சென்னை.பிப்.02.., மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக கடந்த 31-01-2020 அன்று சென்னை துறைமுக அனைத்து கட்சி, இயக்கங்கள், ஜமாத்துகள் கூட்டமைப்பு சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பூக்கடை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொதுச் செயலாளர் N.A.தைமிய்யா கலந்து கொண்டு கறுப்பு சட்டங்களுக்கு எதிராக கண்டன உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் கூட்டமைப்பு தலைவர்கள் உள்ளிட்ட மஜக மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பெருந்திரளான மஜகவினர் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்பம்_அணி #MJK_IT_WING #சென்னை 31-01-2020
Tag: M.தமிமுன் அன்சாரி
நீண்டகால போராட்டத்திற்கு தயாராக வேண்டும் முதமிமுன் அன்சாரி MLA பேச்சு.!
தஞ்சை.பிப்.02.., தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் புதிய குடியுரிமை திருத்த கறுப்பு சட்டங்களுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் 1500-க்கும் அதிகமான பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் உரையாற்றிய இந்நிகழ்வில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA ஆற்றிய உரையிலிருந்து முக்கிய பகுதிகள் பின்வருமாறு... கடந்த ஒன்றரை மாதங்களாக எல்லோரும் போராடி வருகிறோம். ஒரு நாளைக்கு 2, 3. நிகழ்ச்சிகள் என ஒயாது சுற்றி வருகிறோம். தோழர்கள் வேல்முருகன், திருமுருகன் காந்தி, வே.மதிமாறன், சுந்தரவள்ளி, பேரா.மார்க்ஸ், வேலுச்சாமி போன்ற எண்ணற்ற தலைவர்கள் இரவு பகலாக சுற்றி வருகிறார்கள். நிம்மதியாக நம்மால் உறங்க முடியவில்லை. உண்ண முடியவில்லை. குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. வியாபாரத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. கட்சி பணிகளில் ஈடுபாடு காட்ட முடியவில்லை. ஒரே போராட்டம், பொதுக்கூட்டம் என நாட்கள் நகர்கிறது. ஆனாலும் நாம் சோர்வடையவில்லை. இதற்கு உதாரணம் ஜனவரி-30 அன்று தமிழகத்தில் நடைப்பெற்ற மனிதசங்கிலி போராட்டம் ஆகும். சென்னை முதல் குமரி வரை 950-கி.மீ நீளத்திற்கு மனிதசங்கிலி போராட்டம் மனித சுவர் போராட்டமாக மக்கள் எழுச்சியோடு மாறியது. பொதுமக்கள் சாதி, மதம் மறந்து தன்னெழுச்சியாக போராட வருகிறார்கள். ஆனால்
மாணவர் இந்தியாவின் எழுச்சிமிகு பயங்கரவாத எதிர்ப்பு நாள் கருத்தரங்கம்….!
மாணவர் இந்தியா சார்பாக ஆண்டு தோறும் காந்தி படுகொலையை கண்டித்து பயங்கரவாத எதிர்ப்பு நாள் சிறப்பு கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு சென்னை ராயபுரத்தில் நடைப்பெற்ற இக்கருத்தரங்கம் மாநில தலைவர் ஜாவித் ஜாஃபர் அவர்களது தலைமையில் தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்கப்பட்டது. மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA காந்தி படுகொலை செய்யப்பட்ட நாளன்று சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்களது எண்ண ஓட்டங்களை உரையில் உணர்ச்சிகரமாக பதிவு செய்து மாணவர் இந்தியாவின் இந்த கருத்தரங்கம் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். எழுத்தாளர் தியாகு,பேராசிரியர் சுந்தரவள்ளி ஆகியோர் காந்தி எப்படிப்பட்ட இந்தியா உருவாகிவிடக்கூடாது என்று நினைத்தாரோ அப்படிப்பட்ட இந்தியா அமைய தற்போது நடக்கும் சங்பரிவார அமைப்புகளின் சதித்திட்டங்களை மாணவர்களுக்கு விளக்கினர். மாணவர் இந்தியா பொறுப்பாளர் தைமியா சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றார் முன்னாள் மாணவர் இந்தியா நிர்வாகிகள் அணீஸ்,ஷமீம்,அஸாருதீன் கருத்தரங்கம் நோக்கத்தை விளக்கி உரையாற்றினர். மாணவர் இந்தியா மாநில பொருளாளர் பஷீர் அவர்களது தலைமையில் மாநில செயலாளர் பெரியார் கார்த்தி,ஊடக பிரிவு செயலாளர் கார்த்தி அடங்கிய கலைக்குழு குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கொள்கை முழக்கங்களை எழுப்ப அரங்கமே
மருத்துவர் ராமதாஸ் ஐயா அவர்களுடன் மு.தமிமுன் அன்சாரி MLA சந்திப்பு..!
