திண்டுக்கல்.டிச.04.., மனிதநேய ஜனநாயக கட்சியின் கடும் முயற்சியால் ஆயுல் சிறைவாசி திண்டுக்கல் மீரான் மைதீன் அவர்கள் விடுதலை பெற்று நேற்று வீடு திரும்பினார். அவர்களை திண்டுக்கல் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் வரவேற்று வீட்டிற்க்கு அழைத்து சென்றனர். நெகிழ்ச்சியாக நடைபெற்ற இந்த நிகழ்வில் திண்டுக்கல் மீரான் மைதீன் அவர்கள் சட்டமன்றத்தில் தொடர்ந்து தனது விடுதலைக்காக பேசிய மஜக-வின் பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கும், மஜக-வின் தொடர் முயற்சிகளுக்கும் நன்றி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திண்டுக்கல் 03-12-2019
Tag: மு.தமிமுன் அன்சாரி MLA
நாகூரில்பெண்கள்கல்லூரி அமையும்..! அமைச்சர் மற்றும் நாகை MLA உறுதி
நாகை.டிச.01.., நாகூரில் பிரபல மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளி விழா ஆண்டு நிறைவு விழா வெகு சிறப்பாக நடைப்பெற்றது. பள்ளியின் தாளாளர் ஷேக் தாவூது மரைக்காயர் அவர்கள் தலைமையில் விழா சிறக்க, அமைச்சர் திரு.OS.மணியன் அவர்களும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். நிகழ்வில் இருவரும் மரக்கன்றுகள் நட்டனர். விழாவிற்கு வந்த அனைவருக்கும் விதைப்பந்துகள் வழங்கி பள்ளி நிர்வாகம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. மழை சாரல்களுக்கிடையே மாலை, இரவு நிகழ்ச்சிகளாக, மாணவ, மாணவிகளின் கண்கவர் நிகழ்ச்சிகளும், வாணவேடிக்கைகளும் நடைப்பெற்றது. பள்ளியின் பணிகள், சேவைகள், சாதனைகள் அடங்கிய குறும்படமும் ஒளிபரப்பானது. மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகளுக்கு கேடயங்கள், பாராட்டு சான்றிதழ்கள், வழங்கப்பட்டது. இதில் பேசிய அமைச்சர் திரு.OS.மணியன் அவர்கள், மாடர்ன் மெட்ரிக் பள்ளியின் சாதனைகளை புகழ்ந்து, தாளாளர் ஷேக் தாவூது மரைக்காயரின் பணிகளை பாராட்டினார். பிறகு அவர் பேசும் போது நாகூருக்கு ஒரு பெண்கள் கல்லூரியை நிச்சயம் கொண்டு வருவோம் என்றவர், தானும், சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரியும் இணைந்து இப்பணியை செய்வோம் என்றும், இதற்காக 5 ஏக்கர் இடம் மட்டும் தந்தால் போதும்
சமகால அரசியல் மற்றும் சூழ்ச்சிகளை எதிர்கொள்ள புதிய யுக்திகள் தேவை..! : மஜக தலைமை நிர்வாகக் குழுவில் முடிவு..!!
