டில் தான் பேராசிரியர் அன்பழகன் அவர்களும், கலைஞர் அவர்களும் முதன் முதலாக சந்தித்துக் கொண்டனர். அந்த இனிய நட்பு அவர்களை உற்ற கொள்கை நண்பர்களாக மாற்றியது. 43 ஆண்டு காலம் திமுகவின் பொதுச் செயலாளராகவும், பல்வேறு துறைகளின் அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர் என்பதெல்லாம் அவரது சிறப்புகளை உணர்த்தினாலும், திராவிட இயக்க கொள்கைகளை அணையாமல் பாதுகாத்த மாவீரர் என்பதே அவரது பெருமையை பறைசாற்றும். எந்த நிலையிலும் கொள்கையை விட்டுக் கொடுக்காத சுயமரியாதை போராளியாக அவர் வாழ்ந்து மறைந்திருக்கிறார். ஆதிக்க எதிர்ப்பு போராட்டங்களில் ஏவுகணையாய் செயல்பட்ட அவரது தீரமும், தமிழர் வாழ்வுரிமைகளில் அவர் காட்டிய அக்கறையும், பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளில் சமரசம் செய்யாத முனைப்பும் அவரை தமிழர்களின் இனமானப் பேராசிரியர் என போற்ற காரணங்களாய்
உள்நாட்டு பிரச்சனையை மோடி சர்வதேச பிரச்சனையாக்கி விட்டார்..! முதமிமுன்அன்சாரி MLA குற்றச்சாட்டு.!
தென்காசி.மார்ச்.6, புளியங்குடியில் அத்தக்வா பயிலகம் சார்பில், குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக மாநாடு நடைப்பெற்றது, இதில் செ.ஹைதர் அலி, தி.வேல்முருகன், அய்யாவழி பாலமுருகன், காயல் மஹ்பூப், புளியங்குடி செய்யதலி, தென்காசி நெய்னா உள்ளிட்டோர் பேசினர். இதில் பங்கேற்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் உரையாற்றியதாவது... நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க நடைபெறும் இப்போராட்டத்தில், நாம் சாதி, மதங்களை கடந்து போராடுகிறோம் என்பதே ஒரு சிறப்புத்தான். அதற்கு இந்த மேடையும் ஒரு உதாரணமாகும். அவர்கள் மக்களை மதரீதியாக பிரிக்க நினைத்தார்கள். ஆனால், நாம் நாட்டைக் காக்க ஒன்றாக போராடுகிறோம். நாட்டிலேயே முதன் முதலாக அஸ்ஸாமில் இந்த போராட்டங்களை தொடங்கி வைத்ததே இந்து சமுதாய சகோதர, சகோதரிகள் தான். அவர்கள் தான் பாதிப்பை முதலில் உணர்ந்தவர்கள். இன்று அஸ்ஸாமின் தடுப்பு முகாம்களில் நிலவும் அவலங்கள் கொடுமையானது. அங்கு பாலுக்கு அழும் குழந்தைகளின் பசி தீர்க்க. நீண்ட வரிசையில் தாய்மார்கள் காத்துக் கிடக்கிறார்கள். முகாமில் உள்ள மருத்துவரை பார்க்க பெரியவர்கள் நீண்ட வரிசையில் காத்து கிடக்கிறார்கள். ஒரே கூடாரத்தில் பலர் அடைக்கப்பட்டு நெரிசலில் தினமும் உயிரிழப்புகள் நேரிடுகிறது. "கழிவறை" பயன்படுத்த மக்கள் 'வரிசையில்' நிற்கும் கொடுமை நிலவுகிறது. அங்கு NRC அமல்படுத்தப்பட்டதால் ஏற்பட்டுள்ள சீரழிவுகள்
எத்தனை லட்சம்பேரை கைது செய்வீர்கள்? முதமிமுன்அன்சாரி MLA கேள்வி..!
இராமநாதபுரம்.மார்ச்.6., தொண்டியில் மத்திய அரசின் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக நடைபெறும் காத்திருப்பு போராட்டத்தில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசியதாவது... நாட்டில் நடைபெறும் உண்மையான பிரச்சனைகளிலிருந்து மக்களை திசை திருப்பவே மத்திய பாஜக அரசு குடியுரிமை திருத்த கறுப்பு சட்டங்களை திணித்திருக்கிறது. விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள். வேலை இல்லாத் திண்டாட்டம் பெருகி வருகிறது. கல்வி வணிகமயமாகி வருகிறது. சாமனிய மக்களுக்கு இலவச மருத்துவம் எட்டாக்கனியாகி வருகிறது. மக்கள் தொழிற்சாலைகளை கேட்கிறார்கள். பல்கலைக்கழகங்களை கேட்கிறார்கள். ஆனால் யாரும் கேட்காத குடியுரிமை கறுப்பு சட்டங்கள் திணிக்கிறார்கள். தாத்தா, பாட்டியின் ஆவணங்களை கேட்டால் எங்கு போவது? பிரதமரால் கூட காட்ட முடியுமா? 1971-க்கு பிறகு தான் அவையெல்லாம் ஒழுங்குப் படுத்தப்பட்டன. அதற்கு முன்னால் பிறந்தவர்களின் விபரங்களை கேட்டால் யாராலும் காண்பிக்க முடியாது. மலைவாழ் மக்கள், பழங்குடிகள், நரிக்குறவர் போன்ற நாடோடி மக்களிடம் ஆவணங்களை கேட்டால் என்ன செய்வார்கள்? அவர்களது குடியுரிமை பறித்து என்ன செய்யப் போகிறீர்கள்? முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்கள் கொண்டு வந்த தொட்டில் குழந்தை திட்டத்தில் தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகள் எந்த ஆவணத்தை காட்டுவார்கள்? எனவேதான் இதை வேண்டாத வேலை என்கிறோம். அஸ்ஸாமில் இதை அமல்படுத்தியதால் பெரும் சமூக