நாகூரில்பெண்கள்கல்லூரி அமையும்..! அமைச்சர் மற்றும் நாகை MLA உறுதி


நாகை.டிச.01..,

நாகூரில் பிரபல மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளி விழா ஆண்டு நிறைவு விழா வெகு சிறப்பாக நடைப்பெற்றது.

பள்ளியின் தாளாளர் ஷேக் தாவூது மரைக்காயர் அவர்கள் தலைமையில் விழா சிறக்க, அமைச்சர் திரு.OS.மணியன் அவர்களும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

நிகழ்வில் இருவரும் மரக்கன்றுகள் நட்டனர். விழாவிற்கு வந்த அனைவருக்கும் விதைப்பந்துகள் வழங்கி பள்ளி நிர்வாகம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

மழை சாரல்களுக்கிடையே மாலை, இரவு நிகழ்ச்சிகளாக, மாணவ, மாணவிகளின் கண்கவர் நிகழ்ச்சிகளும், வாணவேடிக்கைகளும் நடைப்பெற்றது.

பள்ளியின் பணிகள், சேவைகள், சாதனைகள் அடங்கிய குறும்படமும் ஒளிபரப்பானது.

மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகளுக்கு கேடயங்கள், பாராட்டு சான்றிதழ்கள், வழங்கப்பட்டது.

இதில் பேசிய அமைச்சர் திரு.OS.மணியன் அவர்கள், மாடர்ன் மெட்ரிக் பள்ளியின் சாதனைகளை புகழ்ந்து, தாளாளர் ஷேக் தாவூது மரைக்காயரின் பணிகளை பாராட்டினார்.

பிறகு அவர் பேசும் போது நாகூருக்கு ஒரு பெண்கள் கல்லூரியை நிச்சயம் கொண்டு வருவோம் என்றவர், தானும், சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரியும் இணைந்து இப்பணியை செய்வோம் என்றும், இதற்காக 5 ஏக்கர் இடம் மட்டும் தந்தால் போதும் என்றார்.

மு.தமிமுன் அன்சாரி MLA பேசும் போது, நாகூரில் கிரசண்ட் மற்றும் மாடர்ன் மெட்ரிக் பள்ளி ஆகியன பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான இடங்களாக உள்ளதாக சுற்றுவட்டார மக்கள் பாராட்டுகிறார்கள் என கூறினார்.

கல்வி கற்கும் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு இப்போது கேள்விக்குறியாகி உள்ளதால், நாகை தொகுதியில், உயர் கல்வி படிக்க விரும்பும் மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் நலன் கருதியே, நாகூரில் பெண்கள் கல்லூரியை தொடங்க வேண்டும் என சட்டமன்றத்தில் வலியுறுத்தியதாக கூறினார்.

தானும், அமைச்சரும் இதை சாதித்து தருவோம் என்றவர், இதன் மூலம் நாகை தொகுதியை தாண்டி. வேதாரண்யம், திருப்பூண்டி , திருத்துறைப்பூண்டி, திருவாரூர் வரை பேருந்து வசதிகள் மூலம் மாணவிகள் வந்து பயிலவும் வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றார்.

மேலும் அங்கு நன்கொடைகள் மூலம் மாணவிகளுக்கு விடுதியும் உருவாக்க முடியும் என்றார்.

இதற்கு ஷேக் தாவூது மரைக்காயரும், நாகூர் பொது நல ஆர்வலர்களும் துணை நின்று அதற்கான இடத்தை அளிக்க வேண்டும் என்றார்.

மாடர்ன் மெட்ரிக் பள்ளியின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா நிறைவு நிகழ்ச்சி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களுடன் எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் நடைப்பெற்று முடிந்தது.

இதில் நாகப்பட்டினம் மாவட்ட கூட்டுறவு சங்க தலைவர் தங்க.கதிரவன், வழக்கறிஞர் அபுதல்ஹா, வழக்கறிஞர் பாண்டியன், அரசு வழக்கறிஞர் பரமானந்தம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், கல்வி கண்காணிப்பாளர் ராமநாதன், பள்ளி தலைமையாசிரியை ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

தகவல்,
#நாகைசட்டமன்றஉறுப்பினர்_அலுவலகம்.
30-11-2019