You are here

நாகையில் அமைதி ஊர்வலம்…

image

image

டிச.08., நாகப்பட்டினத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்களின் மறைவையொட்டி அமைதி ஊர்வலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.

இதில் மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான
M.தமிமுன் அன்சாரி அவர்களும், முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் அவர்களும், அதிமுக நகரச் செயலாளர் சந்திர மோகன் அவர்களும், முன்னாள் நகர்மன்ற தலைவர் மஞ்சுளா சந்திர மோகன் அவர்களும் கலந்துக் கொண்டனர்.

மேலும், மஜக மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாரிமுத்து, நாகை மாரி உள்பட பல்வேறு கட்சி பிரதிகளும் பங்கேற்றனர்.

வழியெங்கும் மக்கள் வருகைத் தந்து அமைதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

தகவல்;
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.

Top