டிச.22, அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஜமாத்துல் உலமா சார்பில், நேற்று மயிலாடுதுறையில் புதிய குடியுரிமை சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் மிகுந்த எழுச்சியோடு நடைப்பெற்றது. மஜக மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரசீது கலந்து கொண்டு குடியுரிமை சட்டத்திற்கெதிராக கண்டன உரை நிகழ்த்தினார். மேலும், பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளின் சார்பில் கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர். இதில் மஜக மாவட்ட செயலாளர் N.M. மாலிக் தலைமையில், பொருளாளர் சங்கை தாஜ்தீன், மாநில இளைஞரணி துணை செயலாளர் அன்வர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆக்கூர் ஷாஜஹான், மாவட்ட துணை செயலாளர்கள் ஜெகபர் அலி, ஹாஜா சலீம், அணி நிர்வாகிகள் ஜாஹிர் உசேன், ஜெப்ருதீன் உள்ளிட்ட ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகளும், உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகைவடக்குமாவட்டம்.
Tag: புதிய குடியுரிமை சட்ட திருத்தம்
தமிழ்நாடு எழுகிறது, முதமிமுன்அன்சாரி MLA பேச்சு!
#கறுப்புச்சட்டங்களைதமிழகத்தில்திணிக்கநினைத்தால்தமிழர்கள்அதைகிழித்துஎறிவார்கள்! மஜகபொதுச்செயலாளர் # டிச.21, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் கூட்டமைப்பு சார்பில் அனைத்து சமூக மக்களும் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி நடைப்பெற்றது. கூட்டத்தில் "நாமே இந்தியர் என்போம்' என பொருள்படும் ராணுவத்தில் இசைக்கப்படும் ,"சாரே ஜஹாங் சே அச்சா ° என்ற பாடல் ஒலிபரப்பானதும், கூட்டம் எழுந்து நின்று இந்திய தேசிய கொடியை அசைத்து ஆராவரித்தது. "மதத்தால் மக்களை பிரிக்காதே.. நாட்டின் ஒற்றுமையை குலைக்கதே.." என முழக்கங்கள் அதிர்ந்தன. பழைய பெங்களுர் சாலை நெடுகிலும் கூட்டம் வழிந்து நின்றது. ஆயினும் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் கூட்டம் நாகரீகமாக கூடியிருந்தது. பல இந்து சமுதாய சகோதரர்கள் தொண்டர் அணியாக நின்று மக்களை ஒழுங்குப் படுத்தினர். கட்டிடங்களில் மேல் எல்லாம் கூட்டம் ஏறி நின்று மோடி - அமித் ஷாவுக்கு எதிராக ஆர்ப்பரித்தது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேசியதாவது:- "மோடிக்கும், அமித் ஷாவுக்கும் நாங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இந்துக்களையும், முஸ்லிம்களையும் நீங்கள் பிரிக்க நினைத்தீர்கள். இன்று உங்களுக்கு எதிராக நாங்கள் அண்ணன், தம்பிகளாக இணைந்து போராடுகிறோம். நீங்கள் கறுப்பு சட்டத்தை திணிக்க நினைத்ததால், இன்று நாங்கள் இந்தியர்களாக ஒன்று திரண்டு ஜனநாயகத்தை பாதுகாக்க போராடுகிறோம். கடந்த 72 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் பொருளாதாரம்
மதுக்கூரில் இஸ்லாமியக் கூட்டமைப்பின் சார்பில், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்தரங்கம்.!
