கோவையில் MJTS மாவட்ட செயற்குழு கூட்டம்! மாநில செயலாளர் ஜாபர்அலி பங்கேற்பு!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அமைப்பான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் MJTS கோவை மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் அப்துல் சமது, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளர் ஷாஜகான், மாவட்ட பொருளாளர் ரியாஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் கோவை MH.ஜாபர் அலி, அவர்கள் கலந்து கொண்டு புதிய கிளைகள் உருவாக்குவது குறித்தும் , புதிய பாதை மீட்டர் ஆட்டோவின் வளர்ச்சி பணிகள் குறித்தும், நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் பயாஸ், மற்றும் புதிய பாதை மீட்டர் ஆட்டோ பிரிவு நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
12.10.2021