
சென்னை.ஆக.30., சென்னை அண்ணா சாலை தாயார் சாஹிப் தெருவில் அமைந்திருக்கும் அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளிக்கு பதினொன்னு மற்றும் பனிரெண்டாம் (11 & 12) வகுப்புகளை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்களிடம் அப்பள்ளியின் நிர்வாகிகள் கடந்த சில தினங்கள் முன்பு தெரிவித்து இருந்தனர்.
அதை அடுத்து பள்ளிகல்வித்துறை அமைச்சரிடம் இந்த கோரிக்கை கொண்டு செல்லப்பட்டு அதை நிறைவேற்றப்பட்டது, தற்போது அந்த பள்ளியில் 11 & 12ம் வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் (PTA- Parents Teachers Association) தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் வெற்றிப்பெற்ற புதிய தலைவர் தமிஜுத்தீன், துணைத் தலைவர் பீர் முஹம்மது , பொருளாளர் அக்பர் மற்றும் நிர்வாகிகள் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA , மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது மற்றும் மாநிலச் செயலாளர் என்.ஏ.தைமிய்யா ஆகியோர்களை நேரில் சந்தித்து பள்ளியின் வளர்ச்சிக்காக அனைத்து வகையிலும் உதவி செய்த மனிதநேய ஜனநாயக கட்சிக்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK-IT-WING
தலைமையகம்.
சென்னை.
29.08.17