ஜனவரி 21 தஞ்சையில் பச்சைக்கொடி பேரணி டெல்டா மாவட்டங்களில் மஜக முன்னெடுத்த துண்டு பிரசுர பரப்புரை!


ஜன.20

மத்திய அரசின் 3 உழவர் ஒழிப்பு சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுத்தும் காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் நாளை ஜனவரி 21 அன்று தஞ்சாவூரில் பச்சைக் கொடி பேரணி நடைபெற உள்ளது.

இதற்கு மனிதநேய ஐனநாயக கட்சி கள ஆதரவு அளித்துள்ளது.

அதன் அடிப்படையில் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, புதுகை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கும்பகோணம், கடலூர், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் மஜக சார்பில் துண்டு பிரசுரங்களை நேற்றும், இன்றும் விநியோகித்து பரப்புரையானது நடைப்பெற்றது.

ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கடைவீதிகள், மக்கள் கூடுமிடங்களில் துண்டு பிரசுர பரப்புரை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#டெல்டா_மாவட்டங்கள்.