நாகை ஒன்றியத்தில் மழை கால பணிகள்,மு.தமிமுன் அன்சாரி MLA நேரடி ஆய்வு!

டிச 2

நாகை தொகுதிக்குட்பட்ட நாகை ஒன்றியத்தில் மழை கால அவசர பணிகளை மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

ஃபேஸ் புக், மற்றும் வாட்ஸ் அப் மூலம் வந்த கோரிக்கைகள் மற்றும் புகார்களையும் கவனமெடுத்து, நடவடிக்கை மேற்கொண்டார்.

நாகை முதல் ஆழியூர் வரை தேசிய நெடுஞ்சாலை ஆங்கங்கே சேதமாகி உள்ளதால், மஞ்சக் கொல்லை, பொரவச்சேரி, சிக்கல் ஆகிய ஊர்களுக்கு சென்று பார்வையிட்டு ,NHAl அதிகாரிகளை தொடர்ப்பு கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கூறினார்.

பிறகு BD0 அவர்களையும் தொடர்பு கொண்டு தற்காலிக ஏற்பாடுகளை தங்கள் தரப்பில் செய்து தருமாறு கேட்டுக் கொண்டார்.

பிறகு ஆழியூர் சென்று அங்கு பள்ளிக் கூட வளாகத்தில் குளம் நிறைந்து தண்ணீர் வழிந்ததால், மாணவர்கள் போய் வர சிரமப்படுகின்றனர்.

அங்கிருந்தப்படியே BDO வை தொடர்பு கொண்டு , மண் கொட்டி அங்கு பாதையை சரி செய்து கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து சிக்கல் சென்று, அங்கு பேருந்து நிழலகம் அமையும் இடத்தை பார்வையிட்டு , ஆக்ரமிப்புகளை பாராபட்சமின்றி அகற்றுமாறும் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

நாகை ஒன்றியத்தில் போன் மூலம் வந்த புகார்களையெல்லாம் கவனமெடுத்து, அவற்றுக்கும் நடவடிக்கைளை மேற்கொண்டார்.

தகவல்,

நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்