டெல்லியில் கலவரத்தை கட்டுப்படுத்த உடனே இராணுவத்தை அனுப்புக! முதமிமுன்அன்சாரி MLA ஆவேசம்!!


பிப்.25,
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக தொடர் காத்திருப்பு போராட்டம் எழுச்சியாக நடைப்பெற்று வருகிறது.

தஞ்சாவூர் ‘ஷாகின் பாக்’ போராட்ட களத்தில் பங்கேற்று உரையாற்றி விட்டு, கூத்தாநல்லூரில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களிடையே மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசியதாவது..

https://m.facebook.com/story.php?story_fbid=2297101697056259&id=700424783390633

குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிரான வெகுமக்கள் போராட்டம் அனலாக தகித்துக் கொண்டிருக்கிறது. 73 நாட்களை கடந்தும் நாடெங்கிலும் போராட்டம் ஜனநாயக வழியில் வலுத்து வருகிறது.

மக்கள் மதங்களை கடந்து ஒருங்கிணைகிறார்கள்.இதை சிலர் ஜீரணிக்க முடியாமல் திணறுகிறார்கள்.

குறுக்கு வழியில் போராட்டங்களை ஒடுக்க திட்டமிடுகிறார்கள்.

அரசுக்கு கோரிக்கை வைத்து அமைதி வழியில் போராடுவதில் தவறில்லை என உச்ச நீதிமன்றமே சொல்லி இருக்கிறது.

இதை ஏற்காமல் சங்பரிவார பயங்கரவாதிகள் , வன்முறைகளுக்கு திட்டமிடுகிறார்கள்.

டெல்லியில் நேற்று முதல், சங்பரிவார கும்பல் மோசமான வன்முறையை தொடங்கியிருக்கிறது. இது அவர்களின் வழக்கம்.

தாய்ப்பாலோடு விஷத்தையும் சேர்ந்து அருந்தியவர்களுக்கு, சகிப்புத்தன்மை இருக்காது.

டெல்லியில் ஜாப்ராபாத், சாந்த் பாக் போன்ற இடங்களில் அமைதியாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களை , வலிய வந்து இப் பயங்கரவாத கும்பல் தாக்கியிருக்கிறது.

இதற்கு பாஜக பிரமுகர் கபில் மிஸ்ரா தான் பொறுப்பு. அவர்தான் ட்விட்டரில் ” 3 நாட்களுக்குள் அப்பகுதியில் போராட்டக்காரர்களை போலிஸ் அப்புறப்படுத்தாவிட்டால், போலீஸ் பேச்சை கேட்க மாட்டோம் ” என பதிவிட்டார்.

அதன்படியே வன்முறைகள் ஏவப்பட்டுள்ளது.

அந்த முகம் மூடிய கும்பலோடு டெல்லி போலீஸில் இருக்கும் சிலரும் சேர்த்துக் கொண்டு போராட்டக்காரர்களை தாக்கி, கலவரம் செய்துள்ளனர்.

பாபர் மசூதி டோமில் ஏறி சேதப்படுத்தியதைப் போல, டெல்லியில் பள்ளிவாசல் மினாராவில் ஏறி சேதப்படுத்தி பள்ளிவாசலை எரிக்க முயன்ற காரணாளி காட்சி நாட்டையே உலுக்குகிறது.

வீடுகளை தீ வைக்கிறார்கள். பொது சொத்துக்களை சேதப்படுத்துகிறார்கள்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் சங்பரிவார கும்பலால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளனர்.

பெண்களை அவர்கள் கற்பழித்துள்ளதாக வரும் செய்திகள் பதற வைக்கின்றன. நாகரீக சமூகத்திற்கு இது வெட்கக்கேடு.

இதுவரை 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் நாட்டுக்கு அவமானத்தை தேடித் தருபவை.

இப்படி வன்முறைகள் செய்வது அவர்களது கொள்கையாகும்.

இது தான் சங்பரிவாரங்களின் கோர முகமுமாகும்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவுக்கு வந்துள்ள நிலையில் , தலைநகர் டெல்லியில் பாஜக ஆதரவோடு நடைபெறும் கலவரங்கள் சர்வதேச ஊடகங்களால் காட்டப்படுகிறது.

இது நம் நாட்டின் கண்ணியம் மற்றும் நாகரீகத்திற்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாகும். நமது நாட்டின் பெயரை குட்டிச்சுவராக்கி விட்டார்கள்.

எனவே சங்பரிவாரங்களின் கலவரத்தை ஒடுக்க, உடனடியாக டெல்லிக்கு ராணுவத்தை அனுப்பி மைதியை நிலை நாட்ட வேண்டும். இது தான் இப்போதைக்கு தீர்வை கொடுக்கும்.

இப்போதைய அனைத்து கலவரங்களுக்கும், வன்முறைகளுக்கும் , உயிரிழப்புகளுக்கும் மோடியும்,அமித் ஷாவும் தான் பொறுப்பேற்க வேண்டும்.

அவர்களின் பிடிவாத போக்குகளால் தான் இவ்வளவு பிரச்சனைகளும் வெடித்திருக்கிறது.

பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உள்நாட்டு பிரச்சனையை சரிவர கையாளாததால் , இப்போது இது சர்வதேச பிரச்சனையாக மாறி வருகிறது.

ஐரோப்பிய நாடாளுமன்றமும், OIC கூட்டமைப்பும் இதை விவாதிக்கின்றன. அமெரிக்காவின் மத சுதந்திரங்களுக்கான அமைப்பு இதில் கருத்து கூறி , இந்திய அரசை கண்டித்திருக்கிறது.

இந்நிலையில் மக்களின் போராட்டங்களை மத்திய அரசு மதித்து, குடியுரிமை கறுப்பு சட்டங்களை உடனடியாக திரும்ப பெற்று , நாட்டில் அமைதியை ஏற்படுத்த வேண்டும்.

மக்கள் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். அமைதி வழியிலான போராட்டங்களை செம்மைப்படுத்த வேண்டும்.

இது அரசியல் சாசன சட்டத்தின் மரபுகளை, கொள்கைகளை காக்கும் இரண்டாவது சுதந்திர போராட்டமாகும்.

இதில் சமரசம் இல்லை. தொடர்ந்து ஜனநாயக முறையில் போராடுவோம்.

போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் போராட்டம் தொடரும்.

எல்லா மக்களையும் அரவணைத்து, அமைதி வழியில், சளைக்காமல் போராடுவோம்.

இறுதியில் ஃபாஸிஸம் மண்ணை கவ்வும். சர்வாதிகாரம் வீழும்.

ஜனநாயகமும், சமூகநீதியும், சகோதரத்துவமும் வெல்லும்.

இதில் மக்களே வெற்றி பெறுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மஜக மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக், பொருளாள் ஜம், ஜம் சாகுல், மற்றும் கூத்தாநல்லூர், பொதக்குடி, பூதமங்கலம், அத்திக்கடை, உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த மஜக நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

ஆண்களும், பெண்களும் திரண்டு எழுச்சி முழக்கங்களை எழுப்பியவாறு இருந்தனர்.

போராட்ட களத்தில் காந்தி, நேதாஜி, அபுல் கலாம் ஆசாத்,அம்பேத்கார், பெரியார், பசும்பொன் தேவர், தீரன் சின்னமலை போன்ற தலைவர்களின் படங்களும், பொன்மொழிகளும் பந்தல் எங்கும் வைக்கப்பட்டிருந்தது.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்.