You are here

“டெங்கு” நோய் முன் எச்சரிக்கை! மஜக தலைமையக வேண்டுகோள்!

image

image

தமிழகம் எங்கும் “டெங்கு” நோய் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

ஒரு அரசு மட்டுமே இதை முன்னின்று தீர்த்துவிட முடியாது. கட்சிகள், தன்னார்வ அமைப்புகள், பொதுமக்கள் எல்லோரும் இணைந்து மனிதாபிமானத்தோடு இம்முயற்சியில் பங்கேற்க வேண்டும்.

அந்த வகையில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், கடைவீதிகள், வழிப்பாட்டு தலங்கள் உள்ளிட்ட மக்கள் கூடுமிடங்களில் வினியோகிக்குமாறும், தேவைப்படும் இடங்களில் நிலவேம்பு கசாயம் கொடுக்கும் வேலைகளை செய்யுமாறும் அறிவுறுத்துகிறோம்.

மேலும், மஜகவின் சார்பில், நிர்வாகிகள் அரசு மருந்துவமனைக்கு விஜயம் செய்து நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறுமாறும், வாய்ப்பு இருந்தால் பிஸ்கெட்கள், பழங்களை வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,
M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
6.10.17.

Top