டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து ஜாமியா மில்லியா மாணவர்கள் உரையாடினார்கள். தொடர்ந்து, ஜாமியா மில்லியா பல்கலைகழக மாணவர்கள் ஏற்பாட்டில், 'சப்கா கர்' நிர்வாகிகளுடன் நல்லெண்ண சந்திப்பு நடைப்பெற்றது. 'சப்கா கர்' எல்லை காந்தி என அழைக்கப்பட்ட கான் அப்துல் கஃபார் கான்னுடைய அமைப்பு. இதனை மாணவர்கள் புணர்நிர்மானம் செய்து பல்வேறு சமூகப் பிரச்சனைகள் மற்றும் சமூக நல பணிகளில் ஈடுபடுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #டெல்லி_முகாம். 21/02/2020
Tag: புதிய குடியுரிமை சட்ட திருத்தம்
பிப்_29!! கோவை வாழ்வுரிமை மாநாடு! தொடர் களஆய்வில் மஜக தலைமை நிர்வாகிகள்!!
பிப்.26., குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பபெற வலியுறுத்தி கோவையில் பிப்ரவரி 29ஆம் தேதி லட்சக்கணக்கான மக்கள் பங்கு கொள்ளும் வாழ்வுரிமை மாநாடு நடைபெறவுள்ளது. அதன் பணிகள் குறித்து கோவை கிணத்துகடவு பகுதி, மற்றும் கிளை, நிர்வாகிகளிடம் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண்ரஷீது Mcom. அவர்கள் கலந்தாய்வு நடத்தினார். அவருடன் அவைத்தலைவர் நாசர் உமரி, இணை பொதுச் செயலாளர் JS.ரிபாயி, ஆகியோரும் உடனிருந்தனர். இதில் வாழ்வுரிமை மாநாடு குறித்து கிணத்துகடவு பகுதியில் இதுவரை நடந்த பணிகள் குறித்தும், மக்களை திரட்டும், பணிகள் குறித்தும், ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் பகுதி செயலாளர் ஹாருண்ரஷீது, பொருளாளர் அபு, மற்றும் பகுதி, கிளை, நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பாரபட்ச குடியுரிமை சட்டத்திற்கெதிராக பிப் 29 கோவை கொடிசியா திடலில் லட்சக்கணக்கில் மக்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள். கிணத்துகடவு பகுதியிலிருந்து மட்டும் சுமார் 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் மாநாட்டு திடலை நோக்கி பொதுமக்கள் கலந்து கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது. தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவைமாநகர்மாவட்டம் 25.02.2020
டெல்லியில் கலவரத்தை கட்டுப்படுத்த உடனே இராணுவத்தை அனுப்புக! முதமிமுன்அன்சாரி MLA ஆவேசம்!!
பிப்.25, திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக தொடர் காத்திருப்பு போராட்டம் எழுச்சியாக நடைப்பெற்று வருகிறது. தஞ்சாவூர் 'ஷாகின் பாக்' போராட்ட களத்தில் பங்கேற்று உரையாற்றி விட்டு, கூத்தாநல்லூரில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களிடையே மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசியதாவது.. https://m.facebook.com/story.php?story_fbid=2297101697056259&id=700424783390633 குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிரான வெகுமக்கள் போராட்டம் அனலாக தகித்துக் கொண்டிருக்கிறது. 73 நாட்களை கடந்தும் நாடெங்கிலும் போராட்டம் ஜனநாயக வழியில் வலுத்து வருகிறது. மக்கள் மதங்களை கடந்து ஒருங்கிணைகிறார்கள்.இதை சிலர் ஜீரணிக்க முடியாமல் திணறுகிறார்கள். குறுக்கு வழியில் போராட்டங்களை ஒடுக்க திட்டமிடுகிறார்கள். அரசுக்கு கோரிக்கை வைத்து அமைதி வழியில் போராடுவதில் தவறில்லை என உச்ச நீதிமன்றமே சொல்லி இருக்கிறது. இதை ஏற்காமல் சங்பரிவார பயங்கரவாதிகள் , வன்முறைகளுக்கு திட்டமிடுகிறார்கள். டெல்லியில் நேற்று முதல், சங்பரிவார கும்பல் மோசமான வன்முறையை தொடங்கியிருக்கிறது. இது அவர்களின் வழக்கம். தாய்ப்பாலோடு விஷத்தையும் சேர்ந்து அருந்தியவர்களுக்கு, சகிப்புத்தன்மை இருக்காது. டெல்லியில் ஜாப்ராபாத், சாந்த் பாக் போன்ற இடங்களில் அமைதியாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களை , வலிய வந்து இப் பயங்கரவாத கும்பல் தாக்கியிருக்கிறது. இதற்கு பாஜக பிரமுகர்
தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஆலோசனைக்கூட்டம் மஜக பங்கேற்பு!!
