கொரோனா பாதிப்பு! மத்திய மாநில அரசுகள் மக்களுக்கு உதவ வேண்டும்! முதமிமுன்அன்சாரி MLA வேண்டுகோள்.!

உலகையே நிலைகுலைய வைத்திருக்கிறது கொரோனா வைரஸ் நோய்.

இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலக நாடுகள் நிவாரண உதவிகளையும், நிதி உதவிகளையும் வழங்கி வருகின்றன.

மக்கள் ஓரிடத்தில் குழுமக் கூடாது என்பதால், சிறு குறு தொழில்கள் உட்பட அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளன.

கூலித் தொழிலாளர்கள், கூலி விவசாயிகள், சிறு கடை வணிகர்கள், வாடகை கார் ஒட்டுனர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் ஆகியோர் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இதை உணர்ந்து கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசுகள் நிவாரண உதவிகளையும், நிதி உதவிகளையும் மக்களுக்கு அறிவித்துள்ளன.

இவற்றை கவனத்தில் கொண்டு, தமிழக அரசு இலவசமாக ரேஷன் பொருட்களை வழங்குவதுடன், ஒரு ரேஷன் அட்டைக்கு 5 ஆயிரம் ரூபாய் நிதி உதவியாகவும் வழங்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

இது எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியாத நிலையில், இதனை ஒழிக்க பொதுமக்களின் பேராதரவு அவசியமாகும்.

அப்படியெனில், வருவாய் இழப்பை சந்திக்கும் மக்களின் இன்னல்களை போக்குவது மத்திய – மாநில அரசுகளின் கடமையாகும்.

இவ்விஷயத்தில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தாராளமாக நிதி ஒதுக்கீடுகளை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA,
#பொதுச்செயலாளர்,
#மனிதநேயஜனநாயககட்சி,
23.03.2020

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*