JNU மாணவர்களுக்கு ஆதரவாக சென்னையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்..! மு.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்று ஆதரவு


சென்னை.ஜனவரி.07..,

டெல்லி JNU பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து முகமூடி அணிந்த மதவெறி கும்பல் மாணவர்கள், பேராசிரியர்கள் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து நாடெங்கிலும் போராட்டம் பரவலாக வெடித்துள்ளது.

இது தொடர்பாக சென்னையில் முகநூல் மூலம் அழைப்பு விடுத்து பெரும் கூட்டம் வள்ளுவர் கோட்டம் அருகே (06-01-2020) இரவு 7-மணி அளவில் கூடியது.

மெழுகுவர்த்தி ஏந்தி JNU மாணவர்களுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.

சற்று நேரத்தில் முகநூல் மூலமாக சுமார் 1000 பேர் கூடி விட்டனர்.

RSS, ABVP ஆகியவற்றின் வன்முறைகளுக்கு எதிராக மக்கள் ஆவேச முழக்கங்களை எழுப்பிய வண்ணம் கொந்தளித்தனர்.

சில மணி நேரங்களில் இளைஞர்களும், மாணவர்களும் அதிக அளவில் அப்பகுதியில் திரண்டிருந்தனர்.

இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று ஆதரவளித்தார்.

ABVP அமைப்பின் விஷ கருத்துகளும், வன்முறைகளும் நாட்டை சீர்குலைத்து விடும் என்பதால், JNU மாணவர்களுக்கு ஆதரவாக நாங்கள் நிற்போம் என்றும், இது எம் ஜனநாயக கடமை என்றும் செய்தியாளர்களிடம் கூறினார்.

தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மத்தியசென்னைகிழக்கு
06-01-2020

Top