பிப்.24, குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக பல்வேறு கட்டப் போராட்டங்களின் தொடர்ச்சியாக நாகூர் மக்கள் கூட்டமைப்பு ஏற்பாட்டில் நேற்று மாலை நாகூர் புதிய பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. பல்வேறு சமூக, அரசியல் தலைவர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் மஜக சார்பில் நாகை தெற்கு மாவட்ட செயலாளர் செ.செய்யது ரியாசுதீன் கலந்து கொண்டு குடியுரிமை சட்டங்களுக்கெதிராக தன்னுடைய கண்டனங்களைப் பதிவு செய்தார். இதில் மஜக மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ், மா.து.செயலாளர் கண்ணுவாப்பா, மாவட்ட சுற்றுசூழல் அணி செயலாளர் தெத்தி.ஆரிப், திட்டச்சேரி பேரூர் செயலாளர் இப்ராஹிம், நகர செயலாளர்கள் அபுசாலி சாஹிப், அஜுஜூர் ரஹ்மான், நாகை ஒன்றிய து.செயலாளர் சதாம், நாகூர் சாகுல், மஹ்மூது இபுராகிம், ஷேக் அலி, அப்துல் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையில் திரளான மஜகவினர் கலந்து கொண்டனர். மேலும், நாகூர் மக்கள் கூட்டமைப்பில் பள்ளிவாசல் மற்றும் இயக்க, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நாகூர் நகர மஜகவினரும் இணைந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகைதெற்குமாவட்டம்.
Tag: புதிய குடியுரிமை சட்ட திருத்தம்
பிப் 29 சூடு பிடிக்கிறது மஜக கோவை மாநாட்டு பணிகள்…மைதானத்தைபார்வையிட்டு ஆலோசனை செய்த மஜக தலைவர்கள்…!!
பிப்.24., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மத்திய அரசு பாரபட்சத்துடன் கொண்டு வந்திருக்கும் CAA, NRC, NPR கருப்பு சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கோவையில் கொடிசியா மைதானத்தில் லட்சக்கணக்கான மக்கள் பங்கு கொள்ளும் வாழ்வுரிமை மாநாடு நடைபெறவுள்ளது. வாழ்வுரிமை மாநாட்டிற்காக பொதுமக்களை திரட்டும் பணியை தமிழகம் முழுவதும் உள்ள மஜக தொண்டர்கள் செய்து வருகிறார்கள். இந்நிலையில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, ஆகியோர் கோவையில் வாழ்வுரிமை மாநாடு நடைபெறும் மைதானத்தை பார்வையிட்டனர். அவர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர், அவைத்தலைவர் நாசர்உமரி, துணைப் பொதுச் செயலாளர்கள் ஈரோடு செய்யது அஹமது பாருக், மதுக்கூர் ராவுத்தர்ஷா, கோவை சுல்தான் அமீர், தைமிய்யா, மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜிதீன், ஆகியோர் உடனிருந்தனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவைமாநகர்மாவட்டம் 23.02.2020
மஜக குமரி மாவட்டசெயற்குழு கூட்டம்.! சாகுல்ஹமீது_பங்கேற்பு..!!
குமரி.பிப்.24.., மனிதநேய ஜனநாயக கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட செயற்குழு கூட்டம் 23-2-2011 மாலை இடலக்குடி-யில் மாவட்டச் செயலாளர் ரூபிஹர் அலி தலைமையில் மாவட்டப் பொருளாளர் சர்ச்சில் முன்னிலையில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு மாநில துணைச் செயலாளர் சாகுல் ஹமீது, தலைமை செயற்குழு உறுப்பினர் ஒத்தக்கடை பாரூக், நெல்லை மாவட்டப் பொருளாளர் சேக்முகம்மது ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் எதிர்வரும் பிப்ரவரி-29 அன்று நடைபெறும் கோவை வாழ்வுரிமை மாநாட்டில் திரளான மக்களை கலந்து கொள்ளச் செய்வது எனவும். மாநாடு சம்பந்தமான துண்டுப்பிரசுரம், ஆட்டோ விளம்பரம், தனிநபர் சந்திப்புகள் ஆகியவற்றை மேலும் தீவிரமாக செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் புதிய மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநகர நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தலைமைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதில் கன்னியாகுமரி மாவட்ட பொருப்பாளர்கள் ஹபீஸ்அலி, சாதிக், முஜிபுர்ரஹ்மான், அமீர்கான், ஐயப்பன், அகமதுஅஷரப், இஜாஸ்அகமது உள்ளிட்ட நகர நிர்வாகிகள், கிளை செயலாளர்கள் கலந்து கொன்டனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #குமரி_மாவட்டம் 23-02-2020
பிப் 29 வாழ்வுரிமை மாநாடு ஆலோசனை கூட்டம்!!
பிப்.23., இன்று கோவையில் வாழ்வுரிமை மாநாடு குறித்து மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன்அன்சாரி MLA. அவர்கள் தலைமையில் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்தும், மக்கள் வருகை குறித்தும், முழுமையாக விவாதிக்கப்பட்டது. இதில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண்ரஷீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர், அவைத்தலைவர் நாசர் உமரி, துணை பொதுச் செயலாளர்கள் செய்யது அஹமது பாருக், மதுக்கூர் ராவுத்தர்ஷா, கோவை சுல்தான் அமீர், தைமிய்யா, மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜிதீன், ஆகியோர் பங்கேற்றனர். மாநாடு பணிகள் சூடு பிடித்து தமிழகம் முழுவதும் சுவர், விளம்பரங்களும் ஆட்டோ, விளம்பரங்களும், காணொளி, விளம்பரங்களும் செய்யப்பட்டிருக்கிறது. லட்சக்கணக்கான மக்களை திரட்டும் வகையில் கொடிசியா, மைதானம் தயார்படுத்தப்பட்டு வருகிறது. தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாவட்டம் 23.02.2020
குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி இளையான்குடியில் தொடர் போராட்டம்!! மன்னை செல்லச்சாமி கண்டன உரை!!
சிவகங்கை.பிப்.23., குடியுரிமை சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி இளையான்குடியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொதுச்செயலாளர் மன்னை.செல்லச்சாமி பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார். துணை பொதுச்செயலாளர் மண்டலம் ஜெய்னுல் ஆப்தீன் உடனிருந்தார்.. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட, பகுதி, கிளை, நிர்வாகிகள் தொடர் போராட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சிவகங்கை_மாவட்டம் 21.02.2020