கோவை போராட்ட களத்திற்கு வந்த வாலிபர் விபத்தில் காயம், மஜக தலைமை நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல்!!


பிப்.19.,

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக கோவை மாவட்ட அனைத்து கூட்டமைப்புகள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்பதற்காக பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சகோதரர் இருசக்கர வாகனத்தில் போராட்டத்திற்காக வரும்போது விபத்து ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரஷீது, இணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிபாயி, ஆகியோர் உடனடியாக கோவை அரசு மருத்துவ மனைக்கு சென்று பாதிக்கப்பட்ட சகோதரரை சந்தித்து அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

மேலும் அவர் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்நிகழ்வில் மாநில, கோவை மாவட்ட நிர்வாகிகள், உடன் இருந்தனர்.

தகவல்

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாவட்டம்
19.02.2020