சென்னை.நவ.28.., மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் இன்று (28.11.2019) பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA தலைமையில், சென்னையில் நடைப்பெற்றது. இதில் பொருளாளர் ஹாரூன் ரசீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர், இணைப் பொதுச் செயலாளர் JS.ரிபாயி, துணைப் பொதுச் செயலாளர்கள் மன்னை.செல்லச்சாமி, மதுக்கூர்.ராவுத்தர்ஷா, மண்டலம்.ஜெய்னுலாபுதீன், தைமிய்யா, மாநிலச் செயலாளர்கள் நாச்சிக்குளம் தாஜ்தீன், ராசுதீன் ஆகியோரும் பங்கேற்றனர். அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின் வருமாறு. தீர்மானம் 1: கடந்த நவம்பர்-9 அன்று பாபர் மஸ்ஜித் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்பது சட்டத்தின் அடிப்படையில் அமையாமல் நம்பிக்கைகளின் அடிப்படையில் வழங்கப்பட்டிருப்பது பெருத்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் தருகிறது. இனிவரும் பல வழக்குகளின் தீர்ப்புகளுக்கு இது தவறான முன்னோட்டமாக அமைந்து விட்டதே என்ற கவலையை இந்நிர்வாகக் குழு விரிவாக ஆய்வு செய்தது. ஜனநாயகம், அரசியல் சாசனசட்டம், மதச்சார்பின்மை ஆகியவற்றின் கோட்பாடுகளுக்கு இத்தீர்ப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை பல கோணத்திலும் இந்நிர்வாகக் குழு விவாதித்து ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்துகிறது. https://m.facebook.com/story.php?story_fbid=2120599028039861&id=700424783390633 தீர்மானம்:2 கடந்த 1993 முதல் பாபர் மஸ்ஜித் வழக்கிற்காக நீதி கேட்டுப் போராடியவர்கள் இத்தீர்ப்பை கண்டு பதறிப் போய் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள்.
அனைவருக்கும் பொதுவானவர் நபிகள் நாயகம்! மு.தமிமுன் அன்சாரி MLA., பேச்சு!
நவ.25, திருச்சி - தென்னூர் வட்டார ஜமாத்துல் உலமாவும், ஜெனரல் பஜார் மற்றும் பென்ஷனர் தெரு மஸ்ஜித் நிர்வாகமும் இணைந்து நடத்திய மீலாது சமூக நல்லிணக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜமாத்துல் உலமா சபை திருச்சி மண்டல பொறுப்பாளர் மௌலானா முஹம்மது மீரான் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் சென்னை கோடம்பாக்கம் ரஹ்மானியா மஸ்ஜித் தலைமை இமாம் சதக்கத்துல்லா பாக்கவி கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். திருச்சி மாநகரில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட பள்ளிகளின் முத்தவல்லிகளும், உலமாக்களும், ஜமாத்துகளும் திரண்டிருந்த அந்த நிகழ்வில், அவர் ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு:- இந்த சமூக நல்லிணக்க விழாவை இனி திறந்த வெளியில் நடத்திட நீங்கள் முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேடையில் பேசுபவர்களிலும், பார்வையாளர்களிலும் சரி பாதியாக சகோதர சமூகங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்குமாறு திட்டமிட்டால், அது பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன். அடுத்த வருடம் இது போன்ற ஒன்று கூடலை எல்லோரும் சேர்ந்து உழவர் சந்தை திடலில் நடத்திட
வடகரை ஊராட்சிக்கு 55 லட்சம் மதிப்பிலான திட்டங்களுக்கு ஏற்பாடு : மு.தமிமுன் அன்சாரி MLA
நாகை தொகுதிக்கு உட்பட்ட திருமருகல் ஒன்றியம் வடகரை ஊராட்சிக்கு மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வருகை தந்தார். அங்கு பொது மக்கள் பெரியோர்களை சந்தித்து மனுக்களை பெற்றார். இங்கு உயர்நிலை தண்ணீர் தேக்க தொட்டி, 300 மீட்டர்க்கு தார் சாலை அமைத்தல், போர் வெல், புதிதாக மின்மாற்றி அமைத்தல், NRGC திட்டத்தின் கீழ் சுமார் முப்பது லட்சத்திற்கு குளத்தை சரி செய்து படித்துரை அமைத்தல் போன்ற சுமார் 55 லட்சம் மதிப்பிலான திட்டங்களுக்கு ஏற்பாடு செய்தார். அங்கியிருந்த படியே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பிறகு ஐமாத்தார்கள் பொது மக்கள் MLA அவர்களுக்கு நன்றியினை தெரிவித்து கொண்டனர் தகவல் மஜக வடகரை ஊடக பிரிவு