இன்று புழல் சிறையில் இரண்டாவது முறையாக #மஜக பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது உள்ளிட்ட 7 மஜக சகோதரர்களையும் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA சந்தித்தார். அவருடன் மாநில செயலாளர் தைமியா, மாநில துணை செயலாளர் புதுமடம் அனீஸ் ஆகியோரும் உடன் சென்றனர். வழக்கு நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்தும், மூவரும் எடுத்து கூறினர். அதற்கு அவர்கள் தலைமை எடுத்துவரும் சட்ட நடவடிக்கைகளை புரிந்து கொள்வதாகவும், யாரோ சிலர் சொல்லும் அவதூறுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்றும், தாங்கள் இவ்விசயத்தில் தெளிவாகவும், உற்சாகமாகவும் இருப்பதாகவும் கூறினர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம்_சென்னை
Tag: MJK Party
நாகரீக அரசியலுக்கு உகந்ததல்ல…
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை) திமுக தலைவர் கலைஞர் அவர்கள் குறித்து மறைமுகமாக ட்விட்டரில் பாஜகவின் தேசிய செயலாளர் H. ராஜா வெளியிட்ட கருத்து அநாகரீகத்தின் உச்சமாகும். கலைஞர் உடல் நலமின்றி, அரசியலிருந்து ஏறத்தாழ ஒதுங்கியிருக்கும் நிலையில் அவர் மீது தொடுத்திருக்கும் தனி நபர் தாக்குதல்கள் வெறுப்பு அரசியலின் வெளிப்பாடாகும். அக்கருத்துகளை மனிதநேய ஜனநாயக கட்சி வன்மையாக கண்டிக்கிறது. நாகரீக வளர்ச்சியின் வழியாகவே, அரசியல் முதிர்ச்சியும், பண்பாடும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். தனிநபர் விமர்சனங்களும், தனி நபரை வீழ்த்த முன்னெடுக்கப்படும் தரங்கெட்ட முயற்சிகளும் பொது வாழ்வுக்கு எந்த விதத்திலும் சிறப்பு சேர்க்காது. கொள்கை ரீதியான விமர்சனங்கள் மட்டுமே, ஒருவரின் அரசியல் தரத்தை மதிப்பீடு செய்யும் என்பதை அனைவரும் உணர வேண்டும். இவண், #மு_தமிமுன்_அன்சாரி_MLA #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி. 19.04.18
திண்டுக்கல்லில் எழுச்சியோடு நடைபெற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்..! மஜக பங்கேற்பு..!!
திண்டுக்கல்.ஏப்.18., இன்று மாலை 05-மணியலவில் திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் தமிழ்நாடு உரிமை மீட்புக் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) திண்டுக்கல் மாவட்டம் சார்பாக மாவட்ட பொருளாளர் M. அனஸ் முஸ்தபா அவர்கள் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் #தமிழ்நாடு_இளைஞர்_இயக்கம் , #INLP, #விசிக, #கம்யூனிஸ்ட் மற்றும் தமிழ்தேசிய அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்தவும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க கோரியும், பாசிச சக்திகளின் சிறுபான்மை மக்களுக்கு எதிரான போக்கை கண்டித்து பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_திண்டுக்கல்_மாவட்டம் 18/04/2018
மனிதநேய ஜனநாயக கட்சி (MJK) துவக்கம்…
பிப்.28., மனிதநேய மக்கள் கட்சியிள் கடந்த அக்டோபர் 6 ,2015 அன்று பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து, கட்சி யாருக்கு சொந்தம் என்ற வழக்கு எங்கள் தரப்பில் தொடக்கப்பட்டது. அந்த வழக்கு கடந்த பிப்ரவரி 25, 2016 அன்று சென்னை உயர்நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து கடந்த (28.02.2016) அன்று கும்பகோணத்தில் நமது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் 'புதிய பாதை- புதிய பயணம்' என்ற முழக்கத்தோடு #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) என்ற பெயரில். அரசியல் கட்சியை தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இதன் தொடக்க விழா பொதுக்கூட்டம் கடந்த (28.02.2016) அன்று இரவு தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் நடைபெற உள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் நானும், கட்சியின் பொருளாளராக ஹாரூன் ரஷீதும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். புதிய தலைமை நிர்வாகிகள் , மாவட்ட செயலாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. கட்சியின் கொள்கைகள், செயல் திட்டங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். வரும் சட்டமன்ற தேர்தலில் நமது கோரிக்கைகள் மதிக்கும் வலிமையான கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. நேர்மையான அரசியலையும், கண்ணியமான பொதுவாழ்வையும் செயல்படுத்த களம் புகும்