போராட்டத்தில் இருந்து நாங்களும் ஒரு அங்குலம் கூட பின் வாங்கமாட்டோம்…!! எஸ்எஸ்ஹாரூன்ரசீது அமீத்ஷாவிற்கு பதிலடி.


திருப்பூர்., ஜனவரி.07.,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள கருப்பு சட்டங்களான CAA, NRC -க்கு எதிராக இந்தியா முழுவதும் மக்கள் எழுச்சியால் அமைதி வழியில் போராட்டங்கள் பேரணிகள் மற்றும் மாபெரும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதனடிப்படையில் 06.01.2020 அன்று மாலை 4.00 மணியளவில் திருப்பூர் மாவட்ட காங்கேயம் சிடிசி ரவுண்டானத்தில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு பேசும் போது CAA, NRC போன்ற கருப்பு சட்டங்களுக்கு எதிராக மக்களின் போராட்டங்கள் மேலும் வீரியமடையும் என்று கூறினார்,

மேலும், அவர் பேசும் போது உள்துறை அமைச்சர் அமித்ஷா எவ்வளவு போராட்டம் நடந்தாலும் சட்டத்தை அமுல்படுத்துவதில் பின்வாங்க மாட்டோம் என்று கூறுகிறார், நாங்களும் கூறுகிறோம் சட்டத்தைத் திரும்பப் பெறும்வரை எங்களுடைய போராட்டத்தில் இருந்து ஒரு அங்குலம் கூட பின்வாங்க மாட்டோம் என்று கூறினார்.

இப்பொதுக்கூட்டத்தில் அனைத்து கட்சி & இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் பெரும் திரளான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டார்கள்.

இக்கூட்டத்தில் இந்திய தேசமக்களை கூறுபோடும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை குப்பையில் வீசுவோம்…!! தேசத்தை காத்திட சனாதன பாசிசம் விழ்த்திடுவோம் என கோஷங்கள் எழுப்பட்டது.

தகவல்
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருப்பூர்_மாவட்டம்
06.01.2020