மதுக்கூரில் இஸ்லாமியக் கூட்டமைப்பின் சார்பில், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்தரங்கம்.!

#மஜகமாநிலப்பொருளாளர்_பங்கேற்பு.!!

மதுக்கூர்.டிச.20..,

மதுக்கூரில் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (20/12/2019) மாலை 6-மணிக்கு கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு குடியுரிமை சட்டத்தின் பாதிப்புகள் குறித்து பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தமுமுக பொதுச்செயலாளர் ஹாஜா கனி, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பேச்சாளர் இமாம் ஹஸ்ஸான் பைஃஜி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

இதில் மஜக மாநில துணை பொதுச் செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் பேராவூரணி அப்துல் சலாம், மாவட்டப் பொருளாளர் ஓரத்தநாடு பஷீர் அஹமது, தஞ்சை மத்திய மாவட்ட துணைச் செயலாளர் மைதீன், ஜித்தா மண்டல மு.பொருளாளர் அதிரை சேக், அதிரை நகரச் செயலாளர் அப்துல் சமது, துணைச் செயலாளர் அரபாஃத், மதுக்கூர் நகரச் செயலாளர் ரிபாஃயுதீன், துணைச் செயலாளர் மாஜி, சாகுல் ஹமிது, யஹ்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மதுக்கூர் அனைத்து முஹல்லா ஜமாத்தார்கள், அனைத்து கட்சிகள் மற்றும் பெண்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தை மதுக்கூர் ஜமாத், கட்சிகள், இயக்கங்கள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.

தகவல்,
#மஜகதகவல்தெழில்நுட்பஅணி
#MJK_IT_WING
#தஞ்சைதெற்குமாவட்டம்.
20-12-2019