#மஜகமாநிலப்பொருளாளர்_பங்கேற்பு.!! மதுக்கூர்.டிச.20.., மதுக்கூரில் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (20/12/2019) மாலை 6-மணிக்கு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு குடியுரிமை சட்டத்தின் பாதிப்புகள் குறித்து பேசினார். இந்நிகழ்ச்சியில் தமுமுக பொதுச்செயலாளர் ஹாஜா கனி, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பேச்சாளர் இமாம் ஹஸ்ஸான் பைஃஜி ஆகியோர் கருத்துரை வழங்கினர். இதில் மஜக மாநில துணை பொதுச் செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் பேராவூரணி அப்துல் சலாம், மாவட்டப் பொருளாளர் ஓரத்தநாடு பஷீர் அஹமது, தஞ்சை மத்திய மாவட்ட துணைச் செயலாளர் மைதீன், ஜித்தா மண்டல மு.பொருளாளர் அதிரை சேக், அதிரை நகரச் செயலாளர் அப்துல் சமது, துணைச் செயலாளர் அரபாஃத், மதுக்கூர் நகரச் செயலாளர் ரிபாஃயுதீன், துணைச் செயலாளர் மாஜி, சாகுல் ஹமிது, யஹ்யா ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மதுக்கூர் அனைத்து முஹல்லா ஜமாத்தார்கள், அனைத்து கட்சிகள் மற்றும் பெண்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தை மதுக்கூர் ஜமாத், கட்சிகள், இயக்கங்கள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்து
இன்றைய போராட்டங்கள் பாஸிஸ்டுகளிடமிருந்து இந்தியாவை மீட்பதற்கான_நடவடிக்கைகள்.! முதமிமுன்அன்சாரி MLA பேச்சு!
டிச.21, NRC மற்றும் CAA கருப்பு சட்டங்களுக்கு எதிராக கோவை மாநகரில் , கூட்டமைப்பு சார்பில் பிரம்மாண்டமான கண்டன மாநாடு நடைப்பெற்றது. முன்னதாக காலையில் வணிகர்கள் கடையை அடைத்து மத்திய அரசுக்கெதிராக தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தினர். மாலை நடைப்பெற்ற கண்டன மாநாடு காரணமாக கோவை மாநகரமே ஸ்தம்பித்து போனது. பாலக்காடு சாலை, பொள்ளாச்சி சாலை என எங்கும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இந்த சூழலில் மாநாட்டு பகுதிக்கு ஆம்புலன்ஸ் ஒன்று அலரியபடியே வந்தது. உடனே கூட்டத்தினர் அதற்கு வழிவிட்டு தங்கள் மனிதநேயத்தை வெளிப்படுத்தினர். அதுபோல் மற்றொரு சம்பவமும் எல்லோரையும் நெகிழ வைத்தது. அவ்வழியே ஐய்யப்ப சாமி பக்தர்கள் வந்ததும் முஸ்லிம்கள் அவர்களுக்குரிய மரியாதையை செய்து, அவர்கள் அப்பகுதியை கடந்து செல்ல உதவி செய்தனர். இதைகண்ட பத்திரிக்கையாளர்களும், காவல்துறையினரும் மனம்திறந்து அனைவரையும் பாராட்டினர். இந்த மாபெரும் கண்டன மாநாட்டில் பல்வேறு தரப்பினரும் வருகை தந்து தங்களது ஆதரவை நல்கினர். இம்மாநாட்டில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்று மத்திய அரசிற்கு எதிரான தனது கண்டனத்தை பதிவு செய்தார். அவரது உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு... இன்று சாதி, மத, மொழி பேதம் கடந்து, இந்திய
புதியகுடியுரிமை சட்டத்திருத்தத்தை திருத்தம்செய்யக்கோரி ஈரோட்டில்அனைத்து கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்!!
டிச,21 ஈரோடு மேற்குமாவட்டம் அனைத்து கூட்டமைப்பு சார்பாக குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் ஷானவாஸ் தலைமை தாங்கினார் சுன்னத் ஜமாத் தலைவர் டாக்டர் சாகுல்அமீத், ஜமாத் உறுப்பினர்கள் முன்னிலையில் வகித்தனர். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் SA சையது அஹமத் பாரூக், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் ராமன், மகபூப்பாஷா, கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், VPG குணசேகர், CPM பழனிச்சாமி, இந்திய. யூனியன் முஸ்லிம் லீக் ஹாத்திம்தாய், தமிழ்புலிகள் கட்சி செம்பன், ஜமாத்துல் உலமா செயலாளர் ஹஜ்ரத் கெளவுஸ் ரஷாதி, ஹஜ்ரத் ஜியாவூதீன், ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள், திரளானோர் கலந்து கொண்டனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #ஈரோடுமேற்குமாவட்டம் 20.12.19