இன்றைய போராட்டங்கள் பாஸிஸ்டுகளிடமிருந்து இந்தியாவை மீட்பதற்கான_நடவடிக்கைகள்.! முதமிமுன்அன்சாரி MLA பேச்சு!

டிச.21,

NRC மற்றும் CAA கருப்பு சட்டங்களுக்கு எதிராக கோவை மாநகரில் , கூட்டமைப்பு சார்பில் பிரம்மாண்டமான கண்டன மாநாடு நடைப்பெற்றது.

முன்னதாக காலையில் வணிகர்கள் கடையை அடைத்து மத்திய அரசுக்கெதிராக தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

மாலை நடைப்பெற்ற கண்டன மாநாடு காரணமாக கோவை மாநகரமே ஸ்தம்பித்து போனது. பாலக்காடு சாலை, பொள்ளாச்சி சாலை என எங்கும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இந்த சூழலில் மாநாட்டு பகுதிக்கு ஆம்புலன்ஸ் ஒன்று அலரியபடியே வந்தது. உடனே கூட்டத்தினர் அதற்கு வழிவிட்டு தங்கள் மனிதநேயத்தை வெளிப்படுத்தினர்.

அதுபோல் மற்றொரு சம்பவமும் எல்லோரையும் நெகிழ வைத்தது. அவ்வழியே ஐய்யப்ப சாமி பக்தர்கள் வந்ததும் முஸ்லிம்கள் அவர்களுக்குரிய மரியாதையை செய்து, அவர்கள் அப்பகுதியை கடந்து செல்ல உதவி செய்தனர். இதைகண்ட பத்திரிக்கையாளர்களும், காவல்துறையினரும் மனம்திறந்து அனைவரையும் பாராட்டினர்.

இந்த மாபெரும் கண்டன மாநாட்டில் பல்வேறு தரப்பினரும் வருகை தந்து தங்களது ஆதரவை நல்கினர்.

இம்மாநாட்டில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்று மத்திய அரசிற்கு எதிரான தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

அவரது உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு…

இன்று சாதி, மத, மொழி பேதம் கடந்து, இந்திய மக்கள் நடத்தும் உரிமைக்கான போராட்டங்கள் பாசிஸ்டுகளின் ஆணவ அரசியலுக்கு கிடைத்திருக்கும் மரண அடியாகும்.

பூட்டானிலும், நேபாளத்திலும் கிறிஸ்தவர்களுக்கு வழிப்பாட்டு உரிமைகள் மறுக்கப்படுகிறது.

இலங்கையில் ஆயிரம் இந்து கோயில்கள் இடிக்கப்பட்டு புத்த விகார்களாக அவை மாற்றப்பட்டுள்ளன. இலங்கை தமிழர்கள் மதத்தாலும், இனத்தாலும், மொழியாலும் மும்முனைத் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

அண்டை நாடுகளில் அங்குள்ள அரசியல் சூழல் பிடிக்காமல் இந்தியாவின் ஜனநாயகத்தை நேசித்து, எல்லையோரத்தில் இருக்கும் இந்திய வம்சாவளி முஸ்லிம்கள் இந்தியாவுக்கு திரும்ப விரும்புகின்றனர்.

இவர்களுக்கெல்லாம் புதிய குடியுரிமை திருத்த சட்டத்தில் அநீதி இழைக்கப்படுவதை கண்டித்து தான் மக்கள் போராடுகிறார்கள்.

அகதிகளில் பேதம் பார்க்க கூடாது. இதில் கூட பிரிவினை செய்கிறார்கள்.

சர்வாதிகார திமிரில் எதையும் இனி சாதிக்க முடியாது என மக்கள் இப்போது உணர்த்தியுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் ஆணவமான உடல் மொழியோடு பேசிய அமீத்ஷா ,இன்று டெல்லியின் வீதிகளுக்குள் வலம் வர முடியாமல் முடங்கி கிடக்கிறார்.

இந்த நிலையில் மக்களின் கிளர்ச்சியை வன்முறையாக சித்தரிக்கும் முயற்சிகள் நடக்கிறது.

திடீரென்று ரஜினிகாந்த் வன்முறை கூடாதென்று வசனம் பேசுகிறார்.

ஒரு முறை, விமான நிலையத்தில் குடி போதையில் போலீஸ்காரரை பெல்ட்டால் அடித்தவர் தான் இந்த ரஜினிகாந்த். இவர் மற்றவருக்கு உபதேசம் செய்யக்கூடாது.

பசுமாட்டின் பெயரால் கும்பல் படுகொலைகள் நடந்த போது அதை வன்முறை என்று ஏன் இவர் கண்டிக்கவில்லை? இவரின் உபதேசம் யாருக்கும் தேவையில்லை.

இன்று நடக்கும் போராட்டங்கள் இந்தியாவின் ஜனநாயகத்தை பாஸிஸ்டுகளிடமிருந்து மீட்பதற்கான ஒரு நடவடிக்கையாகும்.

சமூக நீதியையும், மனிதநேயத்தையும் பாதுகாக்க இந்துக்களும், முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும், தலித்துகளும் இணைந்து போராடுவது உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதுதான் இந்தியாவின் சிறப்பாகும். இதை பாதுக்காப்பதற்கே நாம் போராடுகிறோம்.

தமிழகத்தில் இச்சட்டத்தை அமல் படுத்த கூடாது. மீறி முயற்சித்தால் கடுமையாக எதிர்ப்போம். அதிமுக வரலாற்று தவறை செய்திருக்கிறது.

ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்கு , பிரபாகரனுக்கு அப்போதே MGR அவர்கள் 2 கோடி நிதி கொடுத்தார். ஜெயலலிதா அம்மா அவர்கள் ஈழத்தமிழர்களின் மீது கரிசனம் காட்டினார். இன்று அவர்களின் கொள்கைகளுக்கு எதிராக அதிமுக தலைமை ஈழத் தமிழர் விவகாரத்தில் செயல்பட்டு, அதிமுகவை புதை குழியில் தள்ளி விட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் பொதுச்செயலாளரோடு துணைப் பொதுச் செயலாளர் கோவை சுல்தான்அமீர், மாவட்ட செயலாளர் அப்பாஸ், பொருளாளர் TMS அப்பாஸ், MJTS மாநில செயலாளர் கோவை MH.ஜாபர்அலி, தகவல் தொழில்நுட்ப அணி மாநில பொருளாளர் ஹமீது ஜெகபர், துணை செயலாளர் கோவை சம்சுதீன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மேட்டுப்பாளையம் அப்பாஸ், காஜா மைதீன், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், KA.பாருக், முஸ்தபா, மற்றும் மாவட்ட நகர பகுதி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

தகவல் ;

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாவட்டம்.
20.12.19