ஜன.07.,
தேனி மாவட்டம் கம்பத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இரண்டாம் கட்டமாக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் வாவேர் பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் MBM. பதுரூதின், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் ஷமீம்அகமது, அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
இந்நிகழ்வில் ஜமாஅத்துல் உலமா சபை மாநில துணைத்தலைவர் அலாவுதீன் மிஸ்பஹி ஹஜ்ரத், தமுமுக ஹாஜா கனி, இந்திய யூனியன் யூத் லீக் மாநில தலைவர் யூனுஸ் , இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பொது செயலாளர் முஹம்மது சித்திக், இந்திய தேசிய லீக் பொதுச் செயலாளர் ராஜா உசேன், மனிதநேய மக்கள் முன்னேற்றக்கழகம் பாளை ரபிக், ஆகியோர் பங்கேற்றனர்.
மஜக சார்பில் தேனிமாவட்ட செயலாளர் ரியாஸ்,மாவட்ட பொருளாளர் சேக், மாநில செயற்குழு உறுப்பினர் கரீம்,மாவட்ட துணைச்செயலாளர் கம்பம் கலில், கம்பம் ஒன்றிய செயலாளர் ரபீக், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அபுப்க்கர் சித்திக், பெரியகுளம் நகர செயலாளர் தஸ்திக் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அசரப்ஒலி மற்றும் மாவட்ட,நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.
தகவல்
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தேனி_மாவட்டம்
05.01.2020