You are here

தஞ்சையில் மத நல்லிணக்க உறுதிமொழியேற்பு… மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!

காந்தியடிகளின் 183-வது பிறந்த தினத்தையொட்டி, இன்று தஞ்சாவூரில் மத நல்லிணக்க உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்றார்.

இதில் காங்கிரஸ் CPM, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை, மஜக, அகில இந்திய கிருத்தவ கூட்டமைப்பு, முஸ்லிம் லீக், MMMK, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

மஜக மாநில துணைச் செயலாளர் வல்லம் அகமது கபீர், மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார், மாவட்ட பொரு லாளர் M.அப்துல்லா, மாவட்ட துணைச் செயலாளர் சேட்டு (எ) ஹபிபுர் ரஹ்மான், மாநகர பொறுப்பாளர்கள் காமில், சாகுல், ஜாகீர் உள்ளிட்டவர்களும் இதில் பங்கேற்று உறுதி மொழி ஏற்றனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தஞ்சை_மாநகர்_மாவட்டம்
02.10.2021

Top