(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் வாழ்த்துச் செய்தி..)
உலகெங்கும் 200 கோடி மக்களால் கொண்டாடப்படும் ” ஈதுல் அல்ஹா ” எனும் தியாகத் திருநாள் வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறோம்.
நபி இப்ராகிம் (அலை…) அவர்கள் தவமிருந்து பெற்ற தனது அருமை புதல்வர் நபி இஸ்மாயில் (அலை..) அவர்களை தான் கண்ட இறை கணவின்படி, நரபலி கொடுக்க முனைந்தார் அப்போது அதை தடுத்துநிறுத்த ஒரு ஆட்டை பலியிட இறைவனிடமிருந்து ஆணை வந்தது.
அந்த நரபலியை தடுத்து மனிதம் காத்திட்ட நிகழ்வின் பின்னணியாலயே இப்பெருநாள் கொண்டாடப்படுகிறது. உலக அதிசயங்களில் அதிசயமாக போற்றப்படும் ஜம்ஜம் தண்ணீரின் வரலாறும் இதனையொட்டியே தொடங்கியது.
ஒவ்வொரு ஆண்டும் புனித மெக்காவில் உலக முஸ்லிம்கள் இத்திருநாளையோட்டி லட்சக்கணக்கில் குழுமி மனமுருகி பிரார்த்திக்கிறார்கள்.
தேசம், இனம், மொழி, சாதி வேறுபாடுகளை உடைத்திட்டு சகோதர, சகோதரிகளாக ஒன்றுகூடும் மானுட வசந்தமாக இந்நிகழ்வு போற்றப்படுகிறது.
இந்தியாவில் முஸ்லிம்கள் கொண்டாடும் இப்பண்டிகையில் சகோதர சமுதாய மக்களும் பங்கேற்று வாழ்த்துக்களை பரிமாறும் இனிய பண்பாடு தொடர்வது இப்பண்புகளுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது.
தியாகங்கள் வரலாறுகளை உருவாக்குகிறது. அதை நினைவு கூறும் இந்நாளில், உலகெங்கும் அமைதியும், நல்லிணக்கமும், மகிழ்ச்சியும் புத்துக்குழுங்க இறைவனிடம் பிரார்த்திப்போம்.
நம் தாய் திருநாட்டில் சகோதரத்துவமும், கூட்டு கலாச்சாரமும் மேலும் மேலும் வளர சபதம் ஏற்போம்.
அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மனமார்ந்த தியாக திருநாள் வாழ்த்துக்கள் மீண்டும் தெரிவித்துக் கொள்கிவதில் மகிழ்ச்சியடைகிறோம்.