ஜன 10 இன்று சென்னை சைதாப்பேட்டையில் CAA, NRC, NPR சட்டங்களை எதிர்த்து கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேசியதாவது.. மத்திய அரசுக்கு எதிரான மக்களின் இப் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. எனவே இதில் பங்கேற்கும் தலைவர்கள் பொறுப்புணர்வுடன் பேச வேண்டும் . உங்கள் கருத்துகள் பிறரை போராட்டத்திற்கு ஆதரவாக மாற்றும் வகையில் இருக்க வேண்டும் . போராட்டங்களில் அனைவரும் முழங்கும் வகையில் பொதுவான முழக்கங்களை எழுப்ப வேண்டும் . ஒரு சார்பு முழக்கங்களையும், கொள்கை சார்ந்த முழக்கங்களை தவிர்க்க வேண்டும் . ஃபாஸிசத்தை ஒழிப்போம்; சமூக நீதி காப்போம் ஜெய்ஹிந்த், இந்தியா ஜிந்தாபாத், இன்குலாப் ஜிந்தாபாத், மக்கள் ஒற்றுமை ஒங்குக போன்ற முழக்கங்களை எழுப்புங்கள் அல்லது கை தட்டி ஆதரவுகளை வழங்குங்கள் . ஃ பாஸிஸ்டுகளுக்கு எதிரான இப்போராட்டம் இந்தியாவை பாதுகாக்க நடத்தப்படுகிறது எனவே, அனைவரையும் உள்ளடக்கிய இந்த இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை பொது தன்மையோடு முன்னெடுப்பதில் அனைவரும் அக்கறை காட்ட வேண்டும் . இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான மஜகவினரும் பங்கேற்றனர். சைதாப்பேட்டை பகுதியில் ஆர்ப்பாட்ட கூட்டம்
Tag: புதிய குடியுரிமை சட்ட திருத்தம்
அம்பேத்கரின் அரசியல் சாசனங்களை அழித்து பாஜக கொண்டு வந்துள்ள கருப்புச் சட்டங்களை விரட்டியடிப்போம்!
#மேட்டுப்பாளையத்தில் மஜக பொருளாளர் எஸ்எஸ் ஹாருண்ரஷீது சூளுரை!! ஜனவரி.10., மத்திய அரசு கொண்டு வந்துள்ள கருப்பு சட்டங்களான CAA, NRC -க்கு எதிராக இந்தியா முழுவதும் மக்கள் எழுச்சியால் அமைதி வழியில் போராட்டங்கள் பேரணிகள் மற்றும் மாபெரும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதை தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் அனைத்து கூட்டமைப்புகள் சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு பேசும் போது CAA, NRC போன்ற கருப்பு சட்டங்களுக்கு எதிராக மக்களின் போராட்டங்கள் மேலும் வீரியமடைய வேண்டும் என்று கூறினார், மேலும், அவர் பேசும் போது அம்பேத்கரின் அரசியல் சாசனங்களை அழித்து பாஜக கொண்டு வந்துள்ள இந்த கருப்புச் சட்டங்களை நாட்டை விரட்டியடிக்க வேண்டும் என்றும் NPR. NRC.போன்ற விவரங்களை கேட்டு நம்முடைய பகுதிகளுக்குள் யார் வந்தாலும் அவர்களை விரட்டியடிக்க வேண்டும் என்று கூறினார். இப்பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, மமக தலைவர் ஜவாஹிருல்லாஹ், மற்றும் அனைத்து ஜமாத், கட்சிகள், மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் பெரும் திரளான ஆண்களும் பெண்களும்
போராட்டத்தில் இருந்து நாங்களும் ஒரு அங்குலம் கூட பின் வாங்கமாட்டோம்…!! எஸ்எஸ்ஹாரூன்ரசீது அமீத்ஷாவிற்கு பதிலடி.
