சென்னை மண்ணடியில் JAQH அமைப்பின் சார்பில் மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக கண்டன பொதுக் கூட்டம் நடைப்பெற்றது. இதில் பங்கேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது "மோடி மதத்தால் மக்களை பிரிக்க நினைத்தார். இப்போது அவர் கொண்டு வந்த கறுப்பு சட்டங்களுக்கு எதிராக இந்துக்களும், முஸ்லிம்களும், கிறித்தவர்களும், தலித்துகளும் இணைந்து போராடுகிறார்கள். எங்களை இணைத்த மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்" என்றார். JAQH அமைப்பின் இம்முயற்சியை பாராட்டிய அவர், தற்போது மஸாயீல், சிந்தாந்த பேதங்களை முன்னிறுத்தாமல், சுன்னத், தவ்ஹீத், தப்லீக், என பேதம் பார்க்காமல் எல்லோரும் ஓரணியில் இணைவதை பாராட்டினார். மேலும் இது குறித்து தற்போது ஷியா ஜமாத்தோடும் தான் பேசி வருவதாகவும் கூறினார். தொடர்ந்து தேவர், வன்னியர், நாடார், தலித், யாதவர் உள்ளிட்ட பிற சமூக தலைவர்களோடும் பேசி வருவதாகவும், இந்த நாட்டின் பன்முக கலாச்சாரம், பொது ஒற்றுமையை காக்க எல்லோரும் ஒன்று பட்டு போராடுவதே காலத்தின் விருப்பம் என்றும் கூறினார். இதில் JAQH அமைப்பின் பொதுச் செயலாளர் நூர் முகம்மது உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சி
Tag: புதிய குடியுரிமை சட்ட திருத்தம்
குடியுரிமை சட்டத் திருத்தத்தை திருத்தம் செய்யக் கோரி திருச்சியில் தர்ணா போராட்டம்!!
திருச்சி:டிச.27., திருச்சி மாவட்ட அனைத்து கூட்டமைப்பு சார்பாக குடியுரிமை சட்டத் திருத்தத்தை திருத்தம் செய்யக்கோரி தர்ணா போராட்டம் தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்றது. கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்தில் மஜக-வின் சார்பாக பேராசிரியர் மைதீன், அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மஜக மாநில செயற்குழு உறுப்பினர் இப்ராஹிம் ஷா, அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார். இதில் மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி, அவர்கள் தலைமையில் மஜக வின் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டனர். இந்த தர்ணா போராட்டத்தில் பெண்கள் உட்பட திரளானோர் கைகளில் தேசிய கொடிகளை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். தகவல்: #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருச்சி_மாவட்டம் 27.12.19
திண்டிவனத்தில் குரியுரிமை சட்டத்திற்கு எதிரான எழுச்சிமிகு போராட்டம் : இபுராஹீம் பங்கேற்பு
#மஜகமாநிலதுணைசெயலாளர்நெய்வேலிஇபுராஹீம்பங்கேற்பு! டிச.25, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து வட்டார ஜமாத்துல் உலமா சபை ஒருங்கிணைத்த பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (டிச.24) நடைப்பெற்றது. எழுச்சியோடு நடைப்பெற்ற இப்போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாநில துணை செயலாளர் நெய்வேலி இப்ராஹீம் கண்டன உரையாற்றினார். இதில், மஜக விழுப்புரம் மாவட்ட செயலாளர் J.முஹம்மது ரிஸ்வான், தலைமை செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர் S.D.சையத்உசேன், திண்டிவனம் நகர செயலாளர் M.தமிமுன்அன்சாரி, துணை செயலாளர் M.சையத்அபுதாஹீர் உள்ளிட்டோர் தலைமையில் மஜகவினர் திரளாக கலந்து கொண்டனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #விழுப்புரம்_மாவட்டம்.
சிதம்பரத்தில் குடியுரிமைசட்டத்திற்கு எதிரான எழுச்சிமிகு போராட்டம் : ஜெய்னுலாபிதீன்பங்கேற்பு!
டிச.25, கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில்., குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து வட்டார ஜமாத்துல் உலமா சபை ஒருங்கிணைத்த கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (டிச.24) சிதம்பரம் காந்தி சிலை அருகில் நடைப்பெற்றது. இப்போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாநில துணை பொதுச் செயலாளர் மண்டலம் ஜெய்னுலாபிதீன் கண்டன உரையாற்றினார். இதில், மஜக கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஜாகிர் ஹுசைன், துணை செயலாளர்கள் ரபீக், ரியாஸ், அணி நிர்வாகிகள் நைனா, இக்பால், பாஷா, ஜாகிர் ஹுசைன், சதாம், முஸரப், பைசல், ஒன்றிய நிர்வாகிகள் காஜா மைதீன், ஹாஜா, சிதம்பரம் நகர நிர்வாகிகள் இப்ராம்ஷா, ஹபிபுல்லா, சதாம், தமீம் உள்ளிட்டோர் தலைமையில் மஜகவினர் திரளாக கலந்து கொண்டனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #கடலூர்தெற்குமாவட்டம்
இது இரண்டாவது சுதந்திர போராட்டம்: முதமிமுன் அன்சாரி MLA சூளுரை!
டிச 25, கிருஷ்ணகிரியில் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் CAA, NRC கறுப்பு சட்டங்களுக்கு எதிராக பிரம்மாண்டமான கண்டன ஆர்ப்பாட்டம் மாநாடு போல நடைப்பெற்றது. இதில் பங்கேற்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசிய உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு... https://m.facebook.com/story.php?story_fbid=2175390609227369&id=700424783390633 மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக நாள்தோறும் மக்கள் போராட்டங்கள் வலிமை பெற்று வருகின்றன. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் கூட அவர்களால் போராட்டங்களை அடக்க முடியவில்லை. நாட்டின் பல பகுதிகளில் இணைய தள சேவைகள் தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளன. தலைநகர் டெல்லியை சுற்றிலும் சாலைகள் மூடப்பட்டு, போக்குவரத்து சீர்குலைந்துள்ளது. பல மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.தினமும் பல விமான சேவைகள் ரத்தாகின்றன. மக்களின் போராட்டங்களால் தலைநகர் டெல்லியிலேயே இந்த நிலை என்றால், நாட்டின் பிற பகுதிகளில் நிலவும் சூழல் என்னவென யூகிக்கலாம். பாஜக ஆளும் மாநிலங்களில் கிளர்ச்சிகளில் ஈடுபட்ட மக்கள் மீது நடைப்பெற்ற துப்பாக்கி சூடுகளில் இந்துக்கள், முஸ்லிம்கள் என 21 பேர் உயிர் தியாகம் செய்துள்ளனர். டெல்லியில் அராஜகம் செய்த போலிஸ் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இருக்கிறது. ஆயினும் போராட்டங்கள் பெருகியபடியே செல்கிறது. மத்திய அரசு திணறுகிறது. தமிழகம்