ஜனவரி.3.., இன்று தோப்புத்துறையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் ஒருங்கிணைப்பில், மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. ஜமாத்தினர் இதற்கு ஆதரவு அளித்து திரளாக பங்கேற்றனர். இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று பேசியதாவது.. பல கட்சிகள் உள்ளாட்சி தேர்தல் பணிகளில் இருக்கும்போது, நாங்கள் வாழ்வுரிமைக்கான போராட்ட களத்தை நடத்தி வருகிறோம். அதில் கவனம் செலுத்தியதை விட இதில் தான் தீவிரமாக இயங்கி வருகிறோம். இது நாட்டை காக்கும் அறப்போராட்டம். இது எங்களுக்கு முக்கியமாக இருக்கிறது. நாளுக்கு நாள் போராட்ட களம் வீரியமடைகிறது. மக்கள் தன்னெழுச்சியாக திரள்கிறார்கள். மத நல்லிணக்கத்துடன் கூடிய இன்னொரு சுதந்திர போராட்டமாக இது மாறியுள்ளது. இந்த கறுப்பு சட்டங்களை திரும்ப பெறும் வரை ஓய மாட்டோம். இவை தொடக்கம் தான். இன்னும் முழுமையான போராட்டம் தொடங்கவில்லை. வட இந்திய ஊடகங்களிடம் போராட்ட காட்சிகளை, செய்திகளை முக்கியப்படுத்த வேண்டாம் என மத்திய அரசு கூறியுள்ளதாம். இருட்டடிப்புகளை தாண்டி செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. மக்கள் போராட்டங்களை மூடி மறைக்க முடியாது. இந்த போராட்டங்களை சில மூளை வீங்கிகள் கொச்சைப்படுத்தி, தங் களை மக்களிடமிருந்து அந்நியப்படுத்திக் கொள்கிறார்கள். போராட்டம் மக்களை நோக்கி செல்கிறது. மக்கள்
Tag: M.தமிமுன் அன்சாரி
காங்கிரஸ் கொண்டு வந்த NPR சட்டமும் பாஜக கொண்டு வந்த சட்டமும் ஒன்றா? முதமிமுன் அன்சாரி MLA கேள்வி.
ஜனவரி.03, இன்று திருத்துறைப்பூண்டியில் மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக கூட்டமைப்பு சார்பில் திருத்துறைப்பூண்டி தொகுதி அளவிளான கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் பங்கேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் கண்டன உரையாற்றினார். அப்போது பேசியதாவது .. NRC சட்டத்திற்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு என்றதும் கொல்லைப்புறம் வழியாக அதன் கேள்விகளை NPR சட்டம் மூலம் கொண்டு வர மத்திய அரசு வஞ்சகமாக திட்டமிடுகிறது. வழக்கமாக நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பை வரவேற்கிறோம். ஆனால் NPR சட்டம் என்பது இதிலிருந்து மாறுபட்டது. அது வேறு இது வேறு. NPR சட்டத்தை காங்கிரஸ் கட்சிதான் கொண்டு வந்தது என்று கூறி தப்பிக்க பார்க்கிறார்கள். உண்மை என்ன தெரியுமா? காங்கிரஸ் கொண்டு வந்த NPR ல் 15 கேள்விகள் மட்டுமே இருந்தன. மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள இந்த NPR சட்டத்தில் கூடுதலாக 6 கேள்விகள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த 6 கேள்விகள் என்பது அஸ்ஸாமில் அமல்படுத்தப்பட்ட NRC சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளாகும். பாட்டன், பூட்டனின் பிறந்த ஆவணத்தை எங்கு தேடுவது? 1970 களுக்கு பின்னால் தானே, பிறந்த தேதி ஆவணங்கள் முறையாக பதிவாகின. அதற்கு
சென்னை ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில்_CAAவை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்..!! மஜக பங்கேற்பு
சென்னை.ஜனவரி.04.., CAA, NRC, NPR உள்ளிட்ட கருப்பு சட்டங்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அமைதி வழியில் பேரணிகள் & ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட பல போராட்டங்களை அனைத்து இயக்கங்கள், கட்சிகள், மாணவ அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர். இதனடிப்படையில், நேற்று 03.01.2020 மதியம் 2.30 மணியளவில் சென்னை ஜமாஅத் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் K.அமானுல்லா கான் அவர்களின் தலைமையில் ஐஸ் ஹவுஸ் பள்ளிவாசல் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனிஸ் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். மேலும் இக்கூட்டத்தில் மாநில துணைச் செயலாளர் திருமங்கலம் ஷமீம் அகமது, மாநில இளைஞரணிச் செயலாளர் முஹம்மது அஸாருதீன், மாணவர் இந்தியா மாநிலப் பொருளாளர் பஷீர் அஹமது, மத்திய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பிஸ்மில்லாஹ் கான், மேற்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் சாகுல் ஹமீது, வர்த்தக அணி செயலாளர் புதுப்பேட்டை யூசுப் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் திமுக பாராளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதி மாறன் MP, திமுக சட்டமன்ற உறுப்பினர் J.அன்பழகன், காங்கிரஸ்
ஈழத்தமிழர்கள் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தார்கள்? மு.தமிமுன் அன்சாரி MLA கேள்வி!