திருப்பூர்., ஜனவரி.07., மத்திய அரசு கொண்டு வந்துள்ள கருப்பு சட்டங்களான CAA, NRC -க்கு எதிராக இந்தியா முழுவதும் மக்கள் எழுச்சியால் அமைதி வழியில் போராட்டங்கள் பேரணிகள் மற்றும் மாபெரும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனடிப்படையில் 06.01.2020 அன்று மாலை 4.00 மணியளவில் திருப்பூர் மாவட்ட காங்கேயம் சிடிசி ரவுண்டானத்தில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு பேசும் போது CAA, NRC போன்ற கருப்பு சட்டங்களுக்கு எதிராக மக்களின் போராட்டங்கள் மேலும் வீரியமடையும் என்று கூறினார், மேலும், அவர் பேசும் போது உள்துறை அமைச்சர் அமித்ஷா எவ்வளவு போராட்டம் நடந்தாலும் சட்டத்தை அமுல்படுத்துவதில் பின்வாங்க மாட்டோம் என்று கூறுகிறார், நாங்களும் கூறுகிறோம் சட்டத்தைத் திரும்பப் பெறும்வரை எங்களுடைய போராட்டத்தில் இருந்து ஒரு அங்குலம் கூட பின்வாங்க மாட்டோம் என்று கூறினார். இப்பொதுக்கூட்டத்தில் அனைத்து கட்சி & இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் பெரும் திரளான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டார்கள். இக்கூட்டத்தில் இந்திய தேசமக்களை கூறுபோடும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை குப்பையில் வீசுவோம்...!! தேசத்தை காத்திட சனாதன பாசிசம்
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கம்பத்தில் CAA மற்றும் NRCக்கு எதிரானகூட்டமைப்பு சார்பில் கண்டன பொதுக்கூட்டம், ஷமீம் அகமது கண்டன உரையாற்றினார்!
ஜன.07., தேனி மாவட்டம் கம்பத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இரண்டாம் கட்டமாக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் வாவேர் பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் MBM. பதுரூதின், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் ஷமீம்அகமது, அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இந்நிகழ்வில் ஜமாஅத்துல் உலமா சபை மாநில துணைத்தலைவர் அலாவுதீன் மிஸ்பஹி ஹஜ்ரத், தமுமுக ஹாஜா கனி, இந்திய யூனியன் யூத் லீக் மாநில தலைவர் யூனுஸ் , இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பொது செயலாளர் முஹம்மது சித்திக், இந்திய தேசிய லீக் பொதுச் செயலாளர் ராஜா உசேன், மனிதநேய மக்கள் முன்னேற்றக்கழகம் பாளை ரபிக், ஆகியோர் பங்கேற்றனர். மஜக சார்பில் தேனிமாவட்ட செயலாளர் ரியாஸ்,மாவட்ட பொருளாளர் சேக், மாநில செயற்குழு உறுப்பினர் கரீம்,மாவட்ட துணைச்செயலாளர் கம்பம் கலில், கம்பம் ஒன்றிய செயலாளர் ரபீக், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அபுப்க்கர் சித்திக், பெரியகுளம் நகர செயலாளர் தஸ்திக் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அசரப்ஒலி மற்றும் மாவட்ட,நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தேனி_மாவட்டம் 05.01.2020
கல்பாக்கத்தில்CAA NRC NPRக்குஎதிராக கண்டனபேரணி மற்றும் பொதுக்கூட்டம்..! தைமிய்யா கண்டன உரை..!
செங்கை.06.., மத்திய அரசு கொண்டு வந்துள்ள கருப்பு சட்டங்களான CAA, NRC-க்கு எதிராக கல்பாக்கத்தில் அனைத்து இயக்கம் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பாக கண்டன பேரணி & பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கண்டன பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா M.SC அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இக்கூட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆதி அரசன், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மஜக மாவட்டச் செயலாளர் கல்பாக்கம் ரஷீத, ஜமாத் தலைவர்கள் நயினா முகம்மது, பக்கீர் முகம்மது உள்ளிட்ட அனைத்து கட்சி மற்றும் அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #செங்கல்பட்டு 05-01-2020