திண்டுக்கல்.ஏப்.03., ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும்.!!, டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளின் வாழ்வுரிமைக்கான போராட்டத்தை ஆதரித்தும்.!! கடந்த 31/03/2017 அன்று
மதுரை IOC (இந்தியன் ஆயில் கார்ப்ரேசன்) நிறுவனம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய செ.முத்துபாண்டியன் மருது மக்கள் இயக்கம், மே17 இயக்கம் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய அமைப்பினை சேர்ந்த 18 சகோதரர்களை மத்திய அரசின் தூண்டுதலின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
கைதிற்கு பின்பு 4 சட்ட கல்லூரி மாணவர்களை மட்டும் காவல் துறை பினையில் விடுவித்து மிதமுல்ல 14 சகோதரர்களை அன்று இரவு 09-மணியலவில் மதுரை மத்திய சிறையில் அடைத்து வைக்கப்பட்டனர்.
தொடர்ச்சியக அவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்ட காரணத்தால் 01/04/2017 அதிகாளை 04-மணியலவில்
14 சகோதரர்களை இரு பிரிவாக பிரித்து விருதுநகர் சிறைக்கு 7 சகோதரர்களையும் திண்டுக்கல் சிறைக்கு 7 சகோதரர்களையும் பிரித்து, திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைத்து வைத்ததில் 1 சகோதரர் மயங்கி விழுந்த நிலையில் அவர்கள் 7 சகோதரர்களையும் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமணை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை அறிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் நேற்று 02/04/2017 இரவு 09-மணியலவில் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா அவர்கள் தலைமையில் IT-WING மாவட்ட செயலாளர் M.அனஸ் முஸ்தபா மாவட்ட நிர்வாகிகள் உமர் அலி, மாணவர் இந்தியா நகர செயலாளர் M.தினோஷ் சக்திபாலன் இவர்களுடன் சென்று சம்மந்த பட்ட சகோதரர்களை நேரில் சந்தித்து உங்களின் போராட்டத்திற்கு மஜக சார்பில் ஆதரவு தருவதாகவும் தெரிவித்தோம்.
நீங்கள் அனைவரும் போராளிகள் நாங்கள் போராளிகளை இழக்க தயாகர இல்லை எனவும் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர் அதன் அடிப்படையில் நாளை நடக்க உள்ள பத்திரிகையாளர்கள் சந்திப்பிற்க்கு மஜக வரவேண்டும் என்றும் ஆலோசனை செய்து முடித்து கொள்வது எனவும் வாக்குறுதி அளித்தார்.
அவர்களும் தாங்கள் கைது செய்யப்பட்ட பின்பு நடந்த விசயங்களை பற்றி முழுமையாக கூறினார்கள்.
ஒரு சில கோரிக்கைகளும் வைத்துள்ளனர். அவைகளை மஜக பொது செயலாளரும் நாகை சட்ட மன்ற உறுப்பினருமான M.தமீமுன் அன்சாரி MLA அவர்களிடம் கொண்டு செல்வோம் என மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்ல வாக்குறுதி அளித்தார்.
அதனை தொடர்ந்து இன்று காலை நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு பின் மஜகவின் கோரிக்கையை ஏற்று இயக்க தோழர்கள் அனைவரும் தங்களது உண்ணாவிரதத்தை கைவிட்டனர்…
தகவல் :-
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
திண்டுக்கல் மாவட்டம்.
03.04.2017