டிச.20, குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் NRC ஆகியவற்றுக்கு எதிராக கூட்டமைப்பு சார்பில் பிரம்மாண்ட கண்டன மாநாடு திருப்பூரில் நடைப்பெற்றது. இதில் பேசிய மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், நாடெங்கிலும் சாதி, மத பேதமின்றி, மக்கள் வீதிகளில் இறங்கி போராடுவது நாட்டின் அரசியல் சாசன சட்டத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்காகத் தான் என்றார். இந்த சட்டங்களை தமிழ் நாட்டில் அமல்படுத்தக் கூடாது என்றும் மீறி அமல்படுத்தினால், எந்த அதிகாரிகளையும் வீதிகளுக்குள் தமிழர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றவர். இதற்காக சட்ட மறுப்பு இயக்கத்தை நடத்துவோம் என கொந்தளித்தார். இதை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்த மே.வங்கம், கேரளா, புதுச்சேரி, ஒரிஸா, பீஹார் மாநில அரசுகளை பாராட்டவும் தவறவில்லை. மாநாட்டை முன்னிட்டு திருப்பூர் எங்கும் 'ட்ராபிக் ஜாம் 'ஆக இருந்தது. பல்வேறு சமூக மக்களும் திரண்டெழுந்து இச்சட்டத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியது தமிழர் ஒற்றுமையை எடுத்துக் காட்டுவதாக இருந்தது. இந்நிகழ்வில் மஜக மாவட்ட செயலாளர் ஹைதர், தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால், தகவல் தொழில் நுட்ப அணி மாநில பொருளாளர் நாகூர் ஹமீது ஜெகபர், மாவட்ட துணைச் செயலர்கள் ராயல் பாஷா, முஜிபுர் ரஹ்மான், பாபு
Tag: புதிய குடியுரிமை சட்ட திருத்தம்
சிதம்பரத்தில் CAAவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டநகலை கிழித்து எரிந்த மஜகவினர் கைது!
டிச.18, சிதம்பரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இன்று (18/12/19) சட்ட நகல் கிழிக்கும் போராட்டம் நகர செயலாளர் இப்ராஹிம்ஷா தலைமையில் காந்தி சிலை அருகில் நடைப்பெற்றது. மஜக மாநில துணை செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், மாவட்ட செயலாளர் O.R ஜாகிர் ஹுசைன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். இப்போராட்டத்திற்கு காவல்துறையினால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும் திரளாக மஜக வினர் முழக்கங்களை எழுப்பியவாறு சென்று சட்ட நகலை கிழித்தெரிந்து கைதாகினர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதில் மாவட்ட துணை செயலாளர் ரியாஸ், மாவட்ட அணி நிர்வாகிகள் இளைஞரணி நைனா முஹம்மது, கொள்கை விளக்க அணி இக்பால், MJTS பாஷா, மருத்துவ சேவை அணி அப்துல்லா, மாணவர் இந்தியா முஸரப், பைசல், ஒன்றிய நிர்வாகிகள் காஜா மைதீன், ஹாஜா, சிதம்பரம் நகர நிர்வாகிகள் சதாம் உசேன், ஹபிபுல்லா, தமீமுல் அன்சாரி, பஷீர் அஹமது உள்ளிட்ட நிர்வாகிகளும், உறுப்பினர்களும் திரளாக பங்கேற்று கைதாகினர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #கடலூர்தெற்குமாவட்டம்.
புதிய குடியுரிமை சட்டத்திற்கெதிராக திருச்சியில் திரண்ட மக்கள் வெள்ளம்!
