மார்ச்.10, இன்று சென்னை பல்லாவரத்தில் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் காத்திருப்பு போராட்டத்தில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் உரையாற்றினார்.. அப்போது அவர் பேசியதாவது... https://m.facebook.com/story.php?story_fbid=2323959301037165&id=700424783390633 CAA சட்டத்தில் அகதிகளிடம் பாகுபாடு காட்ட கூடாது என்கிறோம். பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளிருந்து இந்தியாவில் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்திற்கும் குறைவாக இருக்கிறது. ஆனால் இந்திய குடியுரிமை கேட்கும் ஈழத்தமிழர்களின் எண்ணிக்கை 1 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கிறது. அவர்கள் மதத்தால், இனத்தால், மொழியால் பாதிக்கபட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களை பறிகொடுத்துவிட்டு 30 ஆண்டுகளை கடந்து அகதிகளாக நம் மண்ணில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை CAA சட்டத்தில் ஏன் சேர்க்க மறுக்கிறீர்கள்? என கேட்கிறோம். அவர்களுக்கு குடியுரிமை கொடுக்ககூடாது என்று தமிழ்நாட்டில் யாராவது சொன்னார்களா..? அகதிகளிடம் பாராபட்சம் காட்ட கூடாது. மனித நேயத்தோடு அவர்களை அணுக வேண்டும். அவர்கள் வாழ்வுரிமையை இழந்து வருகிறார்கள். அவர்களிடம் பேதம் காட்டலாமா? இச்சட்டத்தின்படி, பிஜி தீவிலுள்ள இந்தியர்களோ, ரீ யூனியன் நாட்டை சார்ந்த தமிழர்களோ அகதி அந்தஸ்தை பெற்று குடியுரிமை பெற தகுதி பெற முடியாது. எல்லை நாடுகளை சேர்ந்த மதத்தால் பாதிக்கப்படும் நோபாள், பூட்டான் நாடுகளை சேர்ந்த
Tag: புதிய குடியுரிமை சட்டத்தை
திருப்பூர் ஷாகின்பாக் தொடர் போராட்டத்தில் மஜக மாநில துணை செயலாளர் ஷமீம் அஹமது எழுச்சியுரை!
திருப்பூர்: மார்ச்.10., திருப்பூரில் குடியுரிமை தொடர்பான CAA NRC NPR போன்ற கருப்பு சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து 24 நாட்களுக்கும் மேலாக நடைப்பெற்று வரும் ஷாகின்பாக் தொடர்தர்ணா போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் ஷமீம் அஹமது, அவர்கள் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது தமிழகத்தில் வண்ணாரப் பேட்டையில் வன்முறையை நிகழ்த்திய அடுத்த நாள் முதல் நடைபெறும் திருப்பூர் ஷாகின்பாக் என்ற தொடர் தர்ணா எனும் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்தி கொண்டி ருக்கின்ற திருப்பூர் வாழ் பொதுமக்கள் பாராட்டப்பட்ட வேண்டியவர்கள். மற்ற ஊர்களை காட்டிலும் திருப்பூரில் நடைபெறும் இந்த போராட்டத்தில் ஆண்களுக்கு சரிசமமாக பெண்களும் ஆயிரக்கணக்கில் பங்கேற்று தொடர்ந்து இந்த போராட்டத்தை வலிமைப்படுத்தி வருகின்றீர்கள் என பெண்களை பாராட்டி பேசினார். இதில் மாவட்ட செயலாளர் ஹைதர்அலி, மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அகமது, மாவட்ட துணைச் செயலாளர் பாபு, மாணவர் இந்தியா மாவட்ட பொருளாளர் ஆசீக், மாவட்ட இளைஞர் அணி மாவட்ட செயலாளர் அஸ்கர், துணைச் செயலாளர்கள் அபுதாகிர், யாக்கூப், வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் அபு,மாவட்ட பொருளாளர்
கிருஷ்ணாஜி பட்டினம் ECRல் நடைப் பெற்று வரும் தொடர் முழக்க தர்ணா! மஜக மாநிலச் செயலாளர் நாச்சிகுளம் தாஜு தீன் பங்கேற்பு!
மார்ச்.10, புதுக்கோட்டை மாவட்டம், கிருஷ்ணாஜிபட்டினத்தில் கிழக்கு கடற்கரை சாலையோரம் SDPI கட்சியின் சார்பில் ஐந்து நாள் தொடர் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்றைய நான்காவது நாள் போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் கலந்து கொண்டு பேசினார். குடியுரிமை திருத்த கருப்பு சட்டத்தை கண்டித்தும், இச்சட்டத்திற்கெதிராய் தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற தன்னுடைய உரையில் வலியுறுத்தினார். அவருடன், கட்டுமாவடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மஜகவினர் திரளானோர் கலந்து கொண்டனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #புதுக்கோட்டைகிழக்குமாவட்டம்.
பெண்களால் போராட்டம் வலிமையடைந்துள்ளது..! புளியந்தோப்பு மண்ணடி தொடர் போராட்டகளத்தில் இணைப் பொதுச் செயலாளர் ஜேஎஸ்ரிஃ பாய் உரை…!
சென்னை.மார்ச்.10., குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக நேற்று (09-03-2020) சென்னை வண்ணாரப்பேட்டையைத் தொடர்ந்து புளியந்தோப்பு, மண்ணடி பகுதியிலும் தொடர் காத்திருப்பு போராட்ட களத்தில். மனிதநேய ஜனநாயக கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயி அவர்கள் கண்டன உரையாற்றினார். இந்தியா முழுவதும் பெண்கள் தன்னெழுச்சியாக பங்கேற்று இந்த போராட்டங்களுக்கு வலிமை சேர்ப்பதாகவும், சுதந்திர இந்தியாவின் பல்வேறு போராட்டங்களை எடுத்துரைத்து பேசினார். இந்நிகழ்வுகளில் இளைஞரணி மாநிலச் செயலாளர் அஸாருதீன், மாணவர் இந்தியா மாநிலப் பொருளாளர் பஷீர் அஹமது, வடசென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் அன்வர், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட துணைச்செயலாளர் அப்பாஸ் மற்றும் மூசா ஆகியோர் உடனிருந்தனர். #தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வடசென்னைமாவட்டம் 09-03-2020
இளையான் குடியில் நடை பெற்று வரும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில்..! மஜக அவைத் தலைவர் நாசர் உமரி பங்கேற்பு..!
சிவகங்கை.பிப்.10., மத்திய அரசு கொண்டுவந்துள்ள கருப்பு சட்டங்களை (CAA, NRC, NPR) கண்டித்தும், சட்டங்களை உடனடியாக வாபஸ் பெறக்கோரியும் இந்தியா முழுவதும் தொடர் காத்திருப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது, தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தொடர் காத்திருப்பு போராட்டம் தொடர்ச்சியாக 22 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 08-03-2020 அன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் அவைத் தலைவர் நாசர் உமரீ அவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக ஆக்ரோஷமாக உரை நிகழ்த்தினார், இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் காஜா மைதீன் உள்ளிட்ட மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.. தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சிவகங்கை_மாவட்டம் 08-03-2020