மனிதநேய ஜனநாயக கட்சியின் ஐந்தாம் ஆண்டு தொடக்க நிகழ்வாக மத்திய பாரதிய ஜனதா அரசாங்கம் கொண்டு வந்திருக்கும் CAA, NRC, NPR கருப்பு சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கோவையில் வாழ்வுரிமை மாநாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்வுரிமை மாநாட்டிற்காக பொதுமக்களை திரட்டும் பணியை தமிழகம் முழுவதும் உள்ள மஜக தொண்டர்கள் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, அவர்கள் கோவையில் வாழ்வுரிமை மாநாடு நடைபெறும் மைதானத்தை பார்வையிட்டு மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இதில் துணைப் பொதுச் செயலாளர் சுல்தான் அமீர், உடனிருந்தார்.
இதில் மாவட்ட செயலாளர் M.H.அப்பாஸ்,மாவட்ட பொருளாளர் T.M.S. அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஏ.டி.ஆர். பதுருதீன், சிங்கை சுலைமான் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்
#கோவைவாழ்வுரிமைமாநாட்டு_குழு