75வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கோட்டாறு பகுதியில் தேசிய கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் பிஜூருள் ஹாபீஸ், அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். இஸ்லாமிய கலாசார பேரவை மாவட்ட செயலாளர் மிஸ்பா ஆலிம் அவர்கள் சுதந்திர தின உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் முஜிப் ரகுமான், அமீர்கான், மற்றும் மாவட்ட இளைஞரணி செயலாளர் அஷ்ரப், அலி மாநகர துணை செயலாளர் மாஹீன், மற்றும் மாநகர துணை செயலாளர் பைசல், நிர்வாகிகள் மாஜித் , அசீம், அமீன், வேல்முருகன், மற்றும் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #கன்னியாகுமரி_மாவட்டம் 15.08.2021
Tag: 75வது சுதந்திர தினம்
திருப்பனந்தாளில் மஜக சார்பில் 75வது சுதந்திர தின விழா!
75வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக திருப்பனந்தாளில், தேசிய கொடி ஏற்றப்பட்டது. திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் சாதிக் பாட்சா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊர் நாட்டாண்மை ஆசாத் அலி கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளர் காதர் பாட்சா உறுதி மொழியை முழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் குடந்தை நிஜாம், தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால் சேட், மாவட்ட துணை செயலாளர் சையது இப்ராஹிம் உள்பட திரளான மஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தஞ்சை_வடக்கு_மாவட்டம்.
75வது சுதந்திர தினம்.! இளையான்குடியில் மஜக மாநில துணை செயலாளர் சைபுல்லாஹ் தேசிய கொடியேற்றினார்.!
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக சிவகங்கை மாவட்டம், இளையாகுடியில் மஜக மாநில துணை செயலாளர் பொறியாளர் சைபுல்லாஹ் அவர்கள் தேசிய கொடியேற்றினார். சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது, தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #சிவகங்கை_மாவட்டம் 15.08.2021
75வது சுதந்திர தினவிழா! கூடலூரில் மஜக சார்பில் தேசிய கொடியேற்றம்!
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நீலகிரி மேற்கு மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தேசிய கொடியேற்று விழா மாவட்ட செயலாளர் S.தமீமுன் அன்சாரி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட துணை செயலாளர் V.ஜோசப், அவர்கள் தேசிய கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில் நகர பொருளாளர் மஜீத், மற்றும் மாவட்ட, நகர, நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நீலகிரி_மேற்கு_மாவட்டம் 15.08.2021
75வது சுதந்திர தின விழா! உதகையில் மஜக சார்பில் தேசிய கொடியேற்றம்!
75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சி நீலகிரி கிழக்கு மாவட்டம் தேசிய கொடியேற்று விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் T.கமாலுதீன்,தலைமை தாங்கினார். இதில் முன்னாள் ராணுவ அதிகாரி அவிழ்த்தார் குருசாமி, அவர்கள் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாணவர் இந்திய மாநில செயலாளர் பெரியார் கார்த்திக், மாவட்ட பொருளாளர் என் .காலிப், மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ஹமீத், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் ரிஸ்வான், மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் தப்ரேஸ், மாவட்ட துணைச் செயலாளர் அதிப், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நீலகிரி_கிழக்கு_மாவட்டம் 15.8.2021