அரசியலில் விஷவாயுவை முறியடிக்க வேண்டும்.. மஜக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு!

நாகை மாவட்டம் ஆதலையூர் – ஏனங்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் 11 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

அரசு அறிவுறுத்தலின் படி மாலை 5.30 மணியளவில் எளிய முறையில் சாயுங்கால நிகழ்ச்சியாக நடந்தேறியது.

இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேசிய உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு..

மஜக ஆரம்பிக்கப்பட்டு 6 ஆண்டுகளில் இத்தோடு 11 வது ஆம்புலன்ஸை அர்ப்பணிக்கிறோம். ஓட்டு அரசியல், அரசியல் அதிகாரம், தேர்தல் நிலைபாடு ஆகியவற்றை கடந்து சேவை அரசியலை முன்னெடுக்கிறோம்.

எங்களிடம் உள்ள இளைஞர்களையும், மாணவர்களையும் வீண் உணர்ச்சிகளுக்கு பழக்காமல், அறிவு சார்ந்தவர்களாகவும், முதிர்ச்சி பெற்றவர்களாகவும் உருவாக்குகிறோம்.

மக்களுக்கு ஈடுபாட்டோடு சேவையாற்றும் எண்ணங்களை அவர்களிடம் ஊட்டுகிறோம்.

எங்கள் அரசியலின் மிகப் பெரும் சாதனையாக மத நல்லிணக்க சேவையை ஆற்றி வருகிறோம்.

அரசியலில் இப்போது விஷவாயு வீசத் தொடங்கியுள்ளது. அதை சமூக நல்லிணக்கத்தை வளர்ப்பதன் மூலம் தான் முறியடிக்க முடியும்.

நமது தமிழகம் திராவிடத்தாலும், தமிழ் தேசியத்தாலும் பக்குவப்படுத்தப்பட்ட பூமி. இங்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் மற்றும் தலித்துகளுக்கிடையே உள்ள உறவை நாம் தொடர்ந்து கட்டிக் காக்க வேண்டும்.

இந்த ஆம்புலன்ஸ் சேவை சாதி, மத, அரசியல் வேறுபாடுகளை கடந்தது. ஒரு பாஜக சகோதரர் அழைத்தாலும் உடனே சென்று உதவுவோம். (பலத்த கைத்தட்டல்) இது தான் உண்மையான மனிதநேயம்.

இத்தகைய ஆம்புலன்ஸ் சேவைகளை நாங்கள் அடுத்தடுத்து பல இடங்களில் செயல்படுத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிறகு ஆம்புலன்ஸை அர்ப்பணிக்க, ஏனங்குடி, ஆதலையூர், பாக்கம் – கோட்டூர், வடகரை ஜமாத் நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து ஆம்புலன்ஸ் நிறுத்துமிடத்தை அவர் திறந்து வைக்க, டியுசன் சென்டரை மாநில செயலாளர் நாச்சிக்குளம். தாஜூதீன் திறந்து வைத்தார்.

ஆம்புலன்ஸ் வாங்கிட பெரிதும் பாடுபட்ட ஏனங்குடி இஸ்லாமிய கலாச்சார பேரவைக்கு பொதுச் செயலாளர் நன்றி கூறினார்.

இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் நாகை. முபாரக், மாவட்ட செயலாளர் ரியாஸ், மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லா, தகவல் தொழில் நுட்ப அணி மாநில பொருளாளர் ஹமீது ஜெகபர், மாவட்ட துணை செயலாளர் முன்சி.யூசுப்தீன், கண்ணுவாப்பா, அஹமதுல்லாஹ், ஆதலையூர் ஊராட்சி மன்ற தலைவர் தென்மதி சந்திசேகர், திருக்கண்ணபுரம் உதவி ஆய்வாளர் S.K.ரவி, மருத்துவ அலுவலர்கள் மோகன்தாஸ், முபாரக் அலி, சுகாதார ஆய்வாளர்கள் மனோகரன், ஆய்வாளர் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள், ஊர் பொதுமக்கள், திரளாக கலந்து கொண்டனர்.

கொரோனாவில் முன்களப் பணியாளராக பணியாற்றிய அனைவருக்கும் மஜகவின் சார்பில் நினைவு பரிசுகளும், பாராட்டுகளும் வழங்கப்பட்டன. இறுதியாக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட துணைச் செயலாளர் நிசாத் நன்றி கூற நிகழ்ச்சி நிறைவுற்றது.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#நாகை_மாவட்டம்.