உள்நாட்டு பிரச்சனையை மோடி சர்வதேச பிரச்சனையாக்கி விட்டார்..! முதமிமுன்அன்சாரி MLA குற்றச்சாட்டு.!

தென்காசி.மார்ச்.6,

புளியங்குடியில் அத்தக்வா பயிலகம் சார்பில், குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக மாநாடு நடைப்பெற்றது,

இதில் செ.ஹைதர் அலி, தி.வேல்முருகன், அய்யாவழி பாலமுருகன், காயல் மஹ்பூப், புளியங்குடி செய்யதலி, தென்காசி நெய்னா உள்ளிட்டோர் பேசினர்.

இதில் பங்கேற்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் உரையாற்றியதாவது…

நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க நடைபெறும் இப்போராட்டத்தில், நாம் சாதி, மதங்களை கடந்து போராடுகிறோம் என்பதே ஒரு சிறப்புத்தான். அதற்கு இந்த மேடையும் ஒரு உதாரணமாகும்.

அவர்கள் மக்களை மதரீதியாக பிரிக்க நினைத்தார்கள். ஆனால், நாம் நாட்டைக் காக்க ஒன்றாக போராடுகிறோம்.

நாட்டிலேயே முதன் முதலாக அஸ்ஸாமில் இந்த போராட்டங்களை தொடங்கி வைத்ததே இந்து சமுதாய சகோதர, சகோதரிகள் தான். அவர்கள் தான் பாதிப்பை முதலில் உணர்ந்தவர்கள்.

இன்று அஸ்ஸாமின் தடுப்பு முகாம்களில் நிலவும் அவலங்கள் கொடுமையானது. அங்கு பாலுக்கு அழும் குழந்தைகளின் பசி தீர்க்க. நீண்ட வரிசையில் தாய்மார்கள் காத்துக் கிடக்கிறார்கள்.

முகாமில் உள்ள மருத்துவரை பார்க்க பெரியவர்கள் நீண்ட வரிசையில் காத்து கிடக்கிறார்கள்.

ஒரே கூடாரத்தில் பலர் அடைக்கப்பட்டு நெரிசலில் தினமும் உயிரிழப்புகள் நேரிடுகிறது.

“கழிவறை” பயன்படுத்த மக்கள் ‘வரிசையில்’ நிற்கும் கொடுமை நிலவுகிறது.

அங்கு NRC அமல்படுத்தப்பட்டதால் ஏற்பட்டுள்ள சீரழிவுகள் நீடிக்கிறது.

அங்கு பாதிக்கப்பட்ட 19-லட்சம் பேரில் 12-லட்சம் பேர் இந்து சமுதாய மக்கள் என்பது பலருக்கும் தெரியவில்லை.

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் இந்தியர் என்றும், அந்தியர் என்றும் பிரிக்கப்பட்டுள்ளனர். இப்படி பல கேலிக்கூத்துகள் அங்கு நடந்துள்ளது.

குடியுரிமை சட்டத்தை காட்டி, மக்களை மிரட்டி, லஞ்சம் வாங்கியே பல அரசு அதிகாரிகள் கோடிஸ்வரர்களாகி விட்டார்கள்.

இது போன்று நடைமுறையில் பல பாதிப்புகள் உருவாகிறது.

எனவே தான் இச்சட்டங்களை எதிர்க்கிறோம்.

https://m.facebook.com/story.php?story_fbid=2316391598460602&id=700424783390633

கடும் எதிர்ப்பு வலுத்ததால், இப்போதைக்கு NRC-யை அமல்படுத்த மாட்டோம் என நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.

இப்போதைக்கு மட்டுமல்ல. எப்போதைக்கும் அதை அனுமதிக்க மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளோம்.

NRC-யில் உள்ள சர்ச்சைக்குரிய கேள்விகளை NPR-சட்டத்தில் இணைத்ததால் அதையும் எதிர்க்கிறோம்.

வாஜ்பாய், மன்மோகன் சிங் காலத்தில் வடிவமைக்கப்பட்ட பழைய NPR சட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம்.

இவை இரண்டும் வேறுபட்டது.

CAA சட்டம் அநீதியானது.பாகுபாடு காட்டுகிறது.

அதில் ஈழத் தமிழர்களை ஏன் புறக்கணிக்கிறீர்கள்? என கேட்கிறோம். அவர்கள் மதத்தால், மொழியால், இனத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இலங்கையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களை சிங்கள – பெளத்த இனவாதிகள் அழித்துள்ளனர்.

அந்த ஈழத் தமிழ் அகதிகள் 1-லட்சம் பேருக்கு மேல் இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளார்கள். திட்டமிட்டு அவர்களை புறக்கணிக்கிறார்கள்.

ஆனால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்ளாதேஷ் நாடுகளிலிருந்து குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்திற்கும் கீழ்தான் உள்ளது.

ஆனால் CAA சட்டத்தில் அவர்களை சேர்க்கிறார்கள்.

திட்டமிட்டு ஈழத் தமிழர்களை புறக்கணிக்கிறார்கள். எனவே அதையும் எதிர்க்கிறோம்.

இந்த குடியுரிமை கறுப்பு சட்டங்கள் யாவும் நம் அரசியல் சாசன சட்டங்களின் மரபுகளுக்கு எதிரானது. சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது.

அதனால் தான் இந்திய மக்களின் போராட்டங்களை உலகம் கவனிக்க தொடங்கி விட்டது.

ஐ.நா. சபை, ஐரோப்பிய யூனியன், OIC கூட்டமைப்பு, மத சுதந்திரங்களுக்கான அமெரிக்க மனித உரிமை ஆணையம் ஆகியன தலையிட்டு கருத்து கூறி உள்ளது,

இது நமது வெளிவிவகார துறைக்கு ஏற்பட்ட பின்னடைவாகும்.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை, சொந்த மக்களின் மீதே இந்திய அரசு போர் தொடுத்துள்ளது என தலையங்கம் எழுதிவிட்டது.

நாட்டு மக்களின் போராட்டங்களை அலட்சியம் செய்து, உள்நாட்டு பிரச்சனையை தவறாக கையாண்டு, அதை சர்வதேச பிரச்சனையாக்கி விட்டார் பிரதமர் மோடி.

இது அவரது அரசியல் தோல்வியாகும். இதற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடியும், டெல்லி சங்பரிவார கூலிப்படைகள் செய்த கலவரத்திற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் மஜக மாவட்டச் செயலாளர் பீர் முகம்மது, மாவட்டப் பொருளானர் முகம்மது இப்ராகிம், மாவட்ட பேச்சாளர் இணையத்துல்லா, நகரச் செயலாளர் முகம்மது சதாம் உசேன், பொருளாளர் சதாம், மாணவர் இந்தியா மாவட்டச் செயலாளர் பீர், சங்கரன் கோயில் நகரச் செயலாளர் சுல்தான், அச்சன் புதூர் நகரச் செயலாளர் முகம்மது நாசர் உள்ளிட்ட மஜக-வினரும் பொதுச் செயலாளருடன் பங்கேற்றனர்.

தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING
#தென்காசி_மாவட்டம்
06-03-2020