டிச.18, திருச்சி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் அரசியல் கட்சிகளின் சார்பாக புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் முப்தி ரூஹுல் ஹக் ஹஜ்ரத் தலைமையில் நடைபெற்றது. மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் திருச்சி.இப்ராஹீம் ஷா கண்டன உரையாற்றிட பேரா.மைதீன் கண்டன முழக்கங்களை எழுப்பினார். தொடர்ந்து நவாஸ்கனி MP, திருச்சி.வேலுசாமி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இதில் மஜக திருச்சி மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில், மாவட்ட துணை, அணி, ஒன்றிய, மாநகர், பகுதி நிர்வாகிகளும், உறுப்பினர்களும் திரளாக பங்கு கொண்டனர். ஜமாத்தார்களும், பொதுமக்களும் பெருமளவில் திரண்டதால் அவர்களை அணிவகுத்து நிற்க தேவையான உதவிகளை மஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் மேற்கொண்டனர். ஒழுங்குபடுத்துவதற்கு உதவியதற்காக மஜக நிர்வாகிகளை தொடர்பு கொண்ட காவல்துறை உயரதிகாரிகள் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். பல்வேறு சமூகத்தவர்களும் இணைந்து வெள்ளமென திரண்டிருந்த இக்கூட்டம் மத்திய அரசிற்கு எச்சரிக்கை விடுப்பதாக அமைந்தது என்றால் மிகையாகாது. தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருச்சி_மாவட்டம்
தேசியக்கொடி ஏந்தி புதிய குடியுரிமைசட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மஜகவினர் ஆர்ப்பாட்டம்!
டிச.15, பெரம்பலூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்டச் செயலாளர் M.முஜிபுர் ரஹ்மான் தலைமையில் லெப்பைக் குடிகாடு பேருந்து நிலையம் அருகில் புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இப்போராட்டத்தில் கலந்து கொண்ட மஜகவினர் கைகளில் தேசியக் கொடியை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும், சட்டத்திற்கெதிராக வாசகங்கள் அடங்கிய பதாகைகளை சிறுவர்கள் கைகளில் ஏந்தி நின்றது அப்பகுதியை கடந்து சென்றவர்களின் கவனத்தை ஈர்த்தது. மஜக மாநில செயற்குழு உறுப்பினர் திருச்சி S.இப்ராஹிம்ஷா, திருச்சி பேரா.மைதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புதிய குடியுரிமை சட்டத்திற்கெதிராக கண்டன உரையாற்றிட மாவட்ட பொருளாளர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தார். இதில், மாவட்ட துணை செயலாளர்கள் N.ஜஹாங்கிர் பாஷா, H.தமிமுன்அன்சாரி, மாவட்ட வழக்கறிஞரணி செயலாளர் C.M முகமது இஸ்மாயில், ஹக்கீம் பாஷா, A.உமர் பாரூக், M.முஹம்மது பாரூக், M.ஜாஹிர் உசேன், S.நிஹாஸ், திருமாந்துறை அன்பரசன், P.Mசம்சுதீன், ஷாஜகான், பெரம்பலூர் அலாவுதீன் உள்ளிட்ட நிர்வாகிகளும், ஆதரவாளர்களும் திரளாக பங்கேற்று கைதாகினர். முன்னதாக வருகை தந்த அனைவரையும் மாவட்ட செய்தி தொடர்பாளர் P.M சாகுல் ஹமீது வரவேற்றார். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #பெரம்பலூர்_மாவட்டம்.
பண்ருட்டியில் இரயில்நிலையத்தை முற்றுகையிட திரண்ட மஜகவினர் தடுத்து நிறுத்தி கைது!
டிச.15, புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகமெங்கும் மஜக சார்பில் பல்வேறு வகையான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. தொடர்ச்சியாக இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் வடக்கு சார்பாக பண்ருட்டியில் இரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் மாவட்டச் செயலாளர் முஹம்மது யூசுப் தலைமையில் நடைப்பெற்றது. மஜக மாநில துணை செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் O.R ஜாகிர் ஹுசைன் ஆகியோர் கண்டன முழக்கமிட்டு போராட்டத்தை துவக்கி வைத்தனர். பேருந்து நிலையத்திலிருந்து இரயில் நிலையத்தை நோக்கி முழக்கங்களை எழுப்பியவாரு முன்னேறிய போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில், மாவட்ட பொருளாளர் யாசின், மாவட்ட துணை செயலாளர்கள் அஜ்மீர் கான், பண்ருட்டி யாசின், Apm சலீம், ரியாஸ் ரஹ்மான், கியாசுதீன் (தெ) உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஒன்றிய, நகர கிளைகளை சேர்ந்த மஜகவினர் திரளாக கலந்து கொண்டு கைதாகினர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #கடலூர்வடக்குமாவட்டம்.