ஜன.21, கூத்தாநல்லூரில் கூட்டமைப்பு சார்பில் இம்தாதுல் முஸ்லிமீன் சபை நடத்திய குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு விளக்க கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராகவும், கறுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் எழுச்சிமிகு கண்டன உரை நிகழ்த்தினார். மஜக மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் பேசுகையில், 'இந்த சட்டத்திற்கு எதிராக இன்று உலமாக்களும் அரசியல் கட்சி இயக்கங்களுடைய தலைவர்களும் ஒரே அணியில் நிற்கிறார்கள் யாராவது கணக்கெடுப்பு நடத்த வந்தால் அந்தத் தலைவர்களின் உத்தரவுபடி செயல்படுங்கள் தலைவர்களின் உத்தரவு இல்லாமல் தங்களுடைய விபரங்களை வழங்க வேண்டாம்' என்று கோரிக்கை வைத்தார். இந்நிகழ்வுகளில், மாநில துணைச் செயலாளர் துரை முகம்மது, மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக், மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லாஹ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜம்ஜம் சாகுல், ஜெய்னுல்லாபுதின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துக் கொண்டனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருவாரூர்_மாவட்டம். 20/01/2020
Tag: புதிய குடியுரிமை சட்ட திருத்தம்
சிவகாசியில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்..! மன்னைசெல்லச்சாமி பங்கேற்பு
விருதுநகர்.ஜன.20.., சிவகாசி வட்டார அனைத்து ஜமாத், கட்சி மற்றும் இயக்கங்களின் சார்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக சிவகாசி பாவடித்தோப்பு திடலில் பிரம்மாண்ட கண்டன பொதுக்கூட்டம் நேற்று (19-01-2020) நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொதுச் செயலாளர் மன்னை.செல்லச்சாமி அவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசு கொண்டுவந்துள்ள மக்கள் விரோத சட்டங்களை கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினார். இக்கூட்டத்தில் விருதுநகர் மாவட்டச் செயலாளர் கண்மணி காதர் தலைமையில் திரளான மஜகவினர் பங்கேற்றனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #விருதுநகர்_மாவட்டம் 19-01-2020
நாகூர் தர்கா அலங்கார வாசலில் குடியுரிமை சட்டத்திற்கெதிராக அடையாள தர்ணா! தைமிய்யாபங்கேற்பு!
ஜன.20, நாகூரில், அம்பேத்கார் மக்கள் புரட்சி மன்றம் ஒருங்கிணைத்த குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் தர்கா அலங்கார வாசலில் நடைப்பெற்றது. இப்போராட்டத்தில் மஜக சார்பில் துணைப் பொதுச்செயலாளர் தைமிய்யா கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். கையில் தேசிய கொடியேந்தி போராட்டக்காரர்கள் தரையில் அமர்ந்து அடையாள தர்ணாவில் ஈடுப்பட்டனர். தொடர்ந்து குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும், பல்வேறு கட்சி, அமைப்பு , சமூக நல இயக்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்று தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். இதில், மஜக மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ், நாகூர் நகர செயலாளர் அபுசாலி சாஹிப், மஹ்மூது இபுராஹீம் மற்றும் நகர நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்களும், பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகைதெற்குமாவட்டம். 19/01/2020
மஜக சார்பாக இளையான் குடியில் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக பிரம்மாண்ட கண்டன பொதுக்கூட்டம் தலைவர்கள் எழுச்சிஉரை..!
சிவகங்கை.ஜனவரி.19., மத்திய அரசு பொறுப்பேற்ற காலத்திலிருந்து இதுவரை சுமார் ஏழு ஆண்டுகளுக்குள் தொடர்ந்து நாட்டு மக்கள் மத்தியிலே பிளவுகளை ஏற்படுத்தியும், குறிப்பாக சிறுபான்மை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த கூடிய முத்தலாக் சட்டம், பாபர் மசூதி தீர்ப்பு, உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, அதன் தொடர்ச்சியாக தற்போது குடியுரிமை திருத்த சட்டங்களை கொண்டு வந்துள்ளது. மத்திய அரசின் இந்த மக்கள் விரோத போக்கை கண்டித்து நாடெங்கிலும் பல்வேறு விதமான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, நேற்று (18.01.2020) சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் வாள்மேல் நடந்த அம்மன் கோயில் திடலில் நகர செயலாளர் உமர் கத்தாப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராகவும், கறுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் எழுச்சிமிகு கண்டன உரை நிகழ்த்தினார். மேலும் இப்போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தோழர் தி.வேல்முருகன், அய்யா தர்மயுக வழிப்பேரவை நிறுவனத் தலைவர் பி.பாலமுருகன், மஜக தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர்,
திருக்குறளை வழங்கி வள்ளுவனை போற்றிய பொங்கல் கொண்டாட்டத்தில் மஜக பங்கேற்பு!
ஜன.19, விருதுநகர் மாவட்டம், #இராஜபாளையத்தில் பகிர்வு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் சமூக ஆர்வலர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்ற திருவள்ளுவர் தினத்தில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் சிறுவர்/சிறுமியர்களுக்கு பரிசளிப்பு விழா சிறப்புடன் நடைப்பெற்றது. இதில், மனிதநேய ஜனநாயக கட்சி விருதுநகர் மாவட்ட செயலாளர் கண்மணி காதர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறுவர் சிறுமிகளுக்கு பரிசுகளை கையளித்தார். இந்நிகழ்வில், பங்கேற்றவர்களுக்கு திருக்குறளை வழங்கிட தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து படங்கள் எடுத்துக் கொண்டு வாழ்த்துக்களையும், இனிப்புகளையும் ஒருவொருக்கொருவர் பரிமாறிக் கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #விருதுநகர்தெற்குமாவட்டம். 17/01/2020