#கறுப்புச்சட்டங்களைதமிழகத்தில்திணிக்கநினைத்தால்தமிழர்கள்அதைகிழித்துஎறிவார்கள்! மஜகபொதுச்செயலாளர்
#
டிச.21,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் கூட்டமைப்பு சார்பில் அனைத்து சமூக மக்களும் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி நடைப்பெற்றது.
கூட்டத்தில் “நாமே இந்தியர் என்போம்’ என பொருள்படும் ராணுவத்தில் இசைக்கப்படும் ,”சாரே ஜஹாங் சே அச்சா ° என்ற பாடல் ஒலிபரப்பானதும், கூட்டம் எழுந்து நின்று இந்திய தேசிய கொடியை அசைத்து ஆராவரித்தது.
“மதத்தால் மக்களை பிரிக்காதே..
நாட்டின் ஒற்றுமையை குலைக்கதே..”
என முழக்கங்கள் அதிர்ந்தன.
பழைய பெங்களுர் சாலை நெடுகிலும் கூட்டம் வழிந்து நின்றது.
ஆயினும் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் கூட்டம் நாகரீகமாக கூடியிருந்தது.
பல இந்து சமுதாய சகோதரர்கள் தொண்டர் அணியாக நின்று மக்களை ஒழுங்குப் படுத்தினர்.
கட்டிடங்களில் மேல் எல்லாம் கூட்டம் ஏறி நின்று மோடி – அமித் ஷாவுக்கு எதிராக ஆர்ப்பரித்தது.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேசியதாவது:-
“மோடிக்கும், அமித் ஷாவுக்கும் நாங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்துக்களையும், முஸ்லிம்களையும் நீங்கள் பிரிக்க நினைத்தீர்கள். இன்று உங்களுக்கு எதிராக நாங்கள் அண்ணன், தம்பிகளாக இணைந்து போராடுகிறோம். நீங்கள் கறுப்பு சட்டத்தை திணிக்க நினைத்ததால், இன்று நாங்கள் இந்தியர்களாக ஒன்று திரண்டு ஜனநாயகத்தை பாதுகாக்க போராடுகிறோம்.
கடந்த 72 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் பொருளாதாரம் சீரழிந்திருக்கிறது. 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை இல்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன.
வற்றாத ஜீவ நதிகள் ஓடும் நாட்டில் விவசாயம் பாதிப்படைந்து, வெங்காயத்தை இறக்குமதி செய்யும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. விவசாயிகள் வாழ்வு நசிந்து கிடக்கிறது.
இந்த அதிருப்திகளை எல்லாம் மறைக்கவே, சர்ச்சைக்குரிய கறுப்பு சட்டங்களை கொண்டு வந்து நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பும் சூழ்ச்சிகளை செய்கிறார்கள்.
இதை அறிந்துக் கொண்ட மக்கள், மத்திய அரசுக்கு எதிராக கிளர்ச்சிகளை நடத்துகிறார்கள்.
இதை வன்முறை என ரஜினிகாந்த் கூறுகிறார். இவர்தான் தூத்துக்குடியில், பொதுமக்கள் ஸ்டர்லைட் ஆலைக்கு எதிராக போராடியபோது, அதை வன்முறை என கொச்சப்படுத்தினார். இவரது உபதேசம் எங்களுக்கு தேவையில்லை. இவர் தம்பி சித்தார்த்திடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
வங்கம், பீஹார், ஒரிசா, கேரளா, புதுச்சேரி அரசுகள் போல், தமிழகத்தில் இச்சட்டத்தை அமல் படுத்த மாட்டோம் என முதல்வர் எடப்பாடியார் அறிவிக்க வேண்டும்.
MGR, ஜெயலலிதா அம்மா ஆகியோரின் கொள்கைகளுக்கு எதிராக, ஈழத் தமிழர்களுக்கு துரோகமிழைக்கும் வகையில் இச்சட்டத்தை அதிமுக ஆதரித்துள்ளதை கண்டிக்கிறோம்.
இக்கறுப்பு சட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்த முனைந்தால், அதை தமிழர்கள் எதிர்ப்பார்கள். இதற்காக வரும் அதிகாரிகளை வீதிகளுக்குள் அனுமதிக்க மாட்டோம் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம்.
இது எங்கள் நாடு. எங்கள் மண். எல்லோரும் எங்கள் உறவுகள். இனியும் பிரித்தாளும் சூழ்ச்சியை அனுமதிக்க மாட்டோம்.”
இவ்வாறு அவர் கர்ஜித்தார்.
இந்நிகழ்வில் மஜக மாவட்ட பொருளாளர் எஸ் எம் சையது நவாஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் அமீன் சிக்கந்தர், மவட்ட துணை செயலாளர் சர்தார், அய்யூப் கான், ஒசூர் நகர செயலாளர் முகம்மது உமர், பொருளாளர் ஷபியுல்லா, துணை ஷேக் அன்சர், அன்வர், ரஜாக், தாவூது உள்ளிட்ட மஜக நிர்வாகிகள் திரளாக கலந்துக் கொண்டனர்.
தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கிருஷ்ணகிரி_மாவட்டம்.