மஜக சார்பாக இளையான் குடியில் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக பிரம்மாண்ட கண்டன பொதுக்கூட்டம் தலைவர்கள் எழுச்சிஉரை..!


சிவகங்கை.ஜனவரி.19.,

மத்திய அரசு பொறுப்பேற்ற காலத்திலிருந்து இதுவரை சுமார் ஏழு ஆண்டுகளுக்குள் தொடர்ந்து நாட்டு மக்கள் மத்தியிலே பிளவுகளை ஏற்படுத்தியும், குறிப்பாக சிறுபான்மை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த கூடிய முத்தலாக் சட்டம், பாபர் மசூதி தீர்ப்பு, உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, அதன் தொடர்ச்சியாக தற்போது குடியுரிமை திருத்த சட்டங்களை கொண்டு வந்துள்ளது. மத்திய அரசின் இந்த மக்கள் விரோத போக்கை கண்டித்து நாடெங்கிலும் பல்வேறு விதமான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, நேற்று (18.01.2020) சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் வாள்மேல் நடந்த அம்மன் கோயில் திடலில் நகர செயலாளர் உமர் கத்தாப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராகவும், கறுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் எழுச்சிமிகு கண்டன உரை நிகழ்த்தினார்.

மேலும் இப்போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தோழர் தி.வேல்முருகன், அய்யா தர்மயுக வழிப்பேரவை நிறுவனத் தலைவர் பி.பாலமுருகன், மஜக தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர், மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனீஸ், முஹம்மது சைபுல்லாஹ் உள்ளிட்டவர்கள் கண்டன உரை நிகழ்த்தினர்.

https://m.facebook.com/story.php?story_fbid=2226229860810110&id=700424783390633

மஜக மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் பேசுகையில்… 2019-ல் இரண்டாம் முறையாக பிரதமரான போது மோடி, ‘முஸ்லிம்களின் அச்சத்தைப் போக்குவோம்’ என்று கூறினார். ஆனால், தொடர்ச்சியான நிகழ்வுகள் வேறாக இருக்கின்றன. மத்திய அரசு டிசம்பர் 11, 2019ல் இந்திய குடியுரிமை சட்டத்தை திருத்தி புதிய சட்டம் ஒன்றை இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றியது. டிசம்பர் 12ல் சட்டமானது. நாடு முழுவதும், அரசியல் கட்சிகள், முஸ்லிம்கள், பழங்குடி மக்கள், மாணவர்கள், கம்யூனிஸ்ட்கள், சட்ட வல்லுனர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், மதச்சார்பற்றவர்கள், இலக்கியவாதிகள், திரைக்கலைஞர்கள் என சமூகத்தின் அத்தனைப் பிரிவினரும் இந்த சட்டத்தை அரசு திரும்பபெற வேண்டும் என்று கடுமையாக போராடி வரும் நிலையிலும் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டோம் என்று பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பிடிவாதமாக உள்ளனர்.

இந்தியாவில் 130 கோடி பேர் வாழ்ந்து வருகிறார்கள். இங்கு சின்னஞ்சிறு எண்ணிக்கையில் வெளிநாட்டினர் வசிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் இங்கு நீண்டகாலமாக வாழ்ந்து வருகிறார்கள். இந்தியாவில் அடுத்தடுத்து வந்த எந்த அரசும் குடியேறல் மற்றும் அகதிகளுக்கான தேசிய கொள்கையை உருவாக்கவில்லை.

இவர்களில் அதிக எண்ணிக்கையாக வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். திபெத், இலங்கை, மியான்மர், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களும் இங்கே இருக்கிறார்கள். இவர்களும் திருமணம் செய்து குழந்தைகள் பெற்று பல ஆண்டுகளாக இங்கே வாழ்ந்து வருகிறார்கள். இவர்களது பிள்ளைகள் இங்கே பிறந்து முழுமையான குடியுரிமை பெற்றவர்களும் இருக்கிறார்கள். பெறாதவர்களும் இருக்கிறார்கள். இவர்களில் ஒருவருக்கு குடியுரிமை என்றும் ஒருவருக்கு இல்லை என்றும் சொல்லப் போவதன் மூலம் சட்டத்தின் முன் மக்கள் அனைவரும் பாரபட்சமின்றி நடத்தப்பட வேண்டும் என்று கூறும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உணர்வுகளுக்கு எதிராக இச்சட்டம் அமைய உள்ளது. பலரும் இச்சட்டத்தை எதிர்ப்பதற்கு இது தான் காரணம்.

எனவே, மத்திய அரசு இதுபோன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளை கைவிட்டு பிரதமர் நாட்டை அமைதி பூமியாக இருக்கவும் மக்கள் குறிப்பாக சிறுபான்மை மக்கள் அச்சமின்றி வாழவும் வழிகாண வேண்டும் எனவும் மஜக பொருளாளர் தெரிவித்தார்

இதில் மஜக வர்த்தக அணி மாநில துணைச் செயலாளர் ஷாகுல் ஹமீது சேட், சிவகங்கை மாவட்டச் செயலாளர் S.M.காஜா மைதீன், இராமநாதபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் இலியாஸ், இளையான்குடி நகர நிர்வாகிகள் முபாரக் அஹமது, சையது மகபூப், ஜமால் மைதீன், சதாம் உசேன், உஸ்மான் அலி, ஆட்டோ அஜ்மல்கான், நெய்னா, குப்பை சீனி, முத்து ஹவுத், முஸ்தபா, காசிம், பிர்தெளஸ் மற்றும் கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

இறுதியாக தலைமை செயற்குழு உறுப்பினர் பஷீர் அஹமது நன்றியுரை நிகழ்த்தினார்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சிவகங்கை_மாவட்டம்

18.01.2020