விழுப்புரம்.பிப்.1.., இன்று தைலாபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஐயா அவர்களை கூட்டமைப்பு சார்பில் ஒருங்கினைப்பாளர் மன்சூர் காசிஃபி தலைமையில், பஷீர் ஹாஜியார், தர்வேஸ் ரஷாதி ஆகியோர் முன்னிலையில் தலைவர்கள் சந்தித்தனர். மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, பேரா.ஜவாஹிருல்லா, S.M.பாக்கர், உள்ளிட்ட தலைவர்கள் இச்சந்திப்பில் இடம் பெற்றனர். மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டங்கள் தொடர்பாக, பாமக பொதுக்குழு எடுத்த தீர்மானத்திற்கு நன்றி கூறிய தலைவர்கள், இச்சட்டங்களின் அபாயங்களை விளக்கினர். பேரா.ஜவாஹிருல்லா அவர்கள் இது அனைவருக்கும் எதிரானது என்பதை கூறி, அது தொடர்பான விபரங்களை அவரிடம் விளக்கினார். தலைவர்கள் இதற்கு எதிராக நீங்கள் தான் குரல் கொடுக்க வேண்டும் என்றதும், நான் உங்களில் ஒருவன் என்றவர், நிச்சயம் இதற்காக குரல் கொடுப்பேன் என்றார். மேலும் நாம் எல்லோரும் ஒற்றுமையோடு வாழ்கிறோம். அதுபோலவே இனியும் வாழ்வோம் என்று டாக்டர் ஐயா அவர்கள் கூறி, தலைவர்களை உற்சாகப்படுத்தி அரவணைத்து பேசினார்.. பேரா.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் எல்லோரையும் அறிமுகப்படுத்தி, இவர் தான் மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி என்றதும், "இவர் எங்க (அதாவது பாமக) MLA என்று சிரித்து டாக்டர் கலகலப்பூட்டினார். இந்த கறுப்பு
உள்நாட்டு அமைதியின் மூலமே வல்லரசு கனவு சாத்தியமாகும்! முதமிமுன் அன்சாரி MLA பேச்சு!
சென்னை மேடவாக்கத்தில் அமைந்திருக்கும் காயிதே மில்லத் கல்லூரியில் குடியரசு தின விழா வெகு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. காயிதே மில்லத் அவர்களின் பேரனும், கல்லூரியின் தாளாளருமான தாவூத் மியாகான் அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, சாரணர் படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் உரையாற்றினார். அவரது உரையிலிருந்து முக்கிய பகுதிகள் பின்வருமாறு :- https://m.facebook.com/story.php?story_fbid=2240614932704936&id=700424783390633 இன்று இந்தியாவின் 71 வது குடியரசு தின விழாவை நாம் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறோம். 'வேற்றுமையில் ஒற்றுமை' என்பதே நமது நாட்டின் சிறப்பாகும். பல்வேறு மதங்கள், இனங்கள், மொழிகள், பண்பாடுகள் இவற்றின் கதம்பமாக நம்நாடு இருக்கிறது. வேறுபட்ட நிலவியல் அமைப்புகளையும் கொண்ட நாடு இதுதான். அதனால் தான் இந்தியாவை துணைக் கண்டம் என்றும் நாடுகளின் ஒன்றியம் என்றும் கூறி சிறப்பிக்கிறார்கள். இதை சிதைக்க சிலர் முயற்சி செய்கிறார்கள். மாநிலங்களின் உரிமைகளை, சமூகங்களின் உரிமைகளை பறிக்க முயற்சிக்கிறார்கள். கல்வியை சாமான்யர்களுக்கு கடினமாக்கி அவர்களின் முன்னேற்றத்தை தடுத்து ஒரு கட்டத்தில் இடஒதுக்கீட்டை நீர்த்து போகச் செய்ய துடிக்கிறார்கள். சமூகநீதியை, மதச்சார்பின்மையை மக்கள் உரிமைகளை அழிக்க துடிக்கிறார்கள். எல்லாவற்றையும் ஒற்றை கலாச்சாரமாக்க துடிப்பது இந்தியாவின்