ஜன.04, தஞ்சாவூரில் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பேரா.காதர் மைதீன், தோழர் பெ.மணியரசன், பழனிமாணிக்கம் MP, முன்னாள் அமைச்சர் உபையதுல்லா, தோழர்.ஜீவகுமார், துரை.சந்திரசேகரன் MLA, நீலமேகம் MLA, தோழர். P செந்தில் குமார், தோழர்.சொக்கா.ரவி உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் பங்கேற்று பேசியதாவது:- 'CAA சட்டத்தின் வழியாக யாருக்கும் குடியுரிமை கொடுக்க கூடாது என நாம் கூறவில்லை. அண்டை நாடுகளிலிருந்து அகதிகளாக யார் வந்தாலும் கருணையுடன் பரிசீலிக்க வேண்டும் என்கிறோம். இதில் ஈழத் தமிழர்களை புறக்கணித்தது என்ன நியாயம்? என்கிறோம். அவர்கள் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தார்கள்? மூன்று தலைமுறைகளாக அகதிகளாக இங்கே இருக்கிறார்கள். அவர்களை நிராகரிக்கலாமா? பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் இந்துக்களையும், சீக்கியர்களையும் ஏற்கும் நீங்கள் ஈழத்தமிழர்களை வஞ்சிக்கலாமா? அவர்களையும் இதில் இணைத்து குடியுரிமை வழங்குங்கள் என்கிறோம். நேபாளத்திலும், பூடானிலும் மத ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகும் கிறிஸ்தவர்களையும், இந்திய - பாகிஸ்தான் எல்லையில் வசிக்கும், அதே போல இந்திய - பங்களாதேஷ் எல்லையில் வசிக்கும் இந்திய வம்சாவளி முஸ்லிம்களையும் அகதிகளாக வந்தால் அதை ஏற்று குடியுரிமை வழங்குங்கள் என்கிறோம். இதை ஏற்க மாட்டோம் என்பதால்
குடியுரிமை இருந்தால்தான் வாழ்வுரிமை, மு தமிமுன் அன்சாரி MLA பேச்சு!
https://www.facebook.com/700424783390633/posts/2190407517725678/ ஜன.01, அதிராம்பட்டிணத்தில், அஹமது அப்சல் - நபீலா, ஷபி அஹமது- ரூமைஜா, முஹம்மது பரீத்- ஆயிசா ஆகியோரின் திருமணம் அதிரை செக்கடி பள்ளிவாசலில் நடைப்பெற்றது. அதில் பங்கேற்று மஜக பொது செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கெதிராக பேசினார். உபி மாநிலத்தில் அறவழியில் போராடிய மக்களின் மீது துப்பாகி சூடு நடத்தி 21 உயிர்களை பறித்த ஆதித்யாவை கண்டித்து பேசினார். ஒரு சன்னியாசிக்கு மனித உயிர்களின் மதிப்பு தெரியுமா? என கேள்வி எழுப்பினார். குடியுரிமை இருந்தால் தான் வாழ்வுரிமை கிடைக்கும் எனவே அமைதி வழி போராட்டங்கள் மூலமே குடியுரிமையை நிலைநாட்ட முடியும் என்றார். சுமார் 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்நிகழ்வில் மஜக மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜூதீன், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அப்துல் சலாம், தகவல் தொழில்நுட்ப அணி மாநில பொருளாளர் ஹமீது ஜெகபர், MKP ஆஸ்திரேலியா மண்டல செயலாளர் அதிரை சர்புதீன், மாவட்ட துணை செயலாளர் சாகுல் ஹமீது, அதிரை நகர செயலாளர் அப்துல் சமது, பொருளாளர் து.செயலாளர் அரபாஃத், ஜப்பார், வக்கீல் நிஜாம், MJTS தொழிற்சங்க நிர்வாகிகள் செல்வம், ஹக், இப்ராஹிம், ஹாஜிஅலி உள்ளிட்ட நிர்வாகிகளும்