ஆக்ஸிஜன் பணிக்கு ஒரு கோடி கொடுத்த கொடையாளர் அண்ணன் யஹ்யா…! மணவிழாவில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி உரை…

பிரபல அழகு மலர் உற்பத்தி நிறுவனமான ப்ளாக் துலிப் நிறுவனர் ஹாஜி M.முகம்மது யஹ்யா அவர்களின் மகள் சமீரா மணமகளுக்கும், லக்கி குழுமத்தை சேர்ந்த ஹாஜி சுலைமான் பாட்ஷா அவர்களின் மகன் அகமது சல்மான் மணமகனுக்கும் இன்று அய்யம்பேட்டை- சக்கராப்பள்ளி ஜாமியா பள்ளியில் திருமணம் நடைபெற்றது.

இதில் பங்கேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வாழ்த்தி பேசியதாவது..

லக்கி குடும்பமும், ப்ளாக் துலிப் குடும்பமும் சம்மந்திகளாக மாறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இரு தரப்பும் பிறருக்கு உதவக் கூடிய குடும்பங்களாகும்.

குவைத்தில் உள்ள லக்கி குழும அச்சகத்திற்கு சென்றிருக்கிறேன். தமிழில் நூல்கள் அச்சடித்து வளைகுடா முழுக்க தமிழ் மணம் பரப்புவதை பார்த்தேன்.

அதுபோல் துபையில் செயல்படும் அண்ணன் யஹ்யா அவர்களின் ‘ப்ளாக் துலிப்’ நிறுவனம் உலக அளவில் மலர் உற்பத்தி வணிகத்தில் முதல் 5 இடங்களில் ஒன்று என்பது தமிழர்களுக்கு பெருமை சேர்க்க கூடியதாகும்.

அவர் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலரும் கூட. கென்யாவில் உள்ள அவரது மலர் உற்பத்தி பண்ணையை சூழல் பாதுகாப்பு மண்டலமாக வைத்திருக்கிறார்.

சமீபத்தில் கொரோனா இரண்டாவது அலையில் நம் நாட்டில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு வந்தது.

https://m.facebook.com/story.php?story_fbid=3572693219497094&id=700424783390633

தூய காற்று இலவசமாக வந்த போது அதை நாம் மதிக்கவில்லை. மரங்களை நாம் கொண்டாடவில்லை. அதன் விளைவு ஆக்ஸிஜனை விலை கொடுத்து பயன்படுத்த வேண்டிய நிலை உருவானது.

அந்த நேரத்தில் அண்ணன் யஹ்யா அவர்கள், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒரு கோடி ரூபாயை கொடுத்து ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய உதவியதை தமிழகமே பாராட்டியது.

இன்று பொது சேவையில் ஈடுபடும் இரண்டு குடும்பங்கள் திருமண சம்பந்தம் மூலம் இணைந்திருப்பதும், கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு நாமெல்லாம் அதில் பங்கேற்றிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த மணமக்கள் பல்லாண்டு வாழ நபி வழியில் வாழ்த்தி அமர்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் அமைச்சர் ரகுபதி, பேரா.காதர் மொகைதீன், காஜா மொய்தீன் ஹஜ்ரத், ஈரோடு உமர் பாரூக் தாவூதி ஹஜ்ரத், பேரா.ஜவாஹிருல்லா MLA, நவாஸ் கனி MP, துரை.சந்திரசேகரன் MLA, அப்துல் ரஹ்மான் Ex,MP, தமிழக அரசின் பொருளாதார ஆலோசகர் ஜெயரஞ்சன், ராயல் டைமண்ட் குழுமத்தை சேர்த்த அபுதாபி சாகுல் ஹமீது, ஆரிபா (எ ) சுல்தானுல் ஆரிபின், தாஹா, ஜெய்லானி, ஜாஹீர் உசேன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், மஜக சார்பு அமைப்பான MJVS-ன் மாநில செயலாளர் யூசுப் ராஜா, தஞ்சை மாநகர மாவட்ட செயலாளர் அகமது கபீர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

முன்னதாக IKP தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் அல்லா பக்ஸ் அவர்களின் மகள் திருமணத்தையொட்டி பாபுராஜபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கும், உடல் நலன் குன்றி குணம் பெற்று வரும், தஞ்சை வடக்கு மாவட்ட மஜக பொருளாளர் நிஜாம் அவர்களின் இல்லத்திற்கும் சென்று பொதுச் செயலாளர் அவர்கள் சந்தித்து விட்டு வந்தார்.

இந்நிகழ்வுகளில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் அப்துல்லா உள்ளிட்ட நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKITWING
#தஞ்சை_வடக்கு_மாவட்டம்
11.07.2021