ஈரோடு.பிப்.17.., மனிதநேய ஜனநாயக கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்டம் சார்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள கருப்பு சட்டங்களை (CAA, NRC, NPR) கண்டித்தும், மேலும் சென்னை வண்ணாரப்பேட்டையில் அறவழியில் போராடியவர்கள் மீது காவல்துறை நடத்திய தடியடியை கண்டித்தும் ஈரோடு பெரிய அக்ரஹாரம் அரபிக் கல்லூரி அருகில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் ஜமாத்துல் உலமா கௌரவ ஆலோசகர் உமர் பாரூக் தாவூதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்ட செயலாளர் சபிக் அலி வரவேற்புரை நிகழ்த்தினார். கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மூத்த வழக்கறிஞர் பாப்பா மோகன் ஆகியோர் எழுச்சி உரை நிகழ்த்தினார்கள். மேலு மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் செய்யது அகமது ஃபாருக், மாநில துணைச் செயலாளர்கள் சமீம் அஹமது, பாபு சாகின்ஷா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல அமைப்புச் செயலாளர் விநாயகமூர்த்தி, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின்
Tag: புதிய குடியுரிமை சட்ட திருத்தம்
சட்டசபையில் இருந்து மஜக பொதுச்செயலாளர் முதமிமுன்அன்சாரி வெளிநடப்பு..!
இன்று நடந்த சட்டப்பேரவையில், வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை கண்டித்து மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்து உரையாற்றினார். அதற்கு முதல்வர் அளித்த பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறியும், குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற மறுப்பதை கண்டித்தும் வெளிநடப்பு செய்தார். அப்போது நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அரசின் செயல்பாடு வருத்தம் அளிப்பதாகவும், எதிர்வரும் பிப்ரவரி 19 அன்று ஒரு லட்சம் மக்கள் ஒன்றுகூடி சட்டமன்றத்தை முற்றுகையிடப் போவதாகவும் கூறினார். மேலும் அவர் கூறுகையில்.. தற்பொழுது நேராக வண்ணாரப்பேட்டை போராட்ட களத்திற்கு செல்லவதாகவும், அவர்களுக்கு ஆதரவு அளிப்பதாகவும் கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சட்டசபை_வளாகம் 17-02-2020
வண்ணாரப்பேட்டை தாக்குதல் சம்பவம்: முதமிமுன்அன்சாரி_MLA பதாகை ஏந்தி கண்டனம்
ஆக்கூரில் எழுச்சிமிகு பேரணி பொதுக்கூட்டத்தில் மஜக சார்பில் பங்கேற்றுகண்டனஉரை!!
பிப்.17, இந்தியர்களுக்கு மத்தியில் மதரீதியாகப் பாகுபாட்டை ஏற்படுத்தும் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், NRC, NPR அமுல்படுத்த கூடாது என வலியுறுத்தி ஆக்கூரில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் கூட்டமைப்பு சார்பில் ஜமாத் நிர்வாக சபை தலைவர் A.முஹம்மது ஷிஹாபுதீன் தலைமையில் நடைபெற்றது. இப்பேரணியில் பெண்கள், குழந்தைகள் உள்பட 600அடி நீள பிரம்மாண்ட தேசிய கொடியுடன் ஆக்கூர் முக்கூட்டிலிருந்து ஆக்கூர் பேருந்து நிலையம் வரை இரண்டு கிலோமீட்டர் தூரம் பேரணியாக வந்தனர். தொடர்ந்து காந்தி வீதியில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் மஜக கொள்கை விளக்க அணியின் மாநில துணை செயலாளர் A.காதர் பாட்சா கண்டன உரையாற்றினார். இதில், M.அப்துல் ரஹ்மான் Ex MP, வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா, பேரா.ஜெயராமன், சிவகாசி முஸ்தபா, M.நிஜாம் முஹைதீன், நிவேதா M.முருகன், S.ராஜ்குமார் EX MLA, பா.ரவிச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் சாந்தி வேல்முருகன், ஊராட்சி மன்ற தலைவர் A.R.சந்திர மோகன் உள்ளிட்டவர்களும் குடியுரிமை சட்டங்களுக்கெதிரான தங்கள் கண்டனங்களை பதிவுச் செய்தனர். மேலும், மஜக மாவட்ட பொருளாளர் சங்கை தாஜ்தீன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆக்கூர் ஷாஜஹான், மாவட்ட துணை செயலாளர் ஹாஜா சலீம், செம்பை ஒன்றிய செயலாளர் நிஜாமுதீன்,
கூட்டமைப்பு சார்பாக கறுப்பு சட்டங்களை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் ..! மஜக பங்கேற்பு..!
தென்காசி.பிப்.17., அனைத்து கட்சி மற்றும் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கடந்த 15-02-2020 அன்று தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாவட்ட பேச்சாளர் முகம்மது இதயத்துல்லா கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். உடன் மாவட்டச் செயலாளர் அச்சன்புதூர் பீர் மைதீன், அச்சன்புதூர் நகரப் பொருளாளர் கமாலுதீன், சங்கரன்கோவில் நகரச் செயலாளர் சுல்தான், நகரப் பொருளாளர் இத்ரீஸ், மாணவர் இந்தியா பீர்மைதீன் மேலும் நிர்வாகிகள் தர்வீஸ் மைதீன், ராஜா மைதீன், இஸ்மாயில் உள்ளிட்ட மஜக-வினர் திரளாக பங்கேற்றனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தென்காசி_மாவட்டம்