குடியுரிமைசட்டஎதிர்ப்புபோரில்ஒருவரலாற்றுதிருப்பம்! மார்ச் 01, கோவை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கோவை கொடிசியா வளாகத்தில் தமிழகம் தழுவிய அளவில் குடியுரிமை கருப்பு சட்டங்களான CAA, NRC, NPR ஆகியவைகளுக்கு எதிரான "வாழ்வுரிமை மாநாடு" பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ தலைமையில் நடைப்பெற்றது. https://m.facebook.com/story.php?story_fbid=2305788299520932&id=700424783390633 இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா Ex. MP, மஜகவின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீத், தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர், மாமன்னர் திப்பு சுல்தானின் கொள்ளுப்பேரன் பக்தியார் அலி சாஹிப், பாதிரியார் ஜெகத் கஸ்பர், மஜக அவைத்தலைவர் நாசர் உமரி, இணைப் பொதுசெயலாளர் ஜே.எஸ்.ரிபாயி, அலிகார் பல்கலைகழக மாணவர் பேரவை செயலாளர் ஹுசைவா அமீர் ரஷாதி, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக (JNU) மாணவர் பேரவை செயலாளர் சதீஷ் யாதவ், AMU மாணவர் பேரவை உறுப்பினர் கௌதம், குலிஸ்தான் பத்திரிகை ஆசிரியர் முக்தார் அஹமது, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உரையாற்றினர். மாநாட்டு திடலுக்கு "காந்திஜி" அவர்களின் பெயரும், மாநாட்டு மேடைக்கு குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிரான டெல்லி ஷாஹின்
Tag: மு.தமிமுன் அன்சாரி MLA
குடியுரிமைசட்டங்களுக்கு எதிராக கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் களமிறங்கியது..! கருத்தரங்கம் மூலம் எழுச்சி
சென்னை.ஜனவரி.12.., தமிழகத்தில் அனைத்து பிரிவு கிறிஸ்துவ மக்களிடையே ஒருங்கிணைந்த, செல்வாக்கு மிக்க அமைப்பாக திகழ்கிறது கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் . அது மத்திய அரசின் புதிய குடியுரிமை திருத்த கறுப்பு சட்டங்களுக்கு எதிராக இப்போது களத்தில் குதித்துள்ளது. நேற்று (12-01-2020) பாதிரியார்கள், கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் என பலரையும் இணைத்து அதன் தலைவர் இனிகோ.இருதயராஜ் அவர்கள் சிறப்பான ஒரு கருத்தரங்கை நடத்தினார். அவர் பேசும் போது, பிரதமர் மோடிக்கு பிறந்த ஆவணம் இருக்கிறதா? அப்படியெனில் ஏன் தேர்தல் பத்திரத்தில் இரண்டு தேதிகளை கொடுத்திருக்கிறார்? என கேட்க அரங்கம் அதிர்ந்தது. முன்னிலை வகித்த, பேராயர் டாக்டர் சின்னப்பா அவர்கள், இனி எதை நோக்கி செல்வது என முடிவு செய்ய வேண்டும். அதுவே இதன் நோக்கம் என்று கருத்தரங்கின் அர்த்தம் நிறைந்த இலக்கை தெளிவு படுத்தினார். பிரபல மூத்த வழக்கறிஞர் முத்து கிருஷ்ணன் அவர்கள், மோடியின் அரசியல் தில்லு முல்லுகளை நகைச்சுவை ததும்ப கூறி அரங்கை கலகலப்பூட்டி சிந்திக்க வைத்தார். காங்கிரஸ் சார்பில் பேசிய மூத்த அரசியல் தலைவரான பலராமன் அவர்கள், நான் ஒரு இந்து என்றும், இந்துத்துவா அல்ல என்றும் கூறி அவர்களின் அரசியல்
முப்படைகளுக்கும் ஒரே தலைமை பதவி, இந்திய ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல : முதமிமுன் அன்சாரி MLA
#மஜக பொதுச்செயலாளர் அறிக்கை..!!! இந்தியாவின் முப்படைகளுக்கும் ஒரே ராணுவ தலைமை தளபதி தான் செயல்படுவார் என தீர்மானித்து, அதன் படி பிபின் ராவத் அவர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. இதுவரை முப்படைகளின் தலைமை பொறுப்பு குடியரசு தலைவரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. நம் நாட்டில் ராணுவ புரட்சி நிகழ்ந்து விட கூடாது என்ற தூர நோக்கு சிந்தனையோடு அந்த முறை பின்பற்றப்பட்டு வந்தது. ஜவஹர்லால் நேரு அவர்கள் பிரதமராக இருந்த போது, அன்றைய ராணுவ தளபதியுடன் அவருக்கு கருத்து வேறுபாடு நீடித்து வந்தது. அப்போது இந்தியாவின் அண்டை நாடுகளில் ராணுவ கிளர்ச்சிகள் நடைப்பெற்று அங்கெல்லாம் அரசுகள் மாறுதல்களுக்கு உள்ளாகி வந்தன. அந்த நேரத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள், முப்படைகளும் ஒருவரின் கையில் இருந்தால் அது நம் நாட்டின் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என்று கூறி முப்படைகளுக்கும் தனித்தனி தளபதிகளை நியமித்து, அவற்றை குடியரசு தலைவரின் கட்டுப்பாட்டில் கொண்டு வருமாறு அன்றைய பிரதமர் நேருவுக்கு ஆலோசனை கூறினார். அதுவே சிறந்த யோசனை என ஏற்று அப்படியே நேரு அவர்கள் அதை செயல்படுத்தினார். இந்த பின்னணிகளையெல்லாம் மறந்து விட்டு, இன்று முப்படைகளுக்கும் ஒரே ராணுவ தளபதி என
புதிய குடியுரிமை சட்டத்திருத்தத்தில் திருத்தம் செய்யக்கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது..! :-
சூடான் தீ விபத்தில் நாகை வாலிபர் மரணம் : மு தமிமுன் அன்சாரி MLA நேரில் ஆறுதல்!
டிச 8, சூடான் நாட்டில் ஏற்பட்ட கேஸ் டேங்கர் லாரி ஒன்று வெடித்த தீ விபத்தில், 3 தமிழர்கள் உட்பட 18 இந்தியர்கள் கருகி இறந்துள்ளனர். அவர்களில் நாகை தொகுதி திட்டச்சேரி அருகில் உள்ள ஆலங்குடிச்சேரி கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற 25 வயது வாலிபரும் ஒருவர். முதலில் இவர் இறந்தாரா? காயமடைந்துள்ளாரா? என்று குழப்பம் நிலவியது. பிறகு அவரது துயர மரணம் உறுதி செய்யப்பட்டது. இன்று மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் , அவரது வீட்டிற்கு சென்று , பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு , அரசு வேலை பெற்று தர முயற்சி செய்வதாகவும், இது குறித்து முதல்வரிடம் பேசுவதாகவும் கூறினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்தவர், இறந்த 3 தமிழர்கள் உட்பட அனைவருக்கும் தலா 25 லட்சம் ரூபாய் ஆறுதல் நிதியாக மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் , வாய்ப்பு இருப்பின் இறந்தவர்களின் உடலை அவர்களது குடும்பத்தினரிடம் கொண்டு வந்த சேர்க்க மத்திய அரசு உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். தமிழக அரசு, இறந்த 3 தமிழர்களின் குடும்பத்திற்கும் , அரசு