நிவர் புயலால் பெய்து வரும் தொடர் அதி தீவிர கனமழை காரணமாக சென்னையில் பல பகுதிகள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. இந்நிலையில் வட சென்னை கிழக்கு மாவட்டத்தில் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, பல குடும்பங்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.
இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று, அவர்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு அவர்களுக்கு தேவையான உணவுகளையும் விநியோகித்தார்.
பொருளாளர் உடன் மாநில துணை செயலாளர் ஷமீம் அகமது, மருத்துவ சேவை அணி மாநில துணைச் செயலாளர் அப்துல் ரஹ்மான், வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் தாரிக், துறைமுகம் அலி, துறைமுகம் குப்பை சீனி, தமிம் அன்சாரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#CycloneNivar
#களத்தில்_மஜக
25-11-2020