மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று “சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி” கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளது.
போராட்டத்தின் ஆயத்த பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் செய்யது ரியாசுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக துணை பொதுச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜூதீன் மற்றும் மாநில துணை செயலாளர் நாகை முபாரக் ஆகியோர் கலந்து கொண்டனர்
இக்கூட்டத்தில் மாவட்டத்தின் சார்பாக முன்னெடுக்க வேண்டிய போராட்ட பரப்புரை பணிகள் குறித்தும், முற்றுகை போராட்டத்திற்கு 40 க்கும் மேற்பட்ட வாகனங்கள் திரளான மக்களை அழைத்து செல்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஷேக் மன்சூர், சாகுல் ஹமீது, மாவட்ட துணை செயலாளர் ஷேக் அகமதுல்லா மற்றும் நிர்வாகிகள் பகுருதீன், சுல்தான், பாரக், சதாம் முகம்மது, ஷெரிப், சாகுல், இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டனர்
#கோவையில்_திரள்வோம்
#நீதியை_வெல்வோம்
#ReleaseLongTermPrisoners
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKiTWING
#நாகை_மாவட்டம்
21.12.2021