பிப்.24., தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக வருகின்ற 26 அன்று குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடக்க உள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன்,பாண்டிச்சேரி முதல்வர் கிருஷ்ணசாமி,திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு தமிழக தலைவர்கள் பங்குபெறும் இந்த மாநாட்டு பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைப்பெற்றது. பேராசிரியர் அருணன், கோபண்ணா, தாவூத் மியாகான், உதயகுமார்,பஷீர் ஹாஜியார், சிக்கந்தர், இப்னு சவூத், கரீம் உள்ளிட்ட தமிழக மக்கள் ஒற்றுமை மேடையில் அங்கம் வகிக்கும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் மஜக துணைப் பொதுச் செயலாளர் தைமிய்யா அவர்கள் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார், இந்த கூட்டத்தில் மாநாட்டு பணிகள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வில் மஜக மாநில துணைச் செயலாளர் ஷமீம் அஹமது, மாநில இளைஞரணி செயலாளர் அஸாருதீன் ஆகியோர் உடனிருந்தனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சென்னை
டெல்லி ஷாஹின்பாக்கின் ஒழுங்குகளை பின்பற்றிப் போராடவேண்டும் : போராட்டக்களத்தில் முதமிமுன் அன்சாரி MLA பேச்சு!!
பிப்.24, கோவையில் 6 வது நாளாக குடியுரிமை கருப்புச் சட்டங்களுக்கு எதிராக காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது . இதில் பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் கூடியிருந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். சீமான், திருமுருகன் காந்தி, டாக்டர் KVS.ஹபீப் முஹம்மது உள்ளிட்டோர் அடுத்தடுத்து வருகை உரையாற்றினர். மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் அங்கு வருகை தந்து உரையாற்றியதாவது.. https://m.facebook.com/story.php?story_fbid=2294788540620908&id=700424783390633 நாங்கள் பிப்ரவரி 21 அன்று டெல்லியில் ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள், மாணவிகள் நடத்திய அமைதிப் பேரணியில் பங்கேற்றோம். அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி கட்டுக்கோப்புடன் அணி வகுத்தார்கள். வாகன ஓட்டிகள் அவர்களுக்கு வழிவிடும் வகையில் செல்கிறார்கள், பொதுமக்கள் சாலையோரங்களில் நின்று ஆதரவு அளிக்கிறார்கள். அந்த வீதிகள் எங்கும் போராட்ட முழக்க எழுத்துகளை வரைந்திருந்தார்கள். அதுபோல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடக்கும் ஷாஹின் பாக்குக்கும் சென்றோம் . அன்று 69 ஆவது நாளாக ஆண்களும், பெண்களும் கூடி நின்றார்கள். சராசரியாக எப்போதும் 10 ஆயிரம் பேர் அங்கேயே இருக்கிறார்கள். உணர்வும், எழுச்சியுமாக மக்கள் போராடுகிறார்கள். அங்கே இந்து, முஸ்லிம், சீக்கிய, கிறிஸ்தவ அடையாளங்கள் பேனரில் பெரிதாக வைக்கப்பட்டுள்ளது. காந்தி, அம்பேத்கர், நேதாஜி, அபுல்கலாம் ஆசாத், பகத்சிங் போன்ற தியாகிகளின் படங்கள் வைக்கப்பட்டு பொதுத்தன்மை முன்னிறுத்தப்படுகிறது. அங்கு