கோவை.ஜூலை.26., சிறைவாசி சகோ.அபுதாஹிர் சம்பந்தமாக தொடர்ந்து மஜக மாநில மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகள் அவர்சிகிச்சைகுறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறது
இந்நிலையில் அவர்வேறு ஒரு வார்டிற்கு மாற்றப்பட்டு அங்குஅவர் சித்ரவதைசெய்யப்படுவதாக
நேற்று வலைதளத்தில்
வதந்திபரவியது.
அதுகுறித்து அதன் உண்மைதன்மையை அறிந்துகொள்வதற்காக நேற்று 25.07.17 செவ்வாய்கிழமை காலை மஜக மாநிலதுணை
பொதுச் செயலாளர் AK.சுல்தான் அமீர், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR. பதுருதீன், மாவட்ட துணை செயலாளர் TMS. அப்பாஸ், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹீம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சம்சுதீன் ஆகியோர்
கோவை மத்தியசிறைக்கு சென்று சிறைத்துறை அதிகாரிகளை சந்தித்து பேசினர்.
பிறகு சிறைத்துறையின் அனுமதி பெற்று மருத்துவமனையில்
சிகிச்சை பெற்றுவரும்
சிறைவாசி சகோ அபுதாஹிர் அவர்களை சந்தித்து பேசினர்.
அப்போது தான் இருக்கக்கூடிய வார்டில் நலமாக இருப்பதாகவும் எவ்விதமான தொந்தரவும்
இல்லை என அபுதாஹிர் நிர்வாகிகளிடம் கூறினார்.
அவரிடம் மஜக நிர்வாகிகள் நலம் விசாரித்து விடைபெற்றனர். பிறகு மருத்துவமனை அதிகாரிகளை சந்தித்த மஜக நிர்வாகிகள் அபுதாஹிர் அவர்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்குமாறும், அவரது கண் அறுவைசிகிச்சை குறித்தும் மருத்துவர்களிடம்பேசினர்.
தொடர்ந்து அவரின் சிகிச்சை குறித்தும் அவரின் விடுதலை குறித்தும் மஜக மாநில கோவை மாவட்ட நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்துவருவது குறிப்பிடத்தக்கது
அவர் சிகிச்சை குறித்து எந்த தகவல் பரவினாலும் கோவை மாவட்ட மஜக நிர்வாகிகளை தொடர்புகொண்டு உறுதிபடுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அவர் பூரண உடல் நலம் பெற இறைவனிடம் பிரார்த்திக்கவும்
தகவல்:
மஜக தகவல் தொழில்நுட்ப அணி.
#MJK_IT_WING
கோவை மாநகர் மாவட்டம்